தொடர்கள்
கவர் ஸ்டோரி
தீவிரவாதத்தின் அடுத்த குறி தென்னிந்தியாவா ??? -விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

20221103074535237.jpg

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம பூஜாரி மற்றும் அதில் பயணித்த முகமதுஷாரிக் ஆகியோர் காயமடைந்தனர். ஷாரிக் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குக்கர் குண்டு வெடித்த ஒரு சில மணி நேரத்தில் கர்நாடக டிஜிபி இது சதி செயல் என்று உறுதிப்பட தெரிவித்தார். தற்போது இந்தத் வழக்கை என் ஐ ஏ விசாரித்து வருகிறது. சாருக் ஷாரிக் மற்றும் கோவை கார் வெடிப்பில் இருந்த முபின் தொடர்பு உண்டா கூட்டாளிகளா என்றும் என் ஐ ஏ விசாரிக்கிறது. காரணம் ஷாரிக் போலியான இந்து பெயரில் கோவை போன்ற இடங்களில் தங்கியது தற்போது தெரிய வந்திருக்கிறது. ஷாரிக் யாரோ ஒருவர் தவறுதலாக தொலைத்து விட்டிருந்த ஆதார் கார்டை பயன்படுத்தி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஷாரிக் வீட்டில் சோதனை நடத்திய போது வெடி பொருட்கள் சர்க்யூட்கள் தவிர சில போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. ஐ எஸ் தீவிரவாதி போல் அவர் உடை அணிந்து அவர் வெடிக்க எடுத்துச் சென்ற குக்கர் குண்டுடன் படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

20221103074625499.jpg

இவர் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ் தீவிரவாத ஆதரவாளர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. ஐஎஸ்தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த சிலருடன் இவர் தொடர்பில் இருந்திருக்கிறார் என்பதும் தெரிந்தது. தற்சமயம் ஷாரிக் தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர் ஓரளவு குணம் பெற்றதும் தான் அவரிடம் விசாரணை செய்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

ஷாரிக் கோவையில் தங்கி இருந்தபோது உடற்கல்வி ஆசிரியரான சுரேந்திரன் என்பவர் இவருக்கு சிம் கார்டு வாங்கி தந்திருக்கிறார். ஷாரிக் தனது செல்பேசியில் வாட்ஸ் அப்பில் சிவன் படம் வைத்திருந்தார் இதன் மூலம் திட்டமிட்டு தனது மத அடையாளத்தை மறைத்து இந்த சதி வேலையில் அவர் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.

அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டை மேட்டில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்புடன் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பிருக்குமோ என்ற கோணத்திலும் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள் மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு கோவை கார் வெடிப்பு இரண்டுமே தீவிரவாதிகள் நடவடிக்கை என்பதை என் ஐ ஏ அதிகாரிகள் தாங்கள் சேகரித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் 43 இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சில இடங்களில் முக்கிய ஆவணங்களும் லேப்டாப் செல்போன் சிம்கார்டு பென் ட்ரைவ் என்று ஏகப்பட்ட ஆவணங்களை என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய இடங்களில் அள்ளி கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த சோதனையின் மூலம் உயிரிழந்த ஜமீஷா முபின் தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இதேபோல் ஷாரிக் தற்கொலைப்படைதாக்குதல் நடத்த திட்டமிட்டு குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணம் செய்தார் என்பதை என் ஐ ஏ அதிகாரிகள் உறுதி செய்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் ஐஎஸ் ஆதரவாளர்கள் ஐஎஸ் தொடர்பில் இருப்பவர்கள் அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்பவர்கள் இப்படி 900 பேர் கொண்ட ஒரு பட்டியலை தமிழக காவல்துறையிடம் என் ஐ ஏ அதிகாரிகள் ஒப்படைத்து இருக்கிறார்கள் இவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வர உத்தரவிட்டிருக்கிறார்கள். இவர்கள் வங்கிக் கணக்கு இவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இவர்களின் செல்பேசி அழைப்புகள் இப்படி எல்லாவற்றையும் கண்காணிக்க என் ஐ ஏ தமிழக காவல்துறைக்கு சொல்லி இருக்கிறார்கள். இதில் சென்னை மற்றும் கோவையில் தீவிரவாத தொடர்புள்ளவர்களை என் ஐ ஏ அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

20221103074754895.jpg

கோவை கார் வெடிப்பு ஆறு பேரை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள். தமிழக போலீஸ்18 பேரை தங்கள் விசாரணை வளையத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது. கோவை கார் குண்டுவெடிப்பில் இறந்து போன முபின் செல்போனில் 100க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள் இருந்தது.

தமிழக போலீஸ் கோவை கார் வெடிப்பு சம்பவம் தற்கொலை தாக்குதல் முறை கிடையாது என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்கள் தற்கொலை தாக்குதல் என்றால் அவர் வீட்டில் வைத்திருந்த வெடி மருந்துகள் அனைத்தையும் முபின் எடுத்து வந்திருப்பார் என்று சொல்லும் தமிழக போலீஸ் அதேசமயம் முபின் உயிரிழப்புக்கு தயாராகத்தான் இருந்தார் என்பதையும் கோவை மாநகர போலீஸ் உறுதிப்பட தெரிவிக்கிறது அவர் இரண்டு செல்பேசிகளை எடுத்து வந்திருந்தார். ஒரு செல்பேசி குண்டுவெடிப்பில் சேதம் அடைந்து விட்டது இன்னொரு செல்பேசியை கோவை போலீஸ் கைப்பற்றியது அதில் கிடைத்த ஆதாரங்களை வைத்து தான் விசாரணை தொடங்கியது. கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த ஒரு மாதத்தில் மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது இதில் ஷாரிக் உயிரோடு பிடிபட்டார். ஜமேஷா முபின் ஷாரிக் இருவருக்கும் ஐஎஸ் தொடர்பு இருந்தது உறுதிப்பட தெரிந்தது.

கலந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தற்சமயம் கார் சிலிண்டர் வெடிப்பு மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு இரண்டுமே தீவிரவாதிகள் மிகப்பெரிய திட்டமிட்டு ஏதோ செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது இந்த இரண்டு சம்பவத்தின் மூலம் தெரிந்தது இந்த முறை தீவிரவாதிகள் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பி இருப்பதை புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக கண்காணிக்கின்றன.