தொடர்கள்
கவர் ஸ்டோரி
தேர்தல் திருவிழா !! கிளைமேக்ஸ் காட்சிகள் !-ஆர்.ராஜேஷ் கன்னா

20240319131543163.jpeg

நன்றி: தினமணி

தமிழகத்தில் 39 ,பாண்டியில்1 ஆக 40 நாடாளுமன்ற தொகுதிக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.

வாக்குகளால் விரட்டி அடிப்போம் என்று திமுகவும்,

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என்று அதிமுகவும்,

உங்கள் ஒரு வாக்கு , மீண்டும் ஒரு முறை மோடி அரசு என பிஜேபியும்.. இந்த முறை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தனர்.

தமிழகம் மற்றும் புதுவை 40 நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மக்கள் தங்கள் வேட்பாளர்களை ஒரு முறையாவது பார்த்தார்களா என்றால் இல்லை என்றே பொதுஜனங்கள் இடையே கருத்தாக உள்ளது.

பிரதான கட்சிகள் 40 தொகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தங்களது கூட்டத்தினை பிரமாண்டமாக கூட்டி கார்ப்பரேட் அரசியலை இந்த தேர்தலில் துவக்கி வைத்துள்ளது.

இப்படி பட்ட கார்ப்பரேட் கூட்டங்களை வட இந்திய மக்கள் இந்தி தொலைக்காட்சிகளில் பார்த்து வாய் பிளந்து நிற்கின்றனர்.

விஜயவாடாவை தாண்டி வட இந்திய மக்கள் தேர்தல் திருவிழாவை கொண்டாடுவதில்லை .

அரசியல்வாதிகளை அங்கே யாரும் பொதுவாக கண்டு கொள்ளமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் ஸ்டார் வேட்பாளர்கள் பற்றி தேர்தல் திருவிழா கடைசி நேர க்ளைமாக்ஸ் ஒரு சின்ன ரவுண்ட் அப்…

சவுமியா அன்புமணி ராமதாஸ்…..

20240319131644609.jpeg

பாட்டாளி மக்கள் கட்சியின் பிரதான வேட்பாளர் சவுமியா ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தியாவின் அனைத்து மீடியாக்களும் சவுமியாவின் சுறுசுறுப்பான பிரசாரத்தை ஒளிப்பரப்பியது. 35 சதவீத வன்னிய வாக்காளர்களை நம்பி களத்தில் நிற்கிறார். திமுக ,அதிமுக பிரச்சாரம் இங்கே கொஞ்சம் அடக்கியே வாசித்தார்கள் என்று சொல்கிறார்கள் கட்சியினர்.

கனிமொழி

20240319131757513.jpeg

தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி ,முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் மகள் , தற்போதைய தூத்துக்குடி எம்.பி என்ற பலத்துடன் தொகுதியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கனிமொழிக்கு வேலைப்பார்த்த கழகத்தினர் தற்போது தங்கள் ஊர்களுக்கு திரும்பி வந்துள்ளனர். கனிமொழிக்கு எதிராக பிஜேபியில் நடிகை ராதிகா போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சோலோவாக கனிமொழி தேர்தல் பிரசாரத்தினை முடித்து கொண்டார்.

ராயபுரம் மனோ

20240319183803829.jpg

வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ வடசென்னையில் ஏற்படும் மழை காலத்து வெள்ளம் மற்றும் காற்று மாசு பற்றி பேசி மக்கள் கவனத்தினை ஈர்த்துள்ளார்.

திருமாவளவன்.

20240319134211629.jpg

20240319131828541.jpeg

வி சி க கட்சியின் தலைவர் திருமாவளவன் சுட்டெரிக்கும் வெயிலில் சிதம்பரம் தொகுதியில் தனது பானை சின்னத்துடன் சுற்றி வந்தவருக்கு தனது இருபாதங்களும் வீங்கிய நிலையில் பிரச்சாரத்தினை முடித்தார்.

அண்ணாமலை

20240319131915968.jpeg

கோயம்புத்தூர் தொகுதி நாடாளுமன்ற பிஜேபி வேட்பாளர் அண்ணாமலை , தனது தொகுதியில் பம்பரமாக சுற்றி வந்து தேர்தல் பிரச்சாரத்தினை முடித்தார். தன்னை எப்படியாவது வீழ்த்தி விட பணத்தினை வைத்து வென்றுவிடலாம் என்று திமுக நினைக்கிறது.கோவையில் பாஜக பணம் கொடுத்தது என்று நிருபித்தால் அரசியலை விட்ட விலக தயார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாக்களித்த பின் தெரிவித்தார்.

ஆ.ராசா

20240319132242455.jpeg

நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தனது முந்தைய கால சேவை நீலகிரி மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் பிரச்சாரத்தை முடித்தார்.

