தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு - இதழ் 1

மிழ் எனில் இயல் இசை நாடகம் என்று சொல் வடிவில் அறிந்திரிக்கின்றோம்.

தையே சட்டென மனதில் நிற்பது போல் ஒரு அடையாளப்படுத்தும் படம் ஒன்று தாருங்களேன் என நமது திரு. பரணீதரனிடம் வினவியது தான் தாமதம், அமைத்தார். அனுப்பிவிட்டார். இதோ அந்த படம் நமக்கு.

20230025232705889.jpg

டப்பக்கத்தில், குறிஞ்சி (மலை), முல்லை (காடு), மருதம் (வயல்), நெய்தல் (கடல்) என நான்கு திணைகளும், வலப்பக்கத்தில், குழல், யாழ், பறை என்ற மூன்று இசைக்கருவிகளும் கீழ் மத்திய பகுதியில், தேன் (கம்ப ராமாயண நாடகம்), அமுதம் (புரட்சிக் கவி காப்பியம்) என இரண்டு பானங்களும், மேல் மத்திய பகுதியில் திலகமும் அமையப்பெற்றுள்ளன. குறிப்பாக, திலகம் –

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

(தமிழ் தாய் வாழ்த்து - மனோன்மணீயம் நாடகம்)

வையனைத்தும் தமிழுக்கு அணி சேர்க்கும் அங்கங்களாகும் என்று ஒரு சிறு குறிப்பும் கொடுத்துவிட்டார்.

வாருங்கள் பரணீதரனுடன் பயணிப்போம் தமிழோட கதையைக் கேட்க…

னி பரணீதரன்...... தொடர்கிறார்

லக்கணம் என்றால் என்ன ?

ரு மொழிக்கு அழகையும் பாங்கையும் கொடுப்பது இலக்கணமாகும். இன்று நாம் பயன்படுத்தும் லட்சணம் என்ற சொல்லின் பழந்தமிழ் சொல்லே இலக்கணம் ஆகும். லட்சணம் என்ற வடமொழிச் சொல்லை நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். லட்சணம் என்று வடசொல்லே தமிழ்ச் சொல்லாக மாறும் பொழுது இலக்கணம் என்றானது. பொதுவாக ஒரு தமிழ்ச் சொல் ‘ல’ என்ற எழுத்தில் தொடங்காது. அவ்வாறு ஒரு சொல் ‘ல' என்று தொடங்க வேண்டுமானால் சொல்லில் முன்னாள் ஒரு ‘இ’ சேர்க்கப்படும். எடுத்துக்காட்டாக

லட்சணம் (அழகு, பண்பு) - இலக்கணம்

லட்சுமி (திருமகள்) - இலக்குமி

லட்சுமணன் (இளையபெருமான்) - இலக்குவன்

லட்சியம் (குறிக்கோள்) - இலக்கியம்

லஞ்சம் (கையூட்டு) - இலஞ்சம்

லாபம் (நற்பயன்) - இலாபம்

லத்தின் (Latin) - இலத்தின்

லாந்தர் (Lantern) - இலாந்தர்

லந்து (நகுதல், எள்ளி நகையாடுதல்) - இலந்து

மேற்கூறிய சொற்கள் பெரும்பாலும் வடமொழிச் சொற்களாகவோ அல்லது ஆங்கிலச் சொற்களாகவோ உள்ளது. அந்த சொற்களை தமிழ்ப் படுத்தும் போது தமிழ் இலக்கணத்திற்கு உட்படுத்தப்பட்டு இவ்வாறு மாறியுள்ளது.

சில பழந்தமிழ் சொற்களை நாம் தெரிந்தோ தெரியாமலோ இன்றும்கூட ‘இ' சேர்த்து சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எடுத்துக்காட்டாக - இலகு ( சிறிய / மென்மையான), இலவசம் (விலையிலி), இலங்கை ( சிங்கள மக்கள் இன்று இந்த நாட்டை ஸ்ரீலங்கா என்று அழைக்கிறார்கள். ஆனால் பழந்தமிழ் நாட்டில் இந்த நாட்டை ஈழம் என்றே அழைத்தனர்), இலக்கியம், இலக்கணம், இலவம்பஞ்சு போன்றவை.

பொதுவாக, இலக்கியத்திலிருந்து பிறப்பது இலக்கணமாகும். இலக்கியங்களை இலக்கண அறிவு இல்லாமலும் நம்மால் படிக்க முடியும். அதாவது, ஒருவருக்கு இலக்கண அறிவு இல்லாமல் கேள்வி அறிவால் கூட ஒரு மொழியை சரியாகப் பேச முடியும். ஆனால் இலக்கண அறிவு இருந்தால்தான் ஒரு சொல் எதனால் இவ்வாறு அமைகிறது என்று புரியும். இலக்கணம் நன்றாக தெரிந்த ஒருவர் ‘லட்சணம்’ என்ற சொல்லை ஒருபோதும் கூறமாட்டார் மாறாக ‘இலக்கணம்’ என்ற சொல்லையே பயன்படுத்துவார். இலக்கணம் என்று சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. அதற்கு மாறாக எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்றே கூறப்படுகிறது. பனம்பாரனார் தொல்காப்பியத்திற்கு எழுதியுள்ள சிறப்புப் பாயிரத்தில் கூட முத்து நூல், பனுவல், எழுத்துமுறை, புலம் தொகுத்தோன் என்றே எழுதி உள்ளாரே தவிர இலக்கண நூல் என்று எங்கேயும் எழுதவில்லை. அந்தப் பாயிரத்தை (பாசுரம்) கீழே பார்க்கலாம்.

