யாருடைய உதவியையும் பெறாமல், தானாக வாழ்க்கையில் முன்னேறியவர்களை "சுயம்பு" ஆங்கிலத்தில் Self made என்று சொல்லுவார்கள், இந்த வார "கேரக்டர் " பகுதியில் அப்படி ஒரு சுயம்பு மனிதரைத்தான் இவர் Self made மட்டுமல்ல Selfie made ம் தான்.
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் இருபத்தி ஐந்து வருட காப்பரேட் வேலை அனுபவத்திற்கு பிறகு , சொந்தமாய் தொழில் துவங்கி அதை வெற்றிகரமாய் நடத்தி வருபவர். புறாக்கள் வீட்டின் பால்கனி, ஜன்னல்கள், மற்ற இடங்களில் வந்து தாங்காமல் இருக்க வலை, இன்விசிபிள் க்ரில் மற்றும் சில உபகாரணகள் மூலம் வழி செய்பவர். பெரிய கம்பெனிகள் முதல் தனி வீடுகள், அபார்ட்மெண்ட்டுகள் என இவர் "வலை" க்காத இடமே இல்லை.
எல்லோரோடும் சேர்ந்து பழகுவதில் விருப்பமானவர். செக்யூரிட்டியுடனும் பேசுவார், செலிபிரிட்டியுடனும் பேசுவார். அதை உடனுக்குடன் தனது வாட்ஸப் ஸ்டேட்டஸில் பதிவிட்டு விடுவார். ஒவ்வொரு நாளும் இவர் ஸ்டேட்டஸை பார்த்தால் இவர் சந்திக்கும் அத்தனை மனிதர்களையும் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மாதமாய் இவரைத் தொடர்ந்து சென்று பார்த்த பொழுது, அனைத்து தரப்பு மக்களோடும் இவர் சுலமாகப் பழகி அவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்வதை பார்க்க முடிந்தது. எனக்கு பாலச்சந்தரின் அழகன் படம் நினைவுக்கு வந்தது, அதில் கதாநாயகி தனது காரியங்களை , அது சம்மதப்பட்டவர்களை போட்டோ எடுப்பதன் மூலம் சாதித்துக் கொள்வார். அனால் நம் உமா ஷங்கர் செல்ஃபி எடுத்ததனால் சாதித்தவை பல. ஆனால் எந்த பலனையும் எதிர்பாராமல் மற்றவர்களோடு செல்ஃபி எடுக்கிறார்.
முக்கியமான விஷயமாக நான் இதில் கவனித்தது , சாமானிய மக்கள் செல்ஃபி எடுக்கத் தயங்கும் பொது அவர்களை உற்சாகப்படுத்தி அவர்களைப்பற்றிய பாசிட்டிவ் விஷயங்களை சொல்லி அவர்களை சம்மதிக்கவைத்து விடுகிறார், அவர்களும் சந்தோஷமாக...
நேற்று ஓட்டல் ஒன்றில் அதன் ஊழியரை அவர் பேசி சம்மதிக்க வைத்த விதத்தை நானே கவனித்தேன், அந்த ஊழியர் " என் முகமெல்லாம் போட்டோ எடுக்க லாயக்கில்லை சார்" உமாசங்கர், " சார் உங்க மனசு தான் முக்கியம், நீங்க நில்லுங்க, செல்ஃபி ய பாருங்க " என்று நிற்க வைத்து எடுத்து அவரிடம் காட்டியபோது அவர் முகம் மலர்ந்ததை என்னால் பார்க்க முடிந்தது.
பின்னர் தொடர்ந்த அவர்கள் பேச்சில், தான் செய்யும் வேலைகளை இருவரும் சொல்ல, உடனே அந்த ஊழியர் தான் உமாசங்கருக்கு சில தொழில் முறை தொடர்புகளை ஏற்படுத்துவதாக உறுதி அளித்து மொபைல் நம்பரை இருவரும் பரிமாறிக்கொண்டனர். எனக்கு ஆச்சரியம், இப்படி ஒரு தொழிலுக்கான ஆர்டர் பெரும் வழி இருப்பதாக எந்த ஒரு சேல்ஸ் குருவும் சொல்லவில்லை.
பிரபலங்களோடு இவரின் செல்ஃபிஅவரின் ஸ்டேட்டஸ் ஸில் வரும்போது ஆச்சரியப்படத்தான் முடியும் நம்மால், அதே அளவு மனதார , உண்மையான நட்போடுதான் அவர் சாமானியரோடும் செல்ஃபி எடுக்கிறார் என்னும்போது இதை ஒரு தவமாகவே அவர் செய்வது போல தோன்றியது.
பலரும் "என்ன உமா என்ன உன் ஸ்டேட்டஸ் ல போட மாட்டியா ?" என்று உரிமையோடு செல்ஃபி எடுத்துக்கொளவதையும் பார்த்திருக்கிறேன்.
உமா வின் இந்த தொடர் செல்ஃபி வெற்றியின் ரகசியம் என்ன என்று யோசித்தபோது அவர் படம் எடுக்க போகிறவர்களை உண்மையாக அணுகுகிறார், அவர்களின் மனதை புரிந்து கொண்டு உற்சாகப்படுத்துகிறார், அந்த நொடி அவர்களை பாசிட்டிவாக, சந்தோஷமாக உணரவைக்கிறார், அவர்களும் தங்களின் "தி பெஸ்ட் " படமாக அதை உணர்கிறார்கள். மறக்காமல் அவர்கள் மொபைல் நம்பரை வாங்கி அவர்களுக்கும் அதை அனுப்பி வைக்கிறார்.
வித்தியாசமான முறையில் மக்கள் தொடர்பின் மூலம் வெற்றிகரமாக வலம் வரும் உமா சங்கரைப் பாராட்டி , கேட்டேன் "இதுவரை எத்தனை செல்ஃபி க்கள் எடுத்திருப்பீர்கள் ?" அதுவா இப்போ உங்களையும் சேர்த்து பத்தாயிரத்தை தாண்டியிருக்கும் என்றார்"... சிரித்துக்கொண்டே விடை பெற்றேன்... பதிவானோம், புறா உமாவின் ஸ்டேட்டஸ் ஸில் நானும்...என் மனதில் அவரும்...
சந்திப்போம்...
Leave a comment
Upload