தொடர்கள்
கவர் ஸ்டோரி
தோல்வி - பயத்தின் மறுபக்கம். இந்துமதி கணேஷ்.

20220524230833214.jpg

தோல்வி நிலையென நினைத்தால்....? தோல்வியில் துவளும் துளிர்கள்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகபோகிறது என்று நகம் கடித்தபடி நின்றிருந்த மாணவ/ மாணவிகளில் பலர்இந்த வருடமும் பொது தேர்வு நடக்கவே நடக்காது என்று நம்பிஇருந்தவர்கள். பெருந்தொற்று காரணமாய் இரண்டு ஆண்டுகள் பொது தேர்வுநடத்த படாமலேயே அடுத்த வகுப்பிற்கு செல்ல தேர்ச்சி பெற்று விட்டதாய்அறிவிக்க பட்டதால் இந்த வருடமும் அப்படியே கடத்தி விடலாம் என்று நம்பிஇருந்த மாணவர்களின் நம்பிக்கை பொய்த்து போனது. பள்ளிகள்திறக்கப்பட்டது மட்டுமின்றி மிக குறைந்த காலகட்டத்தில் பாடங்களும்எடுக்க பட்டு பொதுத் தேர்வும் நடத்தப் பட்டது அவர்களுக்கு நம்ப முடியாதஅதிர்ச்சி. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பாட புத்தகத்தையே கையில்எடுக்காமல் இருந்துவிட்டு மிக குறுகிய காலகட்டத்திலேயே அனைத்தையும்கற்று தேற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது அதீதமான ஒன்று தான். ஆமைபோல மிக மெதுவாய் பயணித்த அவர்களை திடீரென்று முயல் போலவேகமாய் ஓடு என்று கட்டாய படுத்தும் போது அவர்கள் திணறி திகைத்துவிட்டார்கள். விளைவு தேர்வு முடிவுகளில் 10-ம் வகுப்பில் 90.07 சதவீதம்பேரும், 12-ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே நாளில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் 12 பேர் தற்கொலைசெய்து கொண்டுள்ளனர். மேலும் 28 மாணவர்ள் தற்கொலைக்கு முயன்று கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தற்கொலை சம்பவம் பெரும்பாலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, திருச்சி ஆகியமாவட்டங்களில் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம்மாவட்டத்தில் 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தற்கொலை தீர்வாகுமா?

20220524231216638.jpg

எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாக முடியாது. தேர்வில் தோல்வியடைந்தால் எப்படி அனைவரையும் எதிர் கொள்வது என்ற பயமே இந்த முடிவுக்கு பிரதான காரணம். தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் ஒருபுறமிருக்க தேர்வு முடிவு தெரியும் முன்பே ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார். ஆலங்காயம் என்ற ஊரை சேர்ந்த ஸ்ரீபாஸ்ரீ தேர்வு முடிவு குறித்த பயத்தால் முடிவுகள் வெளியாகும் முன்பே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.

20220524231935323.jpeg

ஆனால் மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியான போது அவர் தேர்வில் வெற்றி பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இது மாணவர்கள் எவ்வளவு தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு சான்றாகும்.

இந்த மாணவர்களை தற்கொலை முடிவுக்கு தள்ளியது எது என்று ஆராயும்போதே அவர்கள் தோல்விக்கான காரணங்களையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். தேர்வில் தோல்வியை சந்தித்த மாணவர்களில் பலர் அரசுபள்ளிகளிலும் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியிலும் பயின்றவர்கள்என்பது குறிப்பிட தக்க ஒன்று. கொரோனா பெருந்தொற்று காரணத்தால்அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை, மேலும் அவர்களுக்குஎந்த ஆன்லைன் வகுப்புகளும் நடந்தபடவில்லை. பெரும்பாலான அரசு பள்ளிமாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை படிப்பில் கவனம் செலுத்துவதில்லைஒன்பதாம் வகுப்பில் இருந்து தான் படிக்கவே தொடங்குகிறார்கள். அந்தகாலகட்டத்திலும் வகுப்புகள் எடுக்கப் படாமல் போகும் போது அவர்களுக்குஅடிப்படைஅறிவு குறைந்து போகிறது. அடிப்படையே பலவீனமாகஇருக்கும்போது கடினமான பாடங்களை அவர்கள் எவ்வாறு கற்க முடியும். மேலும் நீண்ட இடைவெளிக்குபின் பள்ளிக்கு திரும்பி இருக்கும் மாணவர்கள்பலருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து போயிருக்கிறது, சில மாணவர்கள்போதை முதலான கொடிய பழக்கங்களுக்கு ஆளாகி இருப்பது வேதனையானஒன்று. அவர்களை மாற்றி கல்வியில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தஆசிரியர்களுக்கும் போதிய அவகாசம் இல்லை என்பதே நிதர்சனம்.

