தொடர்கள்
கவர் ஸ்டோரி
ஏசி அறையில் தூங்கினாரா காமராஜர் ???? - விகடகவியார்

20250618090720668.jpeg

விகடகவியார் உள்ளே நுழைந்ததும் அவருக்காக சூடாக வேர்க்கடலை ஒரு பிளேட்டில் கொண்டு வந்து வைத்தார் ஆபீஸ் பையன்.

"முதல்வர் ரோடு ஷோ ஓரணியில் தமிழ்நாடு மக்களுடன் ஸ்டாலின் என்று தேர்தலுக்காக நிறைய பிளான் பண்ணி செய்து கொண்டிருப்பதை கட்சிப் பெரிய தலைவர்களே அதைக் கெடுத்து விடுவார்கள் போல் தெரிகிறது" என்று ஆரம்பித்தார் விகடகவியார்.

2025061809125831.jpeg

'காமராஜர் பற்றி திருச்சி சிவா பேசியதை சொல்கிறீர்களா ? என்று நாம் கேட்க அதுவும் தான் என்ற விகடகவியார்.

ஏசி இல்லாமல் காமராஜ் தூங்க மாட்டார் என்பது தான் திருச்சி சிவா உதிர்த்த பொன்மொழி.

காமராஜர் காலத்துல ஏதுடா ஏசி என்று ஒரு சாரரும், காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று ஒவ்வொருவரும் ஏன் சொல்ல வேண்டும் என்றும் நெட்டிசன்கள் ஏக கோபத்தில் திமுகவுக்கு எதிராக ஒன்று திரண்டு கொதித்துப் போயிருக்கிறார்கள்.

இப்போது எதற்கு இந்த சர்ச்சை பேச்சு என்று அவரை செல்பேசியில் அழைத்து டோஸ் விட்டார் முதல்வர். காங்கிரஸ் தலைவர்களும், ஆளாளுக்கு திமுகவை தைரியமாக விமர்சனம் செய்ய தொடங்கி விட்டார்கள். தை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் முதல்வர். இது போதாது என்று காமராஜரை கடுமையாக விமர்சனம் செய்து திமுக முரசொலியில் வரைந்த கார்ட்டூன் எல்லாம் இப்போது சமூக வலைத்தளத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. நாடார் ஓட்டு நமக்கு இல்லாமல் போய்விடுமோ என்று பயப்படுகிறார் என்றார் விகடகவியார்.

20250619072447770.jpeg

மாவட்டச் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினாரே அந்த விஷயத்துக்கு வாரும் 'என்றோம் .இதுவரை ஒரு கோடிக்கு அதிகமாக உறுப்பினர்களை சேர்த்ததாக திமுக தலைமை நிலையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. முதல்வரும் அப்படித்தான் சொல்கிறார். ஏற்கனவே ஒன்றரை கோடிக்கு அதிகமாக உறுப்பினர் கொண்ட இயக்கம் என்று திமுக பெருமை பேசும். இப்போது அவர்கள் புள்ளி விவரம் படி பார்த்தால் மூன்று கோடி பேருக்கு கிட்டத்தட்ட திமுக உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதெல்லாம் உண்மையா பொய்யா என்பது தேர்தலில் தெரிந்து விடும் என்றார் விகடகவியார்.

திமுகவில் நிறைய சலசலப்பு கோஷ்டி பூசல் வெளிப்படையாக தற்சமயம் தெரிகிறது. இதெல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் திமுக தலைவர் என்பது தெரியவில்லை என்றார் விகடகவியார்.

அதிமுக விஷயத்துக்கு வாரும்' என்றோம்.

20250618091907858.jpeg

"கூட்டணியில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு தான் என்கிறார் எடப்பாடி. ஆனால் அண்ணாமலை கூட்டணி ஆட்சி பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தால் எடப்பாடி அமித் ஷாவை சந்தித்து தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி இருக்கிறார் சிரித்தார் விகடகவியார்.

அண்ணாமலை கணக்கு தான் என்ன ? என்று நாம் கேட்டோம்.

அவரைப் பொறுத்தவரை எடப்பாடி மீண்டும் முதல்வராக கூடாது அதற்கான வேலையில் தீவிரம் காட்டுகிறார்.

எடப்பாடி அணியில் விஜய் வரக்கூடாது என்பதற்கான வேலையை கிட்டத்தட்ட முடித்து விட்டார் அண்ணாமலை. பத்திரிகையாளர்களை சந்தித்து ஆகஸ்ட் மாசம் பேசுவோம் என்று சொல்லி இருக்கிறார். இப்போதைக்கு திமுகவை கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்து சொல்கிறார்" என்ற விகடகவியாரிடம்' அதெல்லாம் இருக்கட்டும் அண்ணாமலை நடவடிக்கையை டெல்லி தலைமை அங்கீகரிக்கிறதா ? என்று நாம் கேட்டோம் கூடுதலாக சீட்டு வாங்குவதற்காக பேசிக் கொண்டுதான் இப்படி பேச சொல்கிறார்கள் என்கிறார்கள்.

தமிழக பாஜக தலைவர்கள் இது தேவையில்லாமல் குழப்பத்தை தான் ஏற்படுத்தும். அண்ணாமலை தவறாக வழி நடத்துகிறார். இதகட்சி நிர்வாகிகள் பட்டியலையும் வெளியிட விடாமல் தடுத்து வருகிறார் என்று அண்ணாமலை மீது புகார் புராணம் வாசிக்கிறார்கள் தமிழக பாஜக தலைவர்கள் "என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.