நீலகிரி வெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ அதிகாரிகளுடன் உரையாட ஜனாதிபதி திரௌபதி முர்மு ஊட்டி வருகிறார் என்றவுடன் மாவட்ட நிர்வாகம் பம்பரமாக சூழல்ல ஆரம்பித்து விட்டது .
தீட்டுக்கல் ஹெலிபேட் முதல் பொட்டானிகள் கார்டனுள் வீற்றிருக்கும் ராஜ் பவன் வரை சாலைகளில் உள்ள பெரும்பாலான குண்டும் குழியுமுள்ள சாலைகளில் பேட்ச் வொர்க் படு மும்முரமாக போடப்பட்டது .
தீட்டுகல் ஹெலிபேடில் இருந்து லெக் சாலை , உட் காக் சாலை , கூடலூர் தேசிய நெடுஞ்சாலை , கார்டன் சாலை ஒட்டு போடப்பட்டது .
உட் காக் சாலை ஓரத்தில் வளர்ந்து வெட்டப்படாமல் இருந்த செடிகள் அவசரமாக நகராட்சி ஊழியர்களால் வெட்டப்பட்டது .இந்த சாலையில் அமைந்துள்ள ஒரு பிரபல பள்ளியின் தடுப்பு சுவரில் செடிகள் வளர்ந்திருப்பதை ஜனாதிபதி எட்டி பார்த்து விடக்கூடாது என்று அந்த செடிகளை உடனடியாக வெட்டவேண்டும் என்று போனில் மிரட்டி கொண்டிருந்தார் நகராட்சி சானிடரி இன்ஸ்பெக்டர் .
ஊட்டி குன்னூர் சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலை ஓரங்களில் உள்ள செடிகள் வெட்டப்பட்டு தடுப்பு சுவர்களில் எழுதப்பட்ட அரசியல் விளம்பரங்கள் அவசரமாக அழித்து வெள்ளை அடிக்கப்பட்டது .
ஊட்டி சேரிங் கிராசில் பல மாதங்களாக ஆறாக ஓடிக்கொண்டிருந்த கழிவு நீர் பாதாள சாக்கடை போர்க்கால ஸ்பீடில் சரிசெய்யப்பட்டது .
ஹெலிபேட் முதல் ராஜபவன் வரை ரிகர்சல் என்ற பெயரில் போக்குவரத்தை நிறுத்தி பாதுகாப்பு வாகனங்களின் ஒத்திகை பொது மக்கள் பள்ளிக்குழந்தைகள் அலுவலக ஊழியர்களை எரிச்சலடைய செய்து தலைவலியை ஏற்படுத்தினார்கள் காவல் துறையினர் .
புதன்கிழமை 27 ஆம் தேதி குடியரசு தலைவர் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் முலம் ஊட்டி வருவதாக இருந்தது ஊட்டி ,குன்னூர் கோத்தகிரி முழுவதும் மூடுபனி அரவணைத்து கொள்ள ஹெலிகாப்டர் பறந்து வர முடியாது என்று ஜனாதிபதி சாலை மார்கமாக அழைத்து வரப்பட்டார் .
கோவையில் இருந்து கோத்தகிரி மலை சாலை முழுவதும் ஊட்டி வரை இரண்டாயிரம் போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர் .
இந்த வன சாலையில் யானை , காட்டெருமை , சிறுத்தை , கருஞ்சிறுத்தை , புலி விசிட் அவ்வப்பொழுது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
கால் கடுக்க காட்டில் நிற்கும் காவல் துறையினரை பற்றி கவலை பட தேவையில்லை .
பாதுகாப்பு காரில் சர்ர் என்று வரும் ஜனாதிபதி தான் முக்கியம் என்கின்றனர் .
ஜனாதிபதி ஊட்டி வந்து சேரும் வரை வழிநெடுகிலும் உள்ள அனைத்து சாலையோர கடைகள் எல்லாம் இழுத்து மூடப்பட்டன .
யாரும் சாலையோரத்தில் நிற்க கூடாது என்று விரட்டினார்கள் காவல் துறையினர் .
முந்தின நாள் மாலையே ஜனாதிபதியை வரவேற்க சென்னையில் இருந்து ஊட்டிக்கு விரைந்து வந்தார் தமிழக கவர்னர் ஆர் .என் .ரவி !.
