சமீபத்தில் என்னுடைய அமெரிக்க பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவத்தைத்தான் இங்கே சொல்லவிருக்கிறேன்.
இந்தியாவின் மக்கட்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கையை பிரமிக்க வைக்கிறது. அப்துல் கலாம் அறிவுரையும் இவர்களின் கனவுகளை பெருக்கி நாட்டை முன்னேற்ற பாதையில் விரைவுடன் அழைத்து செல்ல முயல்கிறது.
ஆதித்ய ராகவனைப் பற்றி தான் கூறுகிறேன்.
அந்த துடிப்புள்ள இளைஞரை, நான் சென்ற மாதத்தில் அமெரிக்கா சென்ற போது எனது உறவினர் மூலமாக சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவரை கனவுகள், அதன் தாக்கத்தின் பயணம் என்றே சுருக்கமாகக் கூறிவிடலாம்.
ஶ்ரீவில்லிபுத்தூர்.
ஆதித்ய ராகவன் பிறந்த ஊராகும். அந்த 26 வயது இளைஞருக்கு இது வெறும் வரைபடத்தில் உள்ள ஒரு இடம் மட்டுமல்ல. அவருடைய வாழ்வில் மதிப்புகள் உருவான இடம் இதுதான் எனவும் நம்புகிறார்.
சிறு வயதிலிருந்தே, வாழ்க்கை என்பது சமூகம், நன்றியுணர்வு மற்றும் முக்கியமாக பிறந்த மண்ணில் நீங்கள் வேரூன்றி இருப்பது போன்றவற்றை, எவ்வளவு தூரம் பயணித்தாலும் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே கற்றுக்கொண்டதை பெருமையாக நினைக்கிறார்.
அவர் சென்னை, அடையாறு சங்கரா சீனியர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வளர்ந்தவர். பள்ளி பருவத்திலேயே ஒரு மருத்துவ பரிந்துரை அவரை ஸ்குவாஷ் தேர்வு செய்ய வழிவகுத்தது.
ஒரு சிறிய தொடக்கம் போல் தோன்றிய ஒன்று அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கிய வளர்ச்சியாக மாறியது. சேத்துப்பட்டில் உள்ள இந்திய தேசிய ஸ்குவாஷ் அகாடமியில் பயிற்சியாளர் மேஜர் மணியத்தின் கண்காணிப்பில், அவர் ஒரு தடகள வீரராக பயிற்சி பெற்றது மட்டுமல்லாமல், ஒரு ஆர்வமிக்க இளைஞராக உருவெடுத்தார். கற்றுக்கொண்ட பாடம் விளையாட்டு மட்டுமல்லாமல், விடாமுயற்சி, ஒழுக்கம், வெற்றியில் பணிவு மற்றும் பின்னடைவில் கருணை ஆகியவையும் ஆகும். ஸ்குவாஷ் அவரை இரண்டு முறை தேசிய சாம்பியன்ஷிப்களுக்கும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் அழைத்துச் சென்றது.
பள்ளி படிப்புக்கு பிறகு கல்வியை தொடர பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்தார். அங்கு மெக்கானிக்கல், ஏரோ ஸ்பேஸ் என்ஞினீயரிங்கில் பொறியியலை வெற்றிகரமாக “கிரேட் டிஷ்டிங்ஷன்” என்ற தரத்துடன் முடித்தார். இளங்கலை பொறியியல் படிக்கும் போது தனது ஆராய்ச்சி திறனையும் வெளிப்படுத்தி விருது பெற்றார். தனது படிப்புக்கு இடையே ஸ்குவாஷ் விளையாட்டு திறனையும் சமநிலைப்படுத்தி. பிரான்ஸ் ஜூனியர் போட்டியில் தங்க பதக்கமும் அமெரிக்க ஜூனியர் போட்டியில் தாமிர பதக்கமும் வென்றுள்ளார். பல்கலைகழகத்தில் தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க வித்தியாசமான, சாத்தியக்கூறுகளையும் ஆராய்வதிலும் மற்றும் அவற்றை நோக்கி சீராக உழைப்பதின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தார்.
பொறியாளராக, வணிக உலகத்தைப் பற்றி மேலும் அறிய வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்தார். அது அவரை பாஸ்டனில் உள்ள பெய்ன் அண்ட் கம்பெனிக்கு அழைத்துச் சென்றது.
அங்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் சிலவற்றிலிருந்து அவருக்கு திட்டப்பணிகள் கிடைத்தன. பல்வேறு துறைகளில் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களுக்கான மூலோபாய சாலை வரைபடங்களை வடிவமைத்தார். அவர் மேற்பார்வையில் நடந்த பணிகளை ஒரு தனிச் செயல் என கருதாமல், மாறாக ஒரு பகிரப்பட்ட நிறைவான பயணம் என தொடர்பு கொண்ட வழிகாட்டிகள் மற்றும் ஊழியர்களின் பங்கையும் போற்றினார்.
சமூக தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் வணிகம் ஆகியவற்றின் தேவையுடன் அமைந்த பணியில் அவர் எப்போதும் ஈர்க்கப்படுவதாக உணர்ந்தார். வளரும் நாடுகளுக்கான குளிர்பதன சேமிப்பு அமைப்புகள் குறித்த அவரது ஆய்வறிக்கை அவருக்கு அந்த ஆர்வத்திற்கு துண்டுதலாக அமைந்திருக்கலாம்.
அவர் ஒரு ஆஃப்-கிரிட் குளிர்பதன சேமிப்பு அமைப்பை (off-grid cold storage system) உருவாக்கினார், அது அவருக்கு மதிப்புமிக்க ஆய்வறிக்கை விருதைப் பெற்றுத் தந்தது. கூடுதலாக, மொனாக்கோ அறக்கட்டளையின் இளவரசர் ஆல்பர்ட் II (Prince Albert II of Monaco Foundation) க்காக கடல் பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட €100 மில்லியன் தாக்க முதலீட்டு நிதியை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
அவரது அடுத்த முத்திரை, ஹார்வர்ட் வணிகப் பள்ளியில் எம்பிஏ படித்து மதிப்பு மிக்க பேக்கர் ஸ்காலர் சிறப்பைப் பெற்றார். கