என்னப்பூ…. ரத்தகளரியா இருக்குதா…..? ஆமா, சில விஷயங்கள் கூட அப்படித்தான்……ஒரு தலைப் பட்சமா நடக்கற விஷயத்தப் பாக்கும்போது அப்டித்தான் இருக்கும்….
மாமியார் ஒடச்சா மண்கொடம் …மருமக ஒடச்சா பொன்கொடம்னு ஒரு பழமொழிசொல்லுவாங்கல்ல அதேதான்….வாங்க என்னன்னு பாக்கலாம்…
நல்ல கூட்டமான பஸ்ஸுல ஏறிட்டு டிக்கட் எடுக்கும்போது, சில நேரம் கண்டக்டர் கிட்டசில்லறை இருக்காது….அப்றம் தர்ரேன்னு சொல்லுவாரு….கிட்டத்துல போறவங்களுக்கானஸ்டாப்பிங் அதுக்குள்ளாறவே வந்துடும்….அதனால இறங்கறவங்க சில்லறைய வாங்காமதிட்டிட்டு….பொலம்பிட்டே போவாங்க….
இன்னும் சில கேஸ்ல, சில்லறை கொடுக்காத கண்டக்டர் கிட்ட நினவுபடுத்திக் கேட்டுவாங்கிடுவாங்க…. சில பேர் குடுக்கறதுக்குள்ள வசை பாட ஆரம்பிச்சுடுவாங்க…..
இதெல்லாம் சிட்டி பஸ் மட்டுமில்ல….ஊர்ப்புறங்கள்ளயும் பாக்கற சீன்தான்….
ஸ்டாப்பிங்ல நிக்காம போற பஸ்ஸு போகும்போது…., சடன் பிரேக் அடிச்சு உள்ளேஇருக்கிறவங்க மண்டைய முட்டிக்கும்போது…., ஸ்டாப்பிங் தாண்டி கொஞ்ச தூரம்தள்ளிப்போயி பஸ் நிக்கும்போது…., மீதிச் சில்லறைப் பிரச்சினைவரும்போது….சாப்பாட்டுக்கு ரொம்ப நேரம் பஸ்ஸப் போட்டுவைக்கும்போது….இப்படிஎத்தனையோ விஷயங்கள்…., அப்பல்லாம் மனசு நிறையவரைக்கும் சந்தோஷமா திட்டறசவுண்ட் கேக்கும்… சரிதான்….இதுக்காக பொங்கி எழறது தப்பில்ல….ஆனா, போன வாரம்வேற ஒரு சம்பவம் நடந்துச்சு….அதுவும் நடக்கறதுதான்….
சென்னை சிட்டி பஸ்ஸுல ஒரு ஸ்டாப்பிங்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கறதுக்கு அஞ்சுபேர் ஏறினாங்கப்பூ…. பஸ் கண்டக்டரப் பாக்கறதுக்கு ரிடையர் ஆறதுக்கு சில வருஷங்கள்இருக்கிற மாதிரி இருந்தாரு..….வயசானவரு….காயற வெயில்ல தொண்ட தண்ணிவத்திப்போற அளவுக்கு டிக்கெட் எடுக்கச் சொல்லி கத்திட்டு இருந்தாரு….
இந்த க்ரூப்புல அஞ்சு பேருக்கு நாலு டிக்கெட்தான் வாங்குனாங்க….அதுலயும் ரெண்டு ரூபா கம்மி….கண்டக்டர் அதக் கண்டுபுடிச்சு டென்ஷனாயி கத்திட்டே இருந்தாரு…”ரெண்டுரூபா குடுமா…ரெண்டு ரூபா குடுமா”ன்னு. அந்தம்மா ஏதோ பர்சிலருந்து தேடி எடுக்கறாமாதிரியே சீன் போட்டுட்டு இருக்க, அடுத்த ஸ்டாப்பிங்…அதாவது, இறங்கவேண்டியஸ்டாப்பிங் நெருங்கிடுச்சு….செக்கர்ஸ் வந்தா மாட்டணும்னு வேற சொல்லி சொல்லிகண்டக்டர் உச்ச ஸ்தாயியில் விடாம துதி பாட…..ஆனாலும், அவங்க அசரலையே…..
