தொடர்கள்
தொடர்கள்
மஹாபாரத மாந்தர்கள் - குறள் வழி. - தமிழ் நந்தி

2025062608092770.jpeg

துருபதன்


பாஞ்சால இளவரசன் துருபதனும் துரோணரும் இளமையில் ஒன்றாக குருகுல வாசம் செய்தனர். நெருங்கிய நட்பின் காரணமாக துரோணரிடம் "எனக்கு அரசாட்சி கிடைக்கும் போது என் அரசில் ஒரு பகுதியை உனக்குத் தருகிறேன்" என கூறினான்.

துரோணர் குருகுல வாசத்திற்கு பின்னர் திருமணம் செய்து அஸ்வத்தாமனை மகனாக பெற்று, மனைவி மேலும் மகன் மேலும் உள்ள மிகுந்த பற்றால் பொருள் சேர்க்க விரும்பினார். பால்ய நண்பன் கொடுத்த வாக்கு அப்போது நினைவுக்கு வரவே துருபத மன்னனின் அரண்மனைக்கு விரைந்தார். துருபதனோ வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை;அவமானப்படுத்தினான். வெறும் கையோடு திரும்பிய துரோணர் பாண்டவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து குரு தட்சணையாக கேட்டவாறு அர்ஜுனன் துருபதனை வென்று பிடித்து துரோணரிடம் ஒப்படைத்தான்.

துரோணரும் துருபதன் நடத்தையை ஞாபகப்படுத்தி, பின் மன்னித்து (!) ராஜ்யத்தை துருபதனைக்கே அளித்தார்; மரியாதையுடன் அனுப்பினார். ஆனால் கருவபங்கமடைந்த துருபதன் விரதங்கள் இருந்து துரோணரைக் கொல்ல மகனையும் (திருஷ்டத்யும்னன்) அர்ஜுனனை மணக்க மகளையும் (திரௌபதி) பெற்றான். இருவரும் மகாபாரத யுத்தத்தின் இருபெரும் மாந்தர்களான துரோணர் கர்ணன் ஆகியோர் அழிவுக்கு காரணம் ஆனார்கள்.

மேலும் சிவனிடம் பெற்ற வரத்தால் அம்பை துருபதன் மகளாக முன்னர் பிறந்து பீஷ்மரின் விரோதத்தை விரும்பாத துருபதனால் வனத்துக்கு அனுப்பப்பட்டாள். அம்பை சிகண்டியாகி பீஷ்மரை கொன்றாள். (அருச்சுனனும்) துருபதன் மகாபாரத யுத்தத்தில் அதிகம் பங்களிக்கவில்லை; அவன் வேண்டுதல்கள் பலித்தன.

குறளும் பொருளும்

நண்பர்கள் (துரோணர்) மனம் புண்படும்படி ஏதாவது செய்து விட்டால், அறியாமையோ, உரிமையோ தான் காரணமாக இருக்கும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்று உணர்க

நோதக்க நட்டார் செயின் 805

உரிமைகளை நீக்கி விடாத நட்பே பழைய நட்பு என்பது.

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையை கீழ்ந்திடா நட்பு 801

தீங்கு செய்தால் பொறுத்துக் கொள்வது நல்லது; மறந்துவிடுவது அதைவிட நல்லது.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று 152