செய்திகளை சுடச் சுடத் தருவது விகடகவி என்று இந்த விஷயத்திற்கெல்லாம் எழுத கூச்சமாகத்தான் இருக்கிறது.
வெள்ளிக் கிழமை 25ந் தேதி ஜூன் மாதம் பாங்காக்கிலிருந்து சென்னைக்கு வரும் தாய் விமானத்தில் அத்தனை தமிழ்க் கண்களும் ஒரேயொரு ஜோடியையே வைத்து குறி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.
தேனிலவும் முடிந்து விக்கு நயன் தம்பதி பாங்காக்கிலிருந்து சென்னை திரும்ப வந்து கொண்டிருந்தனர்.
நயன் கையில் விலையுயர்ந்த லூயி விட்டன் பை வாங்கியதற்கான அடையாளம். சாதாரண மனிதர்கள் வாங்கக் கூடிய விலை கிடையாது.
முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க ஆனால் கொஞ்சம் சோர்வாக காணப்பட்டனர் தேனிலவு தம்பதி.
ஆங்கிலத்தில் சொல்வார்கள். கமான். த ஹனி மூன் இஸ் ஓவர். வேலையப் பாருங்கள் என்று.
நாளையிலிருந்து சினிமா உலகம் சுறுசுறுப்பாகி விடும்.
படங்கள் : ஷோபனா / ஜெயஶ்ரீ
Leave a comment
Upload