தொடர்கள்
அரசியல்
முதல் குடிமகள் –ஆர்.ராஜேஷ் கன்னா

20220523184641503.jpg

இந்தியாவின் அடுத்த 15 வது ஜனாதிபதி குடிமகனா ? குடிமகளா? என்ற கட்டுரையை விகடகவியில் பிரசுரித்து இருந்தோம்.

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற பில்லியன் டாலர் கேள்விக்கு இப்போது கிட்டதட்ட விடை தெரிந்து விட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பெண் வேட்பாளர் திரௌபதி முர்மு களத்தில் இறங்கியுள்ளார்.

ஒட்டு மொத்த எதிர்கட்சிகள் பலரை ஜனாதிபதி பொது வேட்பாளர் யாரை நிறுத்துவது என ஆலோசித்து கடைசியில் தங்களது வேட்பாளராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹாவை களத்தில் இறக்கியுள்ளது.

20220523184816557.jpeg

பிஜேபி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் 64 வயதாகும் திரௌபதி முர்மு : டிசா மாநிலம் ,மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பாய்டாபோசி என்ற கிராமத்தில்1958 ஆண்டு ஜுன் 20 தேதி பிறந்தார்.இந்தியா சுதந்திரம் பெற்றபின் பிறந்தவர் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்ற பெருமை அடைகிறார்.இவரது தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு. இவர் விவசாய தொழில் பார்த்து வந்தார்.சந்தால் என்ற பழங்குடி இனத்தினை சேர்ந்தவர். : டிசா மாநிலத்தில் அதிக அளவில் இந்த சமுகத்தினை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

திரௌபதி முர்மு டிசா மாநில புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். திரௌபதி முர்மு தனது இளம் வயதிலேயே தனது பெற்றோர்கள் பார்த்து வைத்த வங்கியில் பணியாற்றும் மாப்பிள்ளை ஷியாம் சரண் முர்மு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

20220523184849558.jpeg

திரௌபதி முர்மு படிப்பதிலும் , நூல் ஆடைகளை ஊசி கொண்டு பின்னுவதில் அதிக ஆர்வம் உள்ளவர். இவர் டிசா மாநில அரசு பாசனதுறை மற்றும் மின்சார துறையில் ஜுனியர் அசிஸ்டெண்ட்டாக பணிக்கு சேர்ந்து சிறிது காலம் வேலை பார்த்து பின்னர் ராஜினாமா செய்துவிட்டார்.அதன்பின் சிறிது காலம் ராய்ரங்பூர் இருக்கும் அரபிந்தோ ரிசார்ச் அண்ட் இண்டர்கல் கல்லூரியில் கவுரவ துணை விரிவுரையாளராக மூன்றாண்டுகள் பணியாற்றினார். தனது பிள்ளைகளை பார்த்து கொள்ளவே தனது பணியினை துறந்தவர்.

அதன்பின் திரௌபதி முர்மு அரசியலில் நுழைந்து பிஜேபி கட்சியில் சேர்ந்தார்.ராய்ரங்பூர் என்ற பழங்குடி அதிகம் வாழம் பகுதியில் கவுன்சிலராக தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.அதே ஆண்டு துணை சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே ஆண்டு மாநில எஸ்.டி மோர்சா பி ஜேபி கட்சியின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2000 ஆண்டில்,திரௌபதி முர்மு டிசா மாநில ராய்ரங்பூர் தொகுதியில் பிஜேபி கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டு எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். அப்போது போக்குவரத்து , காமர்ஸ் மற்றும் மீன்வளத்துறை தனித்துறை அமைச்சாரானர். மீண்டும் 2004 ஆண்டு மீண்டும் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார்.2007 ஆண்டு நிகன்ந்தா விருதினை சிறந்த எம்.எல்.ஏவாக பணியாற்றியதற்காக இவருக்கு டிசா சட்டமன்ற விருது அளித்து கவுரவித்தது.

