தொடர்கள்
அரசியல்
உத்திரகாண்ட் பொது சிவில் சட்டம்- மாலாஸ்ரீ

20240109183419910.jpg

உத்தராகண்ட் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் 144 தடை

உத்தரவுடன் கடந்த 3 நாட்களாக உறுப்பினர்களின் விவாதம் மற்றும்

எதிர்ப்பை மீறி, கடந்த 7-ம் தேதி மாலை முதன்முதலாக அம்மாநில

பாஜ அரசினால் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர்

அம்மசோதா மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி

வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்ததும் விரைவில் சட்டமாகி

அமலுக்கு வந்துவிடும். இதன்மூலம் பொது சிவில் சட்ட மசோதாவை

அமல்படுத்திய முதல் மாநிலம் உத்தராகண்ட் ஆகும். இதைத்

தொடர்ந்து, மிக விரைவில் அசாம், குஜராத் மாநிலங்களும் பொது

சிவில் சட்டத்தை அமல்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ அரசுபொறுப்பேற்றது. பின்னர் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில்நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில்பொது சிவில் சட்டத்தை விரைவில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்

தலைமையில் 5 பேர் கொண்ட குழு, உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது

சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. இக்குழுவில்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, உத்தராகண்ட் மாநில

முன்னாள் தலைமை செயலாளர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக

துணைவேந்தர் சுரேகா தங்வால், சமூக செயற்பாட்டாளர் மனு கவுர்

ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இக்குழு சமீபத்தில் 740 பக்கங்கள், 4 பகுதிளை கொண்ட பொது சிவில்

சட்ட முன்வரைவை தயாரித்து, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங்

தாமியிடம் வழங்கியுள்ளது. முன்னதாக, இக்குழு ஆன்லைன் மூலமாக

லட்சக்கணக்கான மக்களிடம் கருத்துகளை பெற்றதாகவும்,

இதுதொடர்பாக 43 கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி, சுமார் 60 ஆயிரம்

பேரிடம் பேசியதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

இதன்படி, இந்திய அரசியலமைப்பில் குற்றவியல், தண்டனை

சட்டங்கள் போன்றவை சமமான நிலையில்,

திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு,

மகன்களுக்கும் மகள்களுக்கும் சமமான சொத்துப் பங்கீடு, திருமண

உறவில் பிறந்த குழந்தைகள் மற்றும் திருமண உறவுக்கு அப்பால்

பிறந்த குழந்தைகளுக்கு இடையிலான வேறுபாட்டை நீக்கி,

இறப்புக்குப் பிறகு சமமான சொத்துரிமையை வழங்குவது, சொந்த

குழந்தைகளுக்கு வழங்குவது போல் தத்தெடுக்கப்பட்ட

குழந்தைகளுக்கும் சம உரிமை வழங்குவது, பரம்பரை மற்றும் வாரிசு

உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தனிநபர் சார்ந்த சிவில்

சட்டங்கள் மட்டும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கோட்பாட்டின்

அடிப்படையில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், பௌத்தர்,

ஜெயின், பார்சிக்கள் என பல்வேறு மதத்தினருக்கு தனித்தனியே

சட்டப்பிரிவுகள் உள்ளது. இவற்றை ஒருங்கிணைத்து

ஒன்றாக்குவதுதான் பொது சிவில் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.

இந்த சட்ட மசோதாவில் லிவ்-இன் டுகதர் உறவில் இருப்போர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்விதிகளை கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் ₹25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். அதேபோல், பலதார திருமணங்களுக்கு தடை உள்பட பல்வேறு சிறப்பம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன் கோவா மாநிலத்தில் போர்ச்சுக்கீசிய ஆட்சி இருக்கும்வரை ஏற்கெனவே இந்த பொது சிவில் சட்டம் அமலில் இருந்தது. விரைவில் குஜராத் உள்பட பாஜ ஆளும் மாநிலங்களில் விரைவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.