எல். முருகன்

20240319132515269.jpeg

நீலகிரி நாடாளுமன்ற பிஜேபி வேட்பாளர் எல் .முருகன் தனது பிரச்சாரத்தினை முடித்தவர் , நீலகிரி ஸ்டார் வேல்யூ தொகுதியாக மாற்றி காட்டுவேன் என்றார்.

ராதிகா சரத்குமார்.

20240319132627803.jpeg

சித்தி தொடர் கதாநாயகி நடிகை என்ற அடைமொழியுடன் பிஜேபி விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளர் ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராதிகா வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் என்று ஒரு சாரார் வாக்கு சேகரித்தது கடைசி நேர தேர்தல் பிரசார ஹைலைட்.

தயாநிதி மாறன்.

20240319132708720.jpeg

மத்திய சென்னை என்றால் எப்போதும் திமுக கோட்டை என்றே சொல்ல வேண்டும் . இந்த தடவை தயாநிதிமாறன் தனது பிரச்சாரத்தினை கொளுத்தும் வெயிலில் தனது தொகுதியை சுற்றி சுழன்று வந்தார். பிஜேபி வேட்பாளர் வினோஜ் பி செல்வம் , முரசு வேட்பாளர் இருவரும் தயாநிதி மாறனுக்கு கடுமையான டப்-பைட் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் டென்ஷனான தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சார இறுதி நாளில் தனது தொகுதி நிதியை சரிவர பயன்படுத்தவில்லை என்று எடப்பாடி பேசியதால் அவர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கும் போட்டுவிட்டார்.

ஜான் பாண்டியன்

20240319132755952.jpeg

தென்காசி பிஜேபி வேட்பாளர் ஜான் பாண்டியன் தனது பிரச்சாரத்தில் தாமரை மலரும்.. தென்காசி வளரும் என்று அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார்.

வழக்கறிஞர் சுதா

20240319133006418.jpeg

மயிலாடுதுறை தொகுதி க்கு மணிசங்கர் அய்யரின் மகள், ராஜ்குமார் எம்.எல்.ஏ. இருவரும் போட்டியில் இருந்தனர்.ராகுல் காந்தி நடைபயணத்தில் அவருடன் நடந்து சென்ற வழக்கறிஞர் சுதா வேட்பாளராக தற்போது களத்தில் இருக்கிறார். ராகுல் காந்தியின் சாய்ஸ் வழக்கறிஞர் சுதா என்பதால் இவரும் ஸ்டார் அந்தஸ்து பெற்ற வேட்பாளர் ஆகி விட்டார்.

தமிழிசை சௌந்திரராஜன்

20240319133047134.jpg

முன்னாள் கவர்னர் , பிஜேபியின் தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் தொகுதியில் வெயிலில் சுற்றி சுழன்று வந்தார். தனது வாக்காளர்களுடன் நடந்த ஜும் மீட்டிங்கில் எதிர் கட்சியை சேர்ந்த சிலர் ஹேக் செய்து அருவருக்க தக்க படத்தினை ஒளிபரப்பி விட்டனர் என்று கடும் கோபத்தில் இருக்கிறார். தன்னுடைய பிரச்சாரம் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியணை விட ஒரு படி தூக்கலாக இருக்க வேண்டும் என்று கடைசி வரை தனது பிரசாரத்தினை நடத்தி முடித்துகொண்டார்.

நயினார் நாகேந்திரன்

20240319133427498.jpeg

திருநெல்வேலி நாடாளுமன்ற பிஜேபி வேட்பாளர் வெற்றிபெறுவார் என்று சுப்பிரமணியம் சுவாமி சொல்லி விட்டு சென்றுள்ளார்.

விஜயபிரபாகர்

20240319133754314.jpeg

விருதுநகர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் , நடிகர் விஜய்காந்த் மகன் என்று ஆனந்தமாக தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

டிடிவி தினகரன்

20240319133839114.jpeg

வாக்குப்பதிவு நாளின் ஒவ்வொரு நொடியும் நமக்கானது என்பதை உணர்ந்து பணியாற்றுவோம் என்று தேனி நாடாளுமன்ற தொகுதி அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன் தனது பிரச்சாரத்தை முடித்து கொண்டார்.

ஸ்டார் தொகுதி வேட்பாளர்கள் யார் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

தேர்தல் ஆணையம் எந்த கணிப்பையும் வெளியிட தடை விதித்து விட்டது.

வருகிற 4.6.2024 வாக்கு எண்ணிக்கைக்கு பின் வெற்றி வேட்பாளர்கள் யார் என்று இந்திய தேர்தல் ஆணையமே ரிசல்ட் அறிவிக்கும்.