தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் டியர் மதன்

2022110217190015.jpg

1. ரஜினியின் பாபா திரைப்படம் மீண்டும் திரைகளில் வெளியியாவது போல் கமலின் எந்த படத்தை மீண்டும் வெளியானால் நன்றாக இருக்கும்?

20221102171826774.jpg

நான் வசனம் எழுதினேன் என்பதற்காகச் சொல்லவில்லை. "அன்பே சிவம் " என் சாய்ஸ்! தியேட்டரில் ரிலீஸான போது அந்தப்படம் பெரிதாகச் போகவில்லை. ஆனால் பிற்பாடு டி.வி யில் பார்த்துவிட்டு தமிழக மக்கள் "ரொம்ப நல்ல படம்" என்று சர்டிஃபிகேட் கொடுத்தார்கள் இல்லையா?!

2. ஏன் தான் ஆணாக பிறந்தோமா என்று எண்ணியது உண்டா?

20221102172137470.jpg
கிடைத்ததைக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்கிறவன் நான். அடுத்த ஜென்மத்தில் பெண்ணாகப் பிறந்தால் போச்சு!


3. அடிப்படை நேர்மை கூட இல்லாத மனிதர்களை எப்படி டீல் செய்வது?
"துஷ்டரைக்கண்டால் தூர விலகு" என்று ஒரு பழமொழி உண்டு.அதை இங்கும் பொருத்திக் கொள்க!


4. திருமணத்திற்கு பிறகு ஒரு ஆண் தன் பெற்றோரா? அல்லது மனைவி, குழந்தைகளா? என்ற இக்கட்டான தேர்வு வரும்போது பெற்றோரை கைவிட்டு விட்டு, ஏன் மனைவி குழந்தைகள் பக்கம் சாய்கிறான்?

20221102172831269.jpg

நன்றி: தினமணி

செல்பிஷ் ஆகிவிடுகிறோம்.சர்வைவல் ( Survival) தான் காரணம். மனைவி பவர்ஃபுல் ஆனவள். குழந்தைகளும் அவள் பிடியில் தான் இருக்கின்றன. ஆணும் மண்டியிட வேண்டியதுதான். யார் பக்கமும் சாயாத 'க்ரேட்' மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சலாம்!


5.ஒரு பேச்சுக்கு சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களுமே பூமியை போன்று ஆக்ஸிஜன், தண்ணீர், பச்சை பசுமை என்று செழிப்பாக இருந்திருந்தால் இந்த ஒன்பது கிரகங்களில் நீங்கள் எந்த கிரகத்தில் வாழ ஆசைப்படுவீர்கள்?

20221102173032230.jpg
பூமி ரொம்ப அரிதானது(rare) அது போல் எல்லா கிரகங்களும் அமையாது. ஆனால் நாம் இருக்கும் பால் வீதியில், அல்லது அதற்கு வெளியில் பூமி போலவே ஒரு கிரகம் இருக்குமோ என்று எனக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டு. ஏனெனில் கோடான,கோடான கோடி கிரகங்கள் உண்டு.அதில் ஒன்று கூடவா பூமி மாதிரி இருக்காது?! அங்குள்ள உயிரினங்கள் எப்படி இருக்கும் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயங்கள்!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in