பத்து வருடங்களில் பிரச்சனையில்லாமல் வெளிவந்த திரைப்படம் விக்ரம் தான் கமல்ஹாசன்.
ஆளும் கட்சியோடு கூட்டணி வச்சிருக்கீங்களா அப்புறம் எப்படி பிரச்சனை வரும்.
உலகம் உள்ள வரை காங்கிரஸ் இருக்கும் ஈ.வி. கே. எஸ்.இளங்கோவன்
ஆமா இருக்கும் ஒரு ஓரமா.
வடக்கு டெல்டா மாவட்டத்தில் சிறப்பு கல்வி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ்.
சிறப்பு கல்வி திட்டம் என டாக்டர் சொல்வது ஆல் பாஸ் திட்டம் தானே.
உண்மை தெரியாமல் பிரதமருக்கு கடிதம் எழுதுவதா? தமிழக அண்ணாமலை கேள்வி
நீங்க உண்மை தெரியாம ஊழல் குற்றச்சாட்டை சொல்றீங்களே அது போல்தான்
அக்னி திட்டம் உலகுக்கு வழிகாட்டும் ஆளுநர்
அக்னி திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
சசிகலா இணைப்பு என்பது தேச விரோத கருத்தல்ல ஓ.பன்னீர்செல்வம்
அது கட்சி விரோத கருத்து என்று அண்ணன் ஜெயக்குமார் சொல்றாரு
அக்னிபாத் திட்டம் மூலம் பாரதிய ஜனதா ஆயுதப்படை உருவாக்க முயற்சி மம்தா பானர்ஜி.
நல்லா இருக்கே இந்த ஐடியா என்கிறார் அமித்ஷா
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கிறிஸ்தவரை நிற்க வைக்க வேண்டும் திருமாவளவன்
அப்போ உங்க ஓட்டு யஷ்வந்த் சின்காக்கு இல்லையா
அதிமுகவில் சர்வாதிகாரம் அராஜகம் நிலவுகிறது ஓ பி எஸ்
அண்ணே கட்சியோட ஒருங்கிணைப்பாளர் நீங்கதானே
மேகதாது அணை கட்ட கர்நாடகாவின் விண்ணப்பம் நிராகரிப்பு மேலாண்மை கூட்டம் தள்ளிவைப்பு
ஆமா ஜனாதிபதி தேர்தல் எல்லாம் வருது அப்புறம் பார்க்கலாம்
மோசடி வழக்கில் தேடப்பட்டு வருபவருக்கு பாரதிய ஜனதாவில் முக்கிய பொறுப்பு
ஆளுங்கட்சியில் அடைக்கலம்ன்னு சொல்லுங்க
அண்ணாமலை பேப்பரில் தொலைக்காட்சி தன் பெயர் வரவேண்டும் என்பதற்கு ஏதோ சொல்கிறார் முத்தரசன்
ஓசியில் விளம்பரம் என்றால் யார்தான் பேசமாட்டார்கள்.
Leave a comment
Upload