அவரைப் பாக்கறவங்களுக்கு கண்ணுல தண்ணி வந்துடும்….அந்த அளவு கழுத்து நரம்புபுடைக்க அவரும் எவ்வளவோ சொல்லிட்டு இருக்க அதுக்குள்ள ஸ்டாப்பிங் வந்ததும் அந்தக்கும்பல் இறங்கிச்சு. அப்போ பார்த்து சிக்னல் விழ, கண்டக்டர் அப்பவும் அவங்க கீழேஇறங்கி காசு தருவாங்களோன்னு பாக்க…கடேசி வரைக்கும், பர்சுல காசு தேடற சீன் தான்போச்சே தவிர, காசு ஒண்ணும் வரல….
கண்டக்டர் பயணிக்கு மீதி சில்லறை தரலன்னும்போது…..” “இந்த மாதிரி ஏமாத்தறதேபொழப்பு…இந்த மாதிரி மாசம் பூராவும், எல்லா ட்ரிப்புலயும் நாலு பேருக்கு செஞ்சாபோதும்….” அப்டின்னு சொல்லும்போது அது ரத்தம்….அதே பஸ்ஸுல போற பயணி இதைச்செஞ்சா தக்காளி சட்னியா….?
அவரோட வேலைக்காக இப்படி டென்ஷனாயி கத்தறதால அவருக்கு ஒடம்பு கெடாதா…..? இல்ல…இதே போல ட்ரிப்புக்கு ரெண்டு பேர் காசுதராம போனா, அவரே எல்லாத்தையும் ஈடுசெய்யமுடியுமா…?
சரி விடுங்கப்பூ…….அவரு என்ன சொன்னாரு தெரியுமா…? காசு கூட பரவாயில்ல…ஆறவயசுக்கு செக்கர் கிட்ட மாட்டினா அசிங்கமாயிடும் னு தன்மானத்துக்குத்தான் பயந்தாரு….
எல்லா இடத்துலயும் வசதி வாய்ப்பு எதிர்பாக்கற நாம, நூறு, இருநூறு, ஐநூறு ரூபாயநீட்டறது, சுத்தமா சில்லறைக்காசே இல்லாம போறது…, சிலநேரம் கண்டக்டர் “ஒரு ரூபாஇருக்குதா….?ரெண்டு ரூபா இருக்குதா” ன்னு கேக்கும்போது உதட்டப்பிதுக்கறது….இதெல்லாம் தேவையில்லாத டென்ஷன்தான்… பதினோரு ரூபா டிக்கெட்டுக்குஇருவது ரூபா குடுத்தா அவரு ஒம்போது ரூபா சில்லறை தரணும்…அதைவிட நாமளே பத்துரூபா நோட்டையும் ஒரு ரூபா காயினையும் குடுத்துட்டா வேலை மிச்சம்….அவருக்கும் சரியானகாசு போயிரும்…நமக்கும் அவரு பாக்கி சில்லறை குடுக்கலைன்ற பிரச்சினைஇருக்காது…..இதுபோல முடிஞ்சுபோன பஸ் பாஸோட ஏறறது….” ஏம்மா?”ன்னு கேட்டாபாக்கவே இல்ல…இப்பத்தான் பாத்தேன்றது…..இதெல்லாம் தேவையா..?
அந்த வயசான கண்டக்டர் கண்ணுலயே இருந்தாரு….அந்த ரெண்டு ரூபாய அன்னைக்கு அவர்குடுத்திருப்பாரு….ஆனா, அந்த நேரம் அவர் டென்ஷனாயி கத்திட்டிருந்ததால ஏற்படறபாதிப்பு…. ? இது போல நாள் பூராவும் ஒவ்வொரு ட்ரிப்புலயும் கத்தி…வாரம் முழுசும்…மாசம்முழுசும் …வருஷம் முழுசும் கத்திட்டு இருந்தா…?
யாருக்கு வந்தாலும் ரத்தம்தானப்பூ…வழக்கமா போற இடம்தான்னா.. டிக்கெட் காசுஎவ்ளோன்னு தெரிஞ்சிருந்தா, சரியான சில்லறையையோ அப்படி இல்லன்னா, கொறஞ்சபட்சம்….சில சில்லறை நோட்டுக்களையும் சில சில்லறைக்காசுகளையும்வச்சிக்கிட்டா…இது மாதிரி சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்…. சரி, அடுத்த வாரம்பாக்கலாம்….
Leave a comment
Upload