தொடர்கள்
அரசியல்
நியூஸ் நியூஸ் நியூஸ் --பொடியன்

20220524154822720.jpg

ராகுல் காந்தியின் 50 மணி நேரம்

ராகுல்காந்தி இது வரை அமலாக்கத்துறையின் விசாரணைக்காக 50 மணி நேரம் அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். இந்த அனுபவத்தை அவர் நிர்வாகிகளுடன், கட்சித் தொண்டர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நான் ஒரு சிறிய இருட்டு அறையில் அமர வைக்கப்பட்டேன். மூன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் என்னை விசாரித்தார்கள். சிறிது நேரம் என்னை உட்கார வைத்துவிட்டு வெளியே போய் மேலும் அடுத்து என்ன கேள்வி கேட்கலாம் என்று யாரிடமும் கேட்டு விட்டு வருவார்கள். நான் நீண்ட நேரம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன் எழுந்திருக்க வெளியே போகவில்லை. கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்னேன். நான் பயப்படவில்லை காரணம் எனக்கு ஆதரவாக அந்த அறையில் கட்சித் தொண்டர்கள் இருப்பது போல் நான் உணர்ந்தேன். நான் பயப்படாமல் இருந்ததற்கு அது தான் காரணம்.அதிகாரிகள் ஆச்சரியமாக எப்படி இவ்வளவு எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறீர்கள். உங்களுக்கு கோபம் வராதா என்று கேட்டார்கள் நான் எதற்கு அவர்களிடம் உண்மை சொல்ல வேண்டும். நான் விபாசன பயிற்சி செய்கிறேன் அதனால் என்னால் அமைதியாக உட்கார முடிகிறது என்று சுருக்கமாக அவர்களிடம் சொல்லி முடித்தேன் என்றார் ராகுல் காந்தி.

ராமர் கோயில் நன்கொடை திரும்பி வந்த காசோலை

20220524155017566.jpg

அயோத்தி ராமர் கோயில் கட்ட நன்கொடை தாருங்கள் என்று ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரா டிரஸ்ட் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு பொதுமக்கள் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறார்கள். தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூட ராமர் கோயில் கட்ட 11000 நன்கொடை அளித்திருக்கிறார் . பல தொழிலதிபர்கள் நன்கொடை அளித்திருக்கிறார்கள் சிலர் பொருளாக சிலர் தங்க நகை வெள்ளிப் பாத்திரங்கள் இப்படி தொடர்ந்து நன்கொடைகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி விஸ்வ இந்து பரிஷத் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் ராமர் கோயில் கட்ட 3400 கோடி ரூபாய் இதுவரை நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் 74 பேர் ஒரு கோடிக்கும் அதிகமாக நன்கொடை தந்தவர்கள் 127 பேர்கள். 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை நன்கொடை தந்தவர்கள் 123 பேர்கள். 25 முதல் 50 லட்சம் நன்கொடை தந்தவர்கள் இதுதவிர 10 லட்சம் ஒரு லட்சம் என்று நன்கொடைகள் வந்து வண்ணம் இருக்கின்றன. இதில் இது வரை 22 கோடி மதிப்புள்ள காசோலைகள் பணமில்லை என்று திரும்பி வந்து இருக்கின்றது. இந்த தகவலையும் சொல்லியிருக்கிறது. அந்த அறிக்கையில் விசுவ இந்து பரிஷத்.

கோடிக்கணக்கில் பணம் ஆகும் மாட்டுச்சாணம்,

20220524155143562.jpg

இப்போது மேல்நாட்டு கவனம் இயற்கை உணவு இயற்கை விவசாயம் என்று திரும்பி விட்டது. குவைத் நாடு எப்போதும் மேலைநாட்டு நாகரிகத்தில் மோகம் கொண்ட ஒரு நாடு தற்போது அந்த நாடும் இயற்கை விவசாயத்தில் இறங்கி இருக்கிறது எல்லாம் மேலை நாடு பார்த்து தான் இதற்காக ராஜஸ்தானில் உள்ள ஒரு நிறுவனத்திடம் மாட்டு சாணம் இறக்குமதி செய்ய ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. முதல் கட்டமாக 1.92 லட்சம் கிலோ மாட்டு சாணம் ராஜஸ்தானிலிருந்து குவைத்திற்கு போயிருக்கிறது.

கோசாலை நடத்தி வரும் அந்த நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு சுங்கத்துறை மேற்பார்வையில் மாட்டு சாணத்தை உருளையில் அடைத்து அனுப்பி வைக்கிறார்கள். மாட்டு சாணத்தை உரமாக பயன்படுத்துவதால் பேரிச்சம் விளைச்சல் அதிகரித்துள்ளது தரம் உயர்ந்துள்ளது என்கிறார்கள். குவைத் விவசாயிகள். ஏற்கனவே இந்தியாவில் இருந்து அமெரிக்கா மாலத்தீவு மலேசியா ஆகிய நாடுகளுக்கு மாட்டு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2020 - 21 ல் 27,155 கோடி ரூபாய்க்கு மாட்டு சாணம் மற்றும் இயற்கை உரங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப் பட்டதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

எனவே மாட்டு சாணத்தை இனிமேல் மட்டமாக யாரும் பேசாதீர்கள்.