கல்வியில் ஆர்வமுள்ள பல மாணவர்கள் இந்த பெருந்தொற்று காலத்தில்ஏற்பட்ட வறுமையான குடும்பச் சூழலால் பள்ளிக்கு திரும்பி வரவேயில்லை. தேர்வில் தோல்வியுற்றவர்களை கணக்கெடுக்கும் போது இந்த இடைநிற்றல்கள் ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை. இவர்களும்தோல்வியுற்றவர்களாக தான் கணக்கெடுக்க பட்டிருப்பார்கள் என்பதையும்நாம் கருத்தில் கொள்ளலாம். பல பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பைப் பாடத்தைஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தை பதினொன்றாம்வகுப்பிலும் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களை மதிப்பெண்ணை நோக்கித் தள்ளும்போது கல்வியில் ஈடுபாடுஇல்லாமல் போகிறது. தனியார் பள்ளிகள், தன் பள்ளியில் நூறு சதவிகிதம்பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்து மறைமுகமாகஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளியில் அதிக தேர்ச்சி விகிதத்தைத்தரும்போது ஏன் அரசுப் பள்ளியில் தர முடிவதில்லை என்று கேட்டு, ஆசிரியர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்துகின்றனர். இதனால் ஆசிரியர்கள், மாணவர்களின்தேர்ச்சி விகிதத்தைக் கூட்டவேண்டும் என்ற நோக்கத்திலேயேசெயல்படுவதால் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர்.

பத்தாம் வகுப்பு வரை எப்படியோ தேர்ச்சி பெற்று வந்துவிட்டாலும் அடுத்ததடைக்கல்லான பன்னிரெண்டாம் வகுப்பை கடப்பது சுலம்பமானகாரியமில்லை. மாணவர்கள் மேல்நிலை வகுப்பில் குரூப்-1 மற்றும் குரூப்-2 எடுத்துத் தடுமாறும்போது தங்களது பிரிவை மாற்றிக்கொள்ளும்வசதிகள் இல்லை. மேலும், பெற்றோர்கள் குரூப்-1 அல்லது குரூப்-2-வில்தான் தன்னுடைய பிள்ளை படிக்க வேண்டும் என்று நெருக்குதலைத் தருகிறார்கள். இதுவும் பிள்ளைகளுக்குக் கல்வியின் மீது கசப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. ஆர்வமில்லாமலும் பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவும் படிக்கும் போதும்தேர்வில் தோல்வியையே தழுவுகின்றனர்.

ஏன் தமிழில் மட்டுமே 47000 மாணவர்கள் தோல்வியுற்றனர் ?

2022052423061311.jpg

இத்தனை மாணவர்கள் தமிழில் தோல்வியுற்றதற்கு மொழி பாடத்திற்கென்றுபிரத்யேகமான ஆசிரியர்கள் நியமிக்க படாதது தான் காரணம் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் தொடக்கப் பள்ளிகளில்மட்டுமே அனைத்து பாடங்களையும் ஒரே ஆசிரியர் சொல்லி தருவார்கள், நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் மொழி பாடங்களுக்கு தனியாகஆசிரியர்கள் உள்ளார்கள். மாணவர்கள் தினமும் வகுப்புக்கு சென்றுவந்தாலே இந்த பிரச்சனை களையபட்டு விடும் என்கின்றனர். மேலும் பொதுதேர்வுகள் வேறு மாணவர்கள் பயிலும் பள்ளியில் அல்லாது வேறு பள்ளிகளில்நடப்பதாலும் முதல் தேர்வாய் தமிழ் இருப்பதாலும் அந்த பதட்டத்திலும் கூடமாணவர்கள் தோல்வியடைந்திருக்கலாம் என்று கல்வியாளர்கள் கருத்துகூறியுள்ளனர். ஆசிரியர் நியமனங்களில் லஞ்சம், ஊழலால், தகுதியானஆசிரியர்கள் இல்லாததே இந்நிலைக்கு காரணம் என்றும் சில அரசியல்கட்சிகள் கூறி வருகின்றன. எது எப்படியாயினும் கல்வித்துறை இதில்தலையிட்டு ஆலோசித்து தீர்வுகளை மேற்கொண்டால் மட்டுமே மாணவர்களின்கல்வி நிலையில் ஒரு மாற்றத்தை கொண்டு வர இயலும்.

