Heading : '.... என்றான் அவன்.' (4)- என் குமார்
Comment : ச்சும்மா 'நச்'சுனு இருக்கு காமெண்ட் என்.குமாரு! வாராவாரம் ஆவலைத் தூண்டுகிறது உங்களின் 'பஞ்ச்' வசனங்கள்!
கங்காதரன், சியாமளா தேவி , கொச்சின்
***
Heading : ஏக் கெள மே ஏக் கிசான் - உடைந்த இ.ண்.டி.யா. கூட்டணி !! ஸ்டாலின் மகிழ்ச்சி !! - விகடகவியார்.
Comment : எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... ரகுவோட தாத்தா யாரு...?
Heading : ஏக் கெள மே ஏக் கிசான் - உடைந்த இ.ண்.டி.யா. கூட்டணி !! ஸ்டாலின் மகிழ்ச்சி !! - விகடகவியார்.
Comment : இந்திரா காந்தி காலத்திலேயே கருணாநிதி தலைமையிலான திமுக, கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியை முதுகில் சுமக்க ஆரம்பித்து, ஸ்டாலின் காலம்வரை நீடித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒருசில எம்பி, எம்எல்ஏ சீட் கிடைத்து கெத்தாக வலம் வருகின்றனர். 'நிதீஷ்குமார் விஷயத்தில் ஸ்டாலினை பகைத்து கொண்டால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம பாராளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் நுழைய ஆள் இருக்காதே...' என்ற பயம் இந்தியா கூட்டணியின் தலைமையான காங்கிரசுக்கு இருக்கலாம்!
சந்திரிகா, மேகநாதன், தில்லைநாயகம் , நாகர்கோவில்
***
Heading : பராக் பராக் ! த.வெ.க பராக் !! இதோ இன்னொரு கழகம்.!! விஜய் புதுக் கட்சி - விகடகவியார்
Comment : இளைய தலைமுறை அரசியல் வரலாற்றில் அண்ணாமலை, உதயநிதி, நடிகர் விஜய் ஆகிய 3 பேரும் தனியார் கூரியர் நிறுவனத்தின் அதிவேக சரவெடி... பின்னது ரெண்டும் (அன்புமணி, பிரபாகரன்) தனியார் கூரியரில் தொற்றி செல்லும் தபால்காரர்களாகத்தான் இருப்பார்கள். தனி ஆவர்த்தனம் கிடையாது. இருக்கிறதை காப்பாத்திக்க நினைப்பவர்கள்!
காந்தாமணி, யசோதை, நாகநாதன் , உக்கடம், கோவை
Heading : வலையங்கம் வேண்டாம் காலதாமதம்
Comment : அமைச்சர்கள், முதல்வர் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் செல்வாக்கு மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அரசின் விசாரணை அமைப்புகள் பின்வாங்கி, வழக்கின் போக்கை திசைதிருப்பி காலதாமதப்படுத்துகின்றன. ஆனால், எளிய மக்கள் மற்றும் ஒருசில அப்பாவி அதிகாரிகளின் மீது விசாரணையை தீவிரப்படுத்தி தண்டனை வாங்கித் தருகின்றன. இதனால் நீதிமன்றத்தின் நேரம் விரையமாகி, சாதாரண தாலுகா கோர்ட்டுகளிலேயே லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. இஸ்லாமிய நாடுகளை போல் போதிய ஆதாரங்களுடன் குற்றங்கள் நிரூபணமானால் அரசியல்வாதிகளுக்கு கூட உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்தியா வல்லரசாவது நிச்சயம்.
ருக்மணிதேவி, சத்தியபாமா, பிரபா, செங்கல்பட்டு
***
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 10 - ரேணு மீரா
Comment : இக்கால குழந்தைகளின் நிலையை அழகாக எழுதியிருக்கிறீர்கள் ரேணு ! வாழ்த்துகள் !💐💐 பயனுள்ள பதிவு ! தொடர்ந்து எழுதுங்கள். தன் குழந்தைகளிடம் கண்டிப்பாக இருந்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பிறகு தன் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சம் செல்லம் கொடுக்கத்தான் தாத்தா பாட்டிகளுக்கு ஆசையாக இருக்கும். கண்டிப்பாக இருக்கவும் முடியாமல் செல்லம் கொடுக்கவும் முடியாமல் நடுநிலையில் நின்று வளரப்பது அந்த வயதில் கொஞ்சம் சிரமம் என்று நினைக்கிறேன் .
கல்யாணிஶ்ரீதர், சென்னை
Heading : பெண்களுக்கான சுய அதிகாரம் -11 - பத்மா அமர்நாத்
Comment : பெண்கள் எப்படி உறுதியோடு முன்னேற வேண்டும் என்று அழகாக உதாரணங்களோடு எடுத்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் பத்மா!💐💐 ஜோய்டா சென் மற்றும் ராஷிகா அவர்கள் இருவரின் இவ்வித வெற்றிக்கு முன்பு இருந்த பொருளாதார நிலையையும் விளக்கி கூறினால் இன்னமும் கதைக்கு பலம் கூட்டும் என்பது என் பணிவான கருத்து . 😁😁
கல்யாணிஶ்ரீதர், சென்னை
Heading : நடந்தது - ஜாசன்
Comment : மிக மிக சிறப்பாக இருந்தது.தொடரட்டும் தங்களுடைய இந்த பணி.வாழ்க வளமுடன் பார்க்கவன் Reston USA
Heading : " நவீன ஊட்டியை உருவாக்கின ஜான் சலிவனின் நினைவிடத்தில் விகடகவி " - ஸ்வேதா அப்புதாஸ் .
Comment : ஊட்டியை கண்டுபிடித்த ஜான் சல்லிவனின் சொந்த ஊருக்கு சென்று, அவரது கல்லறையை வழிபட்டு வந்த பயண அனுபவங்களை மிக அழகாக விளக்கியுள்ளார் ஸ்வேதா அப்புதாஸ். நாங்களும் உடன்வந்தது போல் மகிழ்ச்சி அளிக்கிறது.
கல்பனா, மஞ்சுளா, பாகீரதி , கும்பகோணம்
Leave a comment
Upload