தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

அதாங்க கிப்ட்

20220524164037148.jpg

விக்ரம் படத்தில் வந்து போன சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாக தந்தார் கமல்ஹாசன் இயக்குனருக்கு கார் பரிசு அவர்கள் நடித்த விஜய் சேதுபதி அனிருத் இருவருக்கும் என்ன பரிசு தந்தார் என்று நிருபர்கள். விஜய்சேதுபதியிடம் கேட்டபோது எனக்கு நடிக்கிறதுக்கு வாய்ப்பு தந்தார் இல்ல அதுவே பெரிய கிப்ட் என்று ஒருவாறு சிரித்து சமாளித்து விட்டார்.

ஆர்.ஜே.பாலாஜி மனைவி புராணம்

20220524164404980.jpg

ஆர்.ஜே.பாலாஜி அபர்ணா பாலமுரளி ஊர்வசி சத்யராஜ் நடித்த வீட்ல விசேஷம் படம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி பேசும் போது எனக்கு 21 வயதில் திருமணம் என் மனைவி என்னை விட இரண்டு வயது சிறியவள் கணவன் மனைவி என்றால் என்னவென்று தெரியாத காலம் அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் பற்றி வரும் 15 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறோம். நான் இந்த அளவுக்கு நான் முன்னேறியதற்க்கு காரணம் என் மனைவி தான் மனைவி புராணம் பாடி மகிழ்ந்தார்.

வெளிநாட்டில் புஷ்பா இரண்டாம் பாகம்

20220524164307638.jpg

புஷ்பா படம் இரண்டு பாகமாக வெளியிடுவது என்று தீர்மானித்து தான் முதல் பாகம் வெளியானது. இரண்டாவது பாகத்தில் புஷ்பாவின் வெளிநாட்டு ஆதிக்கம் கதையாம் இதற்காக சீனா ஜப்பான் ஹாங்காங் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இப்போதெல்லாம் படம் என்றாலே 2 பாகம் என்று தான் முடிவே பண்ணி தான் கதையை எழுதுகிறார்கள் போலும்.

தாய்லாந்தில் தம்பதிகள்

20220524164501701.jpg

விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடுகிறார்கள். திருமணம் முடிந்து பெருமாள் கோவில் போய் சேவித்து விட்டு நயன்தாரா வீட்டில் சம்பந்தி விருந்து முடித்து தேனிலவுக்கு கிளம்பி விட்டார்கள். இதைப் பெருமையாக வலைப்பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் விக்னேஷ்சிவன். ஒரு ரசிகர் இந்த இளம் ஜோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டு அதை சமூக வலைத்தளத்தில் பெருமையாக பதிவு செய்திருக்கிறார்.

செல்வராகவன் இரண்டாம் பாகம்

20220524164645553.jpg

இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் இந்த இரண்டு படங்களின் இரண்டாம் பாகம் நிச்சயம் வெளிவரும் என்று சொல்லி இருக்கிறார். ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வெளியே வரும் போது அவரை வழி மறித்த நிருபர்களிடம் இந்த தகவலை சொல்லி இருக்கிறார். அதுவும் முதலில் புதுப்பேட்டை இரண்டாவது ஆயிரத்தில் ஒருவன் என்று வரிசைப்படுத்தி இருக்கிறார். தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன்.