பெற்றோரின் நிலை என்ன ?

தேர்வில் குழந்தைகள் தோல்வியுற்ற அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பேஅவர்களின் தற்கொலை செய்திகள் பெற்றோருக்கு நடுக்கத்தை ஏற்படுத்திஇருக்கிறது. மாணவர்களின் விட பெற்றோர் தான் தற்போது சிக்கலானநிலையில் உள்ளனர். தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களை கடிந்து ஒன்றுமேசொல்ல இயலவில்லை, மேலும் இவர்கள் எந்த வகையில் தன்னை மாய்த்துகொள்வார்களோ என்கிற அச்சத்துடன் அன்றாடம் வேலைக்கு கூட வெளியேசெல்லாமல் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய நிலைக்குதள்ளப் பட்டிருக்கிறார்கள். ஊசி முனையில் நிற்பதை போல தவித்து கிடக்கின்றனர்பெற்றோர்.

ஆசிரியர்களின் நிலை என்ன ?

இந்த தேர்வு தோல்விகளால் அதிகம் பாதிக்க படுவது அரசு பள்ளிஆசிரியர்கள் தான். தோல்வியுற்ற மாணவர்களின் பெற்றோர் இவர்களை குறைசொல்வது ஒரு புறமிருக்க தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் சிலர்ஆயுதங்களுடன் வந்து வகுப்பறைகளை சேதம் செய்து ஆசிரியர்களை தாக்கவந்த சம்பவங்களும் நிறைய இடங்களில் நடந்து இருக்கிறது. இதனால்ஆசிரியர்கள் பெரும் அச்சத்தில் ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டிஉள்ளது. பெருந்தொற்று காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன்வகுப்புகள் எடுத்து கொண்டிருந்த போது அரசு பள்ளி ஆசிரியர்கள் எந்தஅழுத்தமும் இன்றி இருந்து வந்னர். அரசு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கபோதிய வசதி மேற்கொள்ளவில்லை என்று நாம் குறை கூறினாலும் அப்படிஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டால் அதை அனைத்து தரப்புமாணவர்களாலும் எடுத்து கொள்ள முடியாது என்பதே நிஜம். ஆனால்பள்ளிகள் திறக்கப் பட்ட உடன் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு கூடுதல்அழுத்தம் தர துவங்கியது, குறுகிய காலத்தில் பாடங்களை மாணவர்களுக்குசொல்லி கொடுக்க வேண்டும் அவர்களை தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும்என்பது மிகப் பெரிய சவால். இதை கூட ஓரளவுக்கு சமாளித்து விட்டனர் ஆசிரியர்கள். ஆனால் மாணவர்களுடன் அவர்களின் குடும்ப சூழல்களைபுரிந்து கொண்டு ஒன்றி பழக போதிய கால அவகாசம் அவர்களுக்குகிடைக்கவில்லை. இதனால் கூடுதல் அழுத்தத்துடன் மாணவர்கள்காணப்படுவது கண்கூடு.

எது மாணவர்களை தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது ?

பெருத்தொற்றில் தொடர்ச்சியாக வீட்டிற்குள்ளேயே இருந்த சிறுவர்கள்தொடர்ந்து தொலைக்காட்சி பெட்டிகளிலும் கைப்பேசிகளிலும் தன்நேரத்தை செலவிட்டு வருகின்றனர். கைபேசியில் பாடம் படிக்க வேண்டும்என்று கூறி பல அப்பாவி பெற்றோரை ஏமாற்றி கைபேசி வாங்கி முழு நேரவிளையாட்டில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். திடீரென்று பள்ளிக்கு போகவேண்டும் பாடங்களை படிக்க வேண்டும் என்றால் அது அவர்களுக்குதேவையில்லாத சுமை போல தோன்றியது. படிப்பின் முக்கியத்துவம்அவர்களுக்கு விளங்கவில்லை, அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல போதியஅவகாசமும் இல்லை. கேளிக்கைகள் வந்து மாணவர்களின் செயல்திறனைகுறைத்து விட்டது என்பதே நிஜம். நாளை இந்த உலகத்தை இந்ததோல்வியுற்ற முகத்துடன் எப்படி சந்திப்பது என்ற அவமான உணர்வேஅவர்களின் தற்கொலை முடிவுகளுக்கு காரணம். மேலும் வெளியுலகதொடர்புகள் அதிகமில்லாத காரணத்தாலும் அதீத மன அழுத்தத்திலும்தோல்வி என்பது வாழ்வின் இறுதி நிலை என்ற மனநிலைக்கு அவர்கள்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

மதிப்பெண்கள் அவ்வளவு முக்கியமா ?