பனம்பாரனார்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து

அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோனே.

தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் யாதெனின் :

1. தமிழ்நாடு என்பது வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரி (கன்னியாகுமரிக்கு தெற்கே உள்ள பகுதி. இப்பொழுது உள்ள கன்னியாகுமரி வடகுமரி என்று அழைக்கப்பட்டது).

2. எழுத்து, சொல் மற்றும் பொருளிற்கு தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார்.

3. இவர் இலக்கணத்தை செய்தார் என்பதை விட இலக்கணத்தை தொகுத்துள்ளார் என்றே நாம் தெரிந்து கொள்கிறோம் (புலம் தொகுத் தோனே). அதாவது இவர் காலத்திற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பது இங்கு நமக்கு தெரிகிறது.

4. நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் இவர் தொல்காப்பியத்தை அரங்கேற்றம் செய்துள்ளார். இந்த நிலந்தரு திருவின் பாண்டியன் என்பவன் தொன்மதுரையை தலைநகராகக்கொண்டு முதல் சங்கத்தில் இருந்த பாண்டிய மன்னன். தொன்மதுரையை கடல்கோள் (Tsunami) கொண்ட பிறகு கபாடபுரத்தை நிறுவி அங்கு ஆட்சி செய்தவன். ஆதலால் தொல்காப்பியம் முதல் சங்கம் முடிந்தவுடன் இடைச்சங்க காலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய வில்லாற்றலினால் மற்ற இரு வேந்தர்களையும் (சேரன், சோழன்) மற்ற வேளிர்களையும் (சிற்றரசர்கள்) வென்று அவர்கள் நிலங்களை ஆட்சி செய்தவன். அதனால் இவனை ‘நிலம் தரும் திரு வில் பாண்டியன்’ என்று அழைத்தனர்.

5. நான்மறைகள் (வேதம்) உணர்ந்த அதங்கோடு (இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்) என்கிற ஊரினரான ஆசான் (ஆசிரியர்) முன்னிலையில் தொல்காப்பியம் அரங்கேறியது.

6. இந்திரன் இயற்றிய ஐந்திரம் என்ற நூலை நன்றாக கற்றவர் தொல்காப்பியர். இந்த ஐந்திரம் என்ற நூல் இப்பொழுது இல்லை. பாணினி கூட தன்னுடைய வடமொழி இலக்கணத்திற்கு ஐந்திரத்தை சில இடங்களில் கையாண்டுள்ளார்.

7. நூல்களை இலக்கியமாகும் காப்பியமாகும் பிரித்திருக்கிறார்கள். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருட்களில் ஏதேனும் சிலவற்றையோ அல்லது அனைத்தையும் அடைவதற்கு ஒரு மனிதனை தூண்டும் நூலே இலக்கியமாகும். ஒரு மனிதனின் லட்சியத்தை உருவாக்குவது இலக்கியமாகும். தூய தமிழில் இலக்கியத்தை செய்யுள் (செய் + உள்) என்று கூறுவோம். ஒரு செயலை நம் உள்ளிருந்து செய்ய வைப்பது செய்யுள் ஆகும். காப்பியம் என்பது ஒரு காப்பிய தலைவனை வைத்து அவனுடைய வாழ்க்கையை காட்டி அதன் மூலமாக ஒரு மனிதனுக்கு நல்வழி ஊட்டி அவனை உய்வடையச்செய்வது. அதனால் தொல்காப்பியர் தன்னுடைய நூலுக்கு தொல்காப்பியம் என்ற பெயர் சூட்டி இருக்கமாட்டார். தொல்காப்பியர் என்ற பெயரை வைத்து இந்த நூலின் பெயர் தொல்காப்பியமாக இருக்கும் என்று யூகமே உள்ளது.

மிழின் இலக்கணத்தின் தொன்மை, தமிழ்நாட்டை பற்றிய வடநாட்டு இலக்கிய சான்றுகள், தமிழ் சங்கம் உருவான வரலாற்று கதை, சங்க காலத்தில் அழிந்து போனதாக கூறப்பட்ட ஒரு ஆறு இன்றும் நம் அருகிலேயே ஓடுகிறது. அந்த ஆற்றை பற்றிய செய்தி போன்ற தகவல்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்........