தொடர்கள்
பொது
" தற்போதைய சுற்றுசூழல் பாதிப்பு மிக பெரிய காலநிலை நெருக்கடி " - ஸ்வேதா அப்புதாஸ் .

சுற்றுசூழல் மிக பெரிய காலநிலை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை என்கிறார் கேரளா கொச்சினை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் நீலகண்டன் .

2024050622501789.jpg

" இப்பொழுது காலநிலை மாற்றம் என்பது மாறி காலநிலை நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

தினமும் ஏற்படும் கால நிலை மாற்றத்தை கணிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில் உலகமே இருக்கிறது " என்று கூறும் நீலகண்டன்

தற்போது கொட்டி தீர்க்கும் திடீர் மழை பின் கொடுமையான வெப்பம் வறட்சி இதை நம் தமிழ்நாடும் கேரளாவும் சந்தித்து கொண்டிருக்கிறது .

20240506225057686.jpg

இந்த கொடுமையான மழைக்கும் வறட்சிக்கும் நம்ம நிலம் சாதகமாக இல்லை என்பது தான் நித்சர்சனம் .

மேலும் அவர் தொடர்ந்தார் சற்று அதிர்ச்சியாக !

" காலநிலை நெருக்கடியில் இருந்து எப்படி நம்மை காப்பாறிக்கொள்வது இந்தியாவின் அவசர பங்கு என்ன என்றால் கார்பன் பாதிப்பை குறைக்க வேண்டும் .

காடுகளையும் இயற்கை வளங்களை பேணிக்காத்து கான்க்ரீட் காடுகளை தடுத்து நிறுத்த வேண்டும் .

20240506225149865.jpg

கேரளாவில் பலத்த மழை பெய்வது மிக பெரிய ஆபத்து அழிவை ஏற்படுத்துகிறது .தற்போது மேக வெடிப்பு ஏற்பட்டு ஒரே இடத்தில் பயங்கர மழை கொட்டுவது பெரிய ஆபத்தை ஏற்படுத்துகிறது .

20240506225232137.jpg

ஒரு இடத்தில் ஒரு வாரத்திற்கு 6 சென்டிமீட்டர் முதல் 10 சென்டிமீட்டர் மழை பெய்தால் ஓகே அதுவே ஒரே நாளில் கொட்டி தீர்த்தால் நம் நிலம் தாங்குமா அது தான் மிக பெரிய அழிவை சந்திக்க வேண்டியுள்ளது.

இதனால் சுற்றுசூழல் மிக பெரிய பாதிப்பை சந்திக்கிறது என்கிறார் .

மழை தண்ணீர் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்கிறது சென்னையில் கோடம்பாக்கத்தில் மழை கொட்டி தீர்க்க தண்ணீர் பாரிமுனை சென்று கடலில் கலக்க முடியாமல் தவிக்கிறது காரணம் மழை நீர் போக வழியில்லை இப்படி எல்லா ஊர்களிலும் வெள்ளம் வெளியேறும் கால்வாய்கள் மிஸ்ஸிங் . சதுப்பு நிலங்கள் வயல்கள் இருந்தால் மழை நீர் வடிந்து கடலில் கலக்கும் .

2024050622534249.jpg

திருச்சூரில் மிக அதிகமான கிரிஷிகள் அது தான் வயல்கள் தற்போது எல்லாம் காணவில்லை முழுக்க முழுக்க கான்க்ரீட் காடுகள் உருவாகியிருப்பது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது அரசுக்கு தெரியாமல் இருக்குமா ?! என்கிறார் .

இந்த கான்க்ரீட் காடுகளின் விளைவு பெங்களூரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்த கார்டன் சிட்டியில் .

கேரளாவில் நிறைய புழாக்கள் இருந்தாலும் அதன் நடுவே டேம் கட்டியிருப்பதால் தண்ணீர் பயணம் தடைபெறுகிறது .

இப்படித்தான் இடுக்கி அணை, முல்லை பெரியார் அணை நான்கு நாளில் நிரம்பி விடும் சூழ்நிலை ஏற்படுகிறது .

கேரளா பெரு வெள்ளம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது .

2013 ,18,19 ஆம் ஆண்டு வெள்ளத்தில் கொச்சின் தத்தளித்தது .

20240506225454889.jpg

இங்கு உள்ள சர்வதேச ஏர்போர்ட் வயல் வெளியாக இருந்தது .

அதை அழித்து எட்டு முதல் பனிரெண்டு அடி மண் நிரப்பி உயர்த்தி கட்டிவிட்டதன் விளைவு வெள்ள பெருக்கு எட்டப்படுகிறது .

கால்வாய்கள் இருந்த பகுதிகள் எல்லாம் வீடுகள் கட்டிடங்கள் வர மழை நீர் எப்படி கடலை தேடி செல்லும்" என்கிறார் நீலகண்டன் .

மேலும் அவர் சற்று ஆவேசமாக கூறினார் ,

" மழை நீருக்கு மாவட்டம் , தாலுகா , அரசியல் தெரியுமா ?! சொல்லுங்க மழை கொட்டினால் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு அது ஓடும் சரியான வழி இல்லாமல் போகும் போது வெள்ளம் எல்லாவற்றையும் அடித்து கொண்டு தான் செல்லும் யார் தடுக்க முடியும் ".

எல்லா நகரங்களிலும் வெள்ளம் போகும் வழியை பிளான் செய்வது அவசியம் .

தென் மேற்கு பருவ மழை வட கிழக்கு பருவமழை கூட தன் போக்கை மாற்றிவிட்டது என்று கூறலாம் .

2015 ,18 , 19, 20 ஆண்டுகளில் தொடர் பலத்த மழை செஞ்சுரி அடித்தது என்று கூறுவது சரியில்லை 1924 மிக பெரிய மழை கொட்டி அழிவு ஏற்பட்டுள்ளது .

இந்த காலநிலை நெருக்கடியால் விவசாயம் தகர்ந்து போயுள்ளது .

20240506225555254.jpg

மற்ற ஒரு விஷயம் உலகம் வெப்பமயமாகிக்கொண்டிருப்பது சுற்றுசூலை மிகவும் பாதித்துள்ளது இதனால் கடல் வெப்பமாகி குறைந்த காற்றழுத்தம் ஏற்படுகிறது . கடல் அதிகமாக வெப்பமாகி கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்க படுகிறது .தற்போது அரேபிய கடல் வெப்பமாகியுள்ளது .

நில வெப்பத்தை விட கடல் வெப்பம் பாதிப்பை ஏற்படுத்தும் .

கடல் காற்று மேகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்பாராத மழையை உருவாக்குகிறது அண்மையில் இப்படிப்பட்ட மழை பொழிவை தான் அனுபவித்து வருகிறோம் .

துபாயில் கொட்டி தீர்த்த மழையால் வெள்ளத்தையே சந்திக்காத துபாய் தத்தளித்தது .

குளு குளு ஊட்டி கொதிக்கிறது ஷாக்கிங் அங்கு மரங்கள் வெட்டப்பட்டு ஏகப்பட்ட கட்டிடங்கள் உருவாகி குளிர் குறைந்துள்ளது .

20240506225702665.jpg

அதிக மக்கள் கூட்டம் வாகன நெரிசல் கார்பனால் வெப்பம் அதிகரிக்கிறது காற்று மாசு ஆகியுள்ளது இதை தடுக்காவிட்டால் வெப்பம் அதிகம் மிக அதிக மழைபொழிவை தடுக்க முடியாது என்கிறார் .

20240506225756228.jpg

தற்போது சுற்றுசூழலை மிகவும் பாதிப்பது பிளாஸ்டிக் பொருட்கள் தான் .இதன் வேதியல் மாற்றம் மிக பெரிய ஆபத்தை விளைவிக்கிறது .

20240506230722507.jpg

உணவு , விலங்குகள் , காய்கறி விளைச்சல் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வருகிறது .

இதில் ஜூஸ் குடிக்கும் ஸ்ட்ரா எதோ சிறியது என்று தான் உபயோகித்த பிறகு தூக்கி போடுகிறோம் அவை மழை வெள்ளத்தில் கடலுக்கு அடித்து சென்று கலக்க நீல திமிங்கலமே பாதித்துள்ளது .

20240506225829494.jpg

திமிங்கலத்தின் வாயில் ஆயிரம் ஸ்ட்ராக்கள் உள்ளே சென்று பெரிய திமிங்கலம் பரிதாபமாக இறந்து போயுள்ளது .

அப்பொழுது அனைத்து பிளாஸ்டிக் பொருள்களின் விளைவு சுற்றுசூழல் அழிவை ஏற்படுத்துகிறது .

இப்படி தான் சுற்றுசூழல் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது .

இதை தடுத்து நிறுத்துவது யார் ?

காலத்துக்கு ஏற்ற இயற்கையோடு கைகோர்த்து திட்டமிட வேண்டிய நேரம் வந்து விட்டது .

20240506225856811.jpg

வருடந்தோறும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கடைபிடிப்பதோடு சரி எந்த மாற்றமும் இல்லை பாதுகாப்பு திட்டங்களும் இல்லை என்பது தான் உண்மை என்கிறார் நீலகண்டன் .