20220524232405357.jpg

மதிப்பெண்ணை வைத்து மாணவரின் தேர்ச்சி மற்றும் தேர்ச்சியின்மையைப்பற்றி முடிவு செய்ய இயலுமா என்றால் இல்லை என்பதே சரியான பதில். இன்று தேர்வில் வெற்றி கண்ட மாணவர்களில் எத்தனை பேர் பாடங்களைபுரிந்து கற்றிருக்கிறார்கள்? தேர்வுக்காகவும் மதிப்பெண்ணிற்காகவும்மனப்பாடம் செய்து தேர்வை எழுதி வெற்றி கண்டாலும் அதுஅந்த மாணவரின்எதிர்கால வாழ்விற்கு எந்த அளவிற்கு பயன்படும் என்பது யோசிக்க வேண்டியஒன்று. மதிப்பெண் எடுப்பதே முக்கியம் என்று வலியுறுத்தி அதீதமாய்குழந்தைகளுக்கு அழுத்தம் தராமல் இருந்தாலே கற்றல் என்பது இயல்பானஒன்றாக இருக்க முடியும்.

இதற்கு என்னதான் தீர்வு ?

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின்செயல்பாடுகளிலும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின்பெற்றோர்களின் செயல்பாடுகளிலும் வேறுபாடு இருப்பதை உணரலாம். பலதனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுசெய்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளியில் இதுபோன்ற நடைமுறைகள்எதுவும் இல்லை. அரசுப் பள்ளிகளிலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள்சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோர்ஆசிரியர் கழகமும் செயல்படாமல் இருக்கின்றன. இனியாவது, இதனைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். கல்வி அதிகாரிகள் இதனைக்கண்காணிக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் அடிக்கடி பள்ளிகளுக்கு வருகைதந்து மேற்பார்வை செய்ய வேண்டும்.

மாணவர்களுடன் ஆசிரியர்கள் ஒரு பிணைப்புடன் இருக்க வேண்டியதுஅவசியம். தவறு செய்தாலும் தனியே அழைத்துப் பேசி அவர்களை திருத்தவேண்டும். மாணவர்களை தொடர்ந்து ஊக்குவிக்கவேண்டும். வகுப்பறையில்எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும். பள்ளியிலும், வகுப்பிலும் கட்டுப்பாடு அதிகமாகும்போதே மாணவர்கள் திசைதிரும்புகின்றனர். வகுப்பில் இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும் பாடத்தைக்கற்றுக்கொடுக்க வேண்டும். இதன்மூலம் தடம்மாறும் பிள்ளைகள் மனம்மாறிகற்றலில் கவனத்தை செலுத்த ஆரம்பிப்பார்கள்.ஆசிரியர்கள் தங்கள்குழந்தைகளுக்கு எப்படி நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றுவிரும்புகிறார்களோ அதே போல தன்னுடைய மாணவர்களுக்கும்அவ்வண்ணமே சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்ற உறுதியுடன்இயங்கினாலே மாணவர்கள் வெற்றியடைந்து விடுவார். பெற்றோரும்ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கும் போது குறுக்கிடாமல் அவர்களுக்குஆதரவு தந்தால் மட்டுமே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மேல் ஒரு மரியாதைஏற்படும் அதுவே அவர்களை நல்வழி படுத்த உதவும். ஒவ்வொரு முறை பொதுத்தேர்வுகள் தொடங்கும் முன்பும் கல்வித் துறை ஒரு விரிவான ஆலோசனைக்குஏற்பாடு செய்ய வேண்டும், அதில் அனைத்து மாணவர்களும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் அதுவே அவர்களின் மனநிலை மேம்பட முக்கியதூண்டுதலாக அமையும். தொடர்ந்து பள்ளிக்கு போவதே மாணவர்களை பலவகைகளில் ஊக்கப்படுத்தும். தோல்வி என்பதே சோர்வுற்ற ஒரு மனநிலைதான். அதிலேயே நிலைகொண்டு தன்னிலை இழக்காமல் இதுவும் கடந்துபோகும் என்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து போவது ஒன்று தான்தோல்வியை எதிர்கொள்ளும் வழி. தோல்வி நிலையென நினைத்தால் – மனிதன்
வாழ்வை நினைக்கலாமா!

இந்துமதி கணேஷ்.