தொடர்கள்
பொது
வாசகர் மெயில்

20220705185624441.jpeg

Heading : ஹாய் டியர் மதன்

Comment : ஹாய் டியர் மதன் கேள்வி-பதில் பகுதி, வாராவாரம் நடிகர் கமலின் 'விக்ரம்' பட மெகா வசூலை போல் விகடகவி வாசகர்களின் ஆதரவு பெருகி வருகிறது. தொடரட்டும் அவரது ஹாஸ்ய பதில் மற்றும் 'நறுக்' கார்ட்டுன்ஸ்!

கார்த்திகேயன், தினேஷ், வடபழனி

Heading : சென்னையில் சதுரங்க விழா ! சிவபெருமான் துவங்கிய ஆட்டம் !! - சுந்தரமைந்தன். ​​

Comment : சதுரங்கம் விளையாட்டுக்குப் பூர்விகம் தமிழ்நாடு என்பதையும், இந்தியாவில் தோன்றி, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு ஜேம்ஸ் ருத்வனமுர்ரே மூலம் பிரபலமானதையும் அறிந்து கொண்டோம். ஆன்மீகக் கட்டுரையிலும் இத்தனை தகவல்கள் கொடுத்ததற்கு சுந்தரமைந்தன் மற்றும் விகடகவிக்குப் பாராட்டுக்கள். S.சேதுராமன் மதுரை.

Heading : சென்னையில் சதுரங்க விழா ! சிவபெருமான் துவங்கிய ஆட்டம் !! - சுந்தரமைந்தன். ​​

Comment : சிவபெருமான் துவங்கிய சதுரங்க ஆட்டம் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கும் இந்த நேரத்தில் விகடகவியில் சுந்தரமைந்தனின் கட்டுரை எளிய நடையில் மிகவும் அற்புதமாகவும் சிறப்பாகவும் இருந்தது. அருள்மிகு சதுரங்க வல்லப நாதர் திருக்கோயில் ஸ்தல புராணம், முகவரி, கோயில் திறந்திருக்கும் நேரம், கோயிலுக்குப் போகும் வழி தெளிவாக உள்ளதால் எங்களுக்கு இக்கட்டுரை வழிகாட்டியாக அமைந்துள்ளது. படங்கள் மற்றும் வீடியோ அமர்க்களம். தொடரட்டும் விகடகவியின் ஆன்மீக பயணம். விகடகவி ஆசிரியர் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

இராமய்யர் திருவாரூர்

Heading : அரசியல் சதுரங்கம் - விகடகவியார்

Comment : டெல்லியில் சோனியா-மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம் வைப்பது பற்றி தமிழக பாஜ-காங்கிரஸ் மோதல் என அரசியல் சதுரங்க வேட்டை பற்றியும் விகடகவியார் பிரித்து மேய்ந்துவிட்டார்.

ஜமுனா பிரபு, கலா கார்த்திக், தஞ்சாவூர்

Heading : செஸ் ஒலிம்பியாட் திருவிழா - ஹைலைட்ஸ் - விகடகவியார்.

Comment : சென்னை செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா மற்றும் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் ஆச்சரிய அனுபவங்களை விகடகவியார் 'லைவ் ரிலே' செய்திருப்பது மிகச் சிறப்பு!

ஷைலஜா ராமச்சந்திரன், கோட்டயம், கேரளா

Heading : இங்கிலாந்தின் பிரதமராக ஒரு இந்தியர்? -தில்லைக்கரசிசம்பத்

Comment : இங்கிலாந்தில் ரிஷி சுனக் பிரதமரானால், இந்தியர்களான நமக்கு நிச்சயம் பெருமையே. ஒரு காலத்தில் நம்மை அடிமைபடுத்தி ஆண்ட இங்கிலாந்தில், இன்று ஒரு வெளிநாடுவாழ் வம்சாவளி இந்தியன் தலைமையின்கீழ் இயங்க போகிறது என்பது இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திர தின வரலாற்றில் பொன் எழுத்துக்களால் விவரிக்க வேண்டியது. கலக்கிட்டீங்க தில்லை!

ரேணுகா ஹரி, பிரபாகரன், பெங்களூரு

Heading : சென்னையில் சதுரங்க விழா ! சிவபெருமான் துவங்கிய ஆட்டம் !! - சுந்தரமைந்தன். ​​

Comment : விகடகவி யின் எழுத்து நடையே ஸ்பெஷல்தான்! 'நீங்கள் கோவிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக பார்த்துவிடும் எஃபெக்டை எந்த வித பேச்சுக் குறுக்கீடும் இல்லாமல் இங்கே...' என்ற முன்னுரையுடன், பிரதமரின் பேச்சுக்கு முன் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயிலின் நிதர்சன நிலையை அழகாக படம்பிடித்துக் காட்டிவிட்டீர். இனிமேல் அந்த கோயில் அனைத்து வகையிலும் பிழைச்சுக்கும். வெல்டன் சுந்தரமைந்தன்!

ராதா வெங்கட், மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை

Heading : பட்டாம்பூச்சி பேசுது - 17 என்.குமார்

Comment : என்.குமாரின் பட்டாம்பூச்சி பேசுது தொடரின் ஒவ்வொரு வீடியோ தகவலை கேட்கும்போது, எங்கள் மனதில் உற்சாகம் சிறகடித்து பறக்கிறது. தொடரட்டும் குமாரின் இனிய கற்பனை பயணம்!

தீக்ஷிதா, கௌஷிக், சாய்கிருஷ்ணா, சென்னை

Heading : வலையங்கம்

Comment : யாரோ ஒரு அமைச்சர் செய்த ஊழல் முறைகேடு மற்றும் பணமோசடிக்கு, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பொறுப்பேற்பார்? அப்படி பார்த்ததா, எல்லா மாநில அமைச்சர்களும் முதல்வரை கைகாட்டி மாட்டி விட்ருவாங்களே... அந்த மோசடியில் முதல்வருக்கு பங்கு இருப்பதாக ஆதாரத்துடன் நிரூபித்தால் பதவி விலகணும்!

சிவகாமி முத்துராமன், காரைக்குடி

Heading : ஆன்மீக ஆசான் - 99- ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : மகாபெரியவாவுடன் நீண்ட காலமாக உடனிருந்த பாலு மாமாவின் பல்வேறு வித்தியாச அனுபவங்கள் கேட்கும்போது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.

மீனாட்சி சேஷாத்ரி, கும்பகோணம்

Heading : முருக நாயனார்!! ஆரூர் சுந்தரசேகர்.

Comment : Nice article 👌🏻