தொடர்கள்
பொது
எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய விருது! மாலா ஶ்ரீ.

2022052502022434.jpg

கடந்த 2020-ம் ஆண்டு சைரஸ் மிஸ்த்ரி எழுதிய 'க்ரோனிக்கல் ஆஃப் கார்பஸ் பேரியர்' எனும் ஆங்கில நாவலை, பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலன் என அனைவரும் அன்பாக அழைக்கும் வி.நாராயணன், 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' என தமிழில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு நூலை சாகித்ய அகாடமி நிறுவனம் அச்சிட்டு விற்பனைக்கு வெளியானது. இந்த நூல் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

20220525020321266.jpg

இந்நிலையில், 24-ம் தேதி ஜூன் 2021-ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகள் குறித்து சாகித்ய அகாடமி அறிவிப்பு வெளியிட்டது. இதில், சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' நூலுக்காக எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

'சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழா குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்' என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, சாகித்ய அகாடமி விருது பெற்ற பாலனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.