2022052318524831.jpg

என்னதான் அரசியல் வானில் மின்னினாலும் திரௌபதி முர்மு வாழ்க்கையில் விதி விளையாட தொடங்கியது. தனது ஆசை மகன் 2009 ஆண்டில் விபத்து ஒன்றில் அகால மரணமடைந்தார்.அடுத்து அவர் கணவர் இறந்துவிட்டார். இந்த சோக வடுக்கள் ஆறுவதற்குள் தனது இரண்டாவது மகன் 2013 ஆண்டு தீடீரென இறந்துவிட்டார். தானும் தனது மகளும் மட்டும் உயிருடன் இருப்பதை உணர்ந்த திரௌபதி முர்மு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வேதனைப்பட்டார்.இதனால் பொதுமக்கள் சேவையில் ஆர்வம் காட்டாமல் சுணக்கமாக இருந்தார். அப்போது பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் இணைந்து தனது மனநிலையை தியானம் செய்து சமன் செய்து கொண்டு மீண்டும் அரசியலில் ஈடுபட்டார்.

20220523185219901.jpg

திரௌபதி முர்முவின் ஒரே மகள் இதிஸ்ரீ முர்மு தற்போது புவனேஸ்வர் யுகோவங்கியில் பணியாற்றி வருகிறார்.

20220523190113597.jpg

திரௌபதி முர்மு தனது கணவருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தினை பள்ளிக்கு தானமாக கொடுத்தவர் அதில் தனது இறந்த கணவர், மகன்கள் சிலைகளை நிறுவி உள்ளார்.

2015 ஆண்டு,முதல் பழங்குடி இனத்தவரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் கவர்னரானார் என்ற பெருமைக்கு சொந்தகாரரானர்.முழுதாக ஐந்தாண்டுகள் ஜார்கண்ட கவர்னராக பணியாற்றிய திரௌபதி முர்மு . தனது அதிகாரத்தினை எப்போதும் தவறாக பயன்படுத்த மாட்டார் என்ற நற்பெயர் இருந்ததால் இவரை பிரதமர் மோடி இவர் மீது தனி மரியாதை வைத்து இருந்தார்.

அதே நேரத்தில் திரௌபதி முர்மு ஜார்கண்ட மாநிலத்தில் கவர்னராக பணியாற்றிய போது பழங்குடி இனத்தவருக்கு எதிராக குற்ற நிகழ்வு நடந்து அது சரிவர விசாரிக்கப்படாமல் இருந்தால் உடன் மாநில காவல்துறை டிஜிபிக்கு தகவல் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க செய்வார்.

திரௌபதி முர்மு தனது கண்களை ராஞ்சியில் இருக்கும் கஷ்யப் மெமோரியல் கண்மருத்துவமனைக்கு தானமாக வழங்கி பதிவு செய்து கொண்டார்.

திரௌபதி முர்மு தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் 1 கோடி 75 லட்சம் என கணக்கு காட்டியுள்ளார் என்ற புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

பிஜேபி தலைவர் நட்டா தன்னை குடியரசு தலைவராக அறிவித்த அந்த கணம் ..எனக்கு ஆச்சரியமாக இருந்தது, என்னால் நம்ப முடியவில்லை. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு என்ன அதிகாரங்கள் இருந்தாலும், நான் அதற்கேற்ப செயல்படுவேன் என்று ஆனந்த கண்ணீர் பொங்க திரௌபதி முர்மு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குடியரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் அடுத்த சில மணிநேரங்களில் திரௌபதி முர்மு Z கேட்டகிரி பாதுகாப்பு படையினர் வந்து பாதுகாக்க தொடங்கி விட்டனர். திரௌபதி முர்மு தனது ஆஸ்தான ராய்ரங்க்பூரில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று நந்தியின் காதில் பேசி கோயிலின் முகப்பில் உள்ள தரையினை தென்னந் துடைப்பம் கொண்டு தானே பெருக்கி கூட்டி சுத்தம் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

திரௌபதி முர்மு பழங்குடி இனத்தில் முதலாவதாகவும் , இந்திய வரலாற்றில் இரண்டாவது பெண் ஜனாதிபதியாக வெற்றி பெற்று நாட்டுக்கு சேவையாற்றுவார் என்று இப்போதே அவரது வெற்றி பற்றி டெல்லி வட்டாரங்களில் ஹாட்- டாக் காக உள்ளது.!