தொடர்கள்
கவர் ஸ்டோரி
அக்னிபத் ! சக்ரவியூகம் ! ராம் / வெங்கடகிருஷ்ணன்

20220525012546888.jpg

அக்னிபத்.

சென்ற வாரம் நாடு முழுவதும் உச்சரித்த மந்திரச் சொல்

மனித குலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வித யுத்த தர்மத்தை கடைபிடித்திருக்கின்றது.

போரே வேண்டாம் சமாதானம் தான் முக்கியம் எந்தப் போரிலும் எந்த வெற்றியும் நிரந்தரமல்ல, விண்வெளி வீரனுக்கு தேச எல்லைகள் காணாமல் போய் பூமியில் இதற்கா அடித்துக் கொள்கிறோம் என்றெல்லாம் தோன்றும் என்று தத்துவம் பேசலாம்.

ஆனால் ஒவ்வொரு தேசமும் எல்லைக் கோடுகள் வரைந்து கொண்டு தத்தம் நிலத்திலிருந்து ஒரு செண்டிமீட்டர் கூட அடுத்த நாடு ஆக்ரமிக்காமல் இருக்க தன் இராணுவத்தையே நம்பியிருக்கிறது.

இந்தியா உலகின் மிகப் பெரிய இராணுவம் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது.

சமகால போர் யுக்திகளும், தந்திரங்களும், முன்னேற்பாடுகளுமாக தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டியது இந்தியாவிற்கு மிக அவசியம்.

அப்படித் தான் அக்னிபத் திட்டத்தைப் பற்றியும் சொல்கிறார்கள்.

வாட்சப்பில் இந்த திட்டத்தைப் பற்றி வந்த ஏராள செய்திகள் உங்கள் செல்பேசிகளை நிறைத்திருக்கக் கூடும்.

20220525012616999.jpg

10-12 அல்லது கல்லூரி படித்து வந்தவர்களும், தினமும் அவர்கள் செய்யும் வேலையில் உள்ள, சில எழுத்து பணிகளை, கற்று கொடுத்தாலும் ஒழுங்காக செய்ய முடியாதவர்கள் தான் அதிகம். உதாரணமாக எவ்வளவு உற்பத்தி ஆனது, ரிஜக்ட் ஆனது, என்ன காரணம், மெஷினில் என்ன பிரச்சினை வருகிறது, அதை கற்று எப்படி சரிசெய்வது என்று கற்றுக் கொள்ள கூட விருப்பமில்லாதவர்கள் தான் அதிகம். இவையெல்லாம் சரியானால் இந்தியா முன்னேறுவதை எந்த கொம்பனாலும் தடுக்க இயலாது.

மத்திய அரசின் தற்போதைய அக்னிவீர் இந்த பிரச்சினையை ஓரளவு குறைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.

இப்படி வரும் வாட்சப் செய்திகளில் நம் முன்னே இருக்கும் சில முக்கிய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. எவ்வளவு பணம் வரும் என்று மட்டும் தான் சொல்கிறார்களே தவிர புதையுண்ட கேள்விகள் நிறைய.

தற்போதைய மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களுமே நல்ல திட்டமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதை நடைமுறைப் படுத்துவதில் தான் ஏக சிக்கல். ஒரு பக்கம் அரசு எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும் ஒரு கோஷ்டி, இன்னொரு பக்கம் எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே வெளியிடுவோம் என்று பொய்யை மையாக்கி அலையும் பத்திரிகைகள் ஊடகங்கள், கூகுளை பார்த்ததுமே தாங்கள் டாக்டர்கள் என்று நம்பி வைத்தியம் சொல்லவே தொடங்கும் ஆசாமிகள் இருக்கையில், எதை யாரிடம் கேட்டால் சரியான பதில் வருமோ அவரிடம் கேட்பது தானே முறை.

20220525012638682.jpg

மேஜர் மதன்குமார் முன்னாள் இராணுவ அதிகாரி.

தற்போது விவசாயி. அது மட்டுமல்ல பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருபவர். அவரிடம் முன் வைத்த கேள்விகள் அவருடைய பதில்கள் இங்கே காணொளியாக.

மேஜர் மதன் குமார் பற்றி.....

இனி கீழ்கண்ட கேள்விகளுக்கு மேஜர் மதன் குமார் சொன்ன பதில்கள்.....

1. பத்தாம் வகுப்போ அல்லது பன்னிரெண்டாம் வகுப்போ இது கட்டாயமா ???

2. பி.எஸ்.ஸி பிசிக்ஸ் படிக்க நினைக்கும் மாணவனுக்கு 4 வருடம் படிப்பு தள்ளிப் போகுமே என்ன செய்ய ???

3. அக்னிபத்தில் இட ஒதுக்கீடு உண்டா?? இராணுவத்தில் உண்டா ??

4. நம்மூரில் சொல்வார்கள் படிக்கும் வயதில் கையில் காசு காட்டக் கூடாது என்று. பத்தாம் வகுப்பு மாணவனுக்கோ அல்லது 12வது மாணவனுக்கோ கையில் காசு புழங்கினால் வெளியே வந்து மீண்டும் படிப்பு வருமா ???

5. எத்தனை வருடங்களாக இந்த திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ? யார் இதன் மூளை ??

6. முறையான அறிவிப்பு செய்யாமால் தடாலடியாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் என்ன ??

7. எல்லையில் நம் சிறுவர்களை முன்னிறுத்தி போராடுவது யுத்த தர்மமா ???

8. இறந்தால் ஒரு கோடி சரி. அந்த குடும்பத்திற்கு பணம் கொடுத்தால் உசிரு திரும்ப வருமா ?? அக்னி பத்திற்கு அர்ப்பணிப்பு வேண்டுமல்லவா ???

9. அக்னிவீரன் என்ற பட்டம் சரி. ஒரு வேளை அவன் மீது ஏதேனும் குற்றப் பத்திரிகை வந்தால் அதை நீக்குவார்களா ?? அந்த அதிகாரம் யாரிடம் உள்ளது ??

10. benefits outweight the risk என்று சொல்வார்களில்லையா அது அக்னி பத்துக்கு சரிப்பட்டு வருமா ??

11. அக்னிபத் லட்சக்கணக்கில் கொடுக்கும் என்று சொல்கிறார்களே உண்மையில் எவ்வளவு பணம் ??

12. அக்னிவீரன் சமுதாயத்தில் கலக்க முடியுமா ?? சுலபமா ??

13. அக்னிபத் திட்டத்தின் குறைகள் என்ன ????

14. வெளிநாட்டு யுக்தியை காப்பியடித்ததா அக்னிபத் ? இஸ்ரேலை பின்பற்றுகிறோமா நாம் ??

15. ஒரு இராணுவ வீரராக அக்னிபத் சரியா / தவறா ?? ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லவும் !

ஒவ்வொரு தேசம் செழிப்படைவதற்கு நல்ல குடிமகன்கள் வேண்டும்.

தேசத்தை கண் போன்று உயிர் போன்று நேசிக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

மாணவ சமுதாயமே நாளை நாட்டை நிர்வகிக்கப் போகும் வருங்காலத் தலைவர்கள்.

மாற்றத்தை அங்கிருந்து துவங்கும் முயற்சி தான் அக்னிபத்.

இளைஞ சமுதாயத்தை நல்வழிப்படுத்தவும், அவர்களை போதை வஸ்து போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமலும், சினிமா போஸ்டர் ஒட்டும் கலாச்சாரத்திலிருந்து விடுவிப்பதற்கும், வருங்கால இந்தியாவை உறுதியோடு கட்டமைப்பதற்கும், இளமையான இந்திய இராணுவத்தை உருவாக்குவதன் மூலம் அண்டை நாடுகளுக்கு தயார் நிலையில் இருக்கிறோம் என்பதை அறிவிக்கவும், தற்போது இந்தியா அமைக்கும் சக்கரவியூகம் தான் அக்னிபத் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வரவேற்க வேண்டிய அத்தியாவசிய திட்டம் தான்.

ஒளிப்பதிவு உதவி :

நன்றி. சாய் கணேஷ்.