மதியம் ஊட்டி வந்த குடியரசு தலைவரை கவர்னர் , தமிழக அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, எஸ் .பி .நிஷா வரவேற்றனர் .
ஜனாதிபதியின் கான்வாய் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் அருகே வர ஒரு பூனை நடுவில் க்ராஸ் செய்ய ஒரு பாதுகாப்பு அதிகாரி பதறி போய் அந்த பூனையை விரட்ட அது மியாவ் என்று கூலாக கடந்து சென்றது .
வியாழக்கிழமை 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஊட்டி ராஜபவனில் இருந்து புறப்பட்டார் ஜனாதிபதி முர்மு வெல்லிங்டன் ராணுவ முகாமிற்கு .
காலை 6.30 மணி முதலே மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி குன்னூர் கோத்தகிரி சாலை முழுவதும் மூடப்பட்டுவிட்டது .
மதியம் 1.30 வரை பொது மக்கள் திண்டாடிவிட்டனர் .
ஒருவர் நம்மிடம் கூறும் போது , " இன்று வானம் தான் பளிச் என்று இருந்ததே ஏன் ஹெலிகாப்டர் மூலம் அந்த அம்மாவை வெலிங்டன் ராணுவ முகாமுக்கு அழைத்து சென்றிருக்க கூடாது பெரிய தலைவலி சார் , ஓர் ஐடியா இனி இப்படிப்பட்ட வி வி ஐ பிகள் ஊட்டி வரும்போது ஒரு நாள் பந்து அறிவித்து யாரையும் வெளியே வராமல் பார்த்துக்கொள்ளலாம் .எங்குமே இ காக்கா இல்லாமல் அவர்கள் சென்றுவரலாம் "
வெலிங்டன் சென்ற குடியரசு தலைவி முர்மு ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் பின்னர் எட்டு ராணுவ வீரர்களின் விதவைகளை சந்தித்து
அவர்களுக்கு உதவி பத்திரங்களை வழங்கி ஆறுதல் கூறி அவர்களுடன் நின்று படம் எடுத்து கொண்ட பின் நான்கு கம்பிர குதிரைகளின் அணிவகுப்புடன் ராணுவ கல்லுரியினுள் அழைத்துச்செல்லப்பட்டார் . வெலிங்டன் ராணுவ கல்லூரியினுள் முப்படை தலைவியை குதிரைகளின் அணிவகுப்புடன் அழைத்து சென்றது இது தான் முதல் முறையாம் !.
முப்படை அதிகாரிகளுடன் உரையாடி பாராட்டி பேசினார் .
நான்காவது தூண் உறுப்பினர்களை ஒரு மூலையில் அடைத்து வைத்து , " இங்கிருந்து பார்த்துக்கொள்ளலாம் படம் வீடியோ எடுத்து கொள்ளலாம் .இந்த இடத்தை விட்டு வெளியே வந்தால் புல்லட் பாய்ந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்று கூலாக கூறிவிட்டு நகர்ந்தார் ஒரு ராணுவ அதிகாரி .
ஜனாதிபதி முர்முவின் ராணுவ அதிகாரிகளின் சந்திப்பு மற்றும் உரையை பார்க்கவோ கேட்கவோ நான்காவது தூண் உறுப்பினர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்பது ஊடக சுதந்திரம் ஒரு கேள்விக்குறியாக இருப்பதை உணரமுடிந்தது .
மதியம் 1.30 மணிக்கு ஊட்டி ராஜ்பவனுக்கு வந்து உணவு மற்றும் ஓய்வு எடுத்தார் .
29 ஆம் தேதி பழங்குடியினரை சந்தித்து அவர்களின் நடனம் பாடல்களை கண்டுகளித்தார் .
மாலை கவர்னர் வழங்கிய பேன்குய்ட் டின்னர்யில் கலந்து கொண்டார் .அதிலும் நான்காவது துணுக்கு இடமில்லை என்பது வருத்தமான ஒன்று .
முப்பதாம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் திருவாருக்கு சென்றார் .
ஜனாதிபதியின் ஊட்டி விசிட்டால் சாலைகள் மற்றும் நகரே சுத்தம் செய்யப்பட்டது .
இதற்காக ஜனாதிபதி முர்முக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் நீலகிரி வாசிகள் கோபத்திலும் வெறுப்பிலும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை .
Leave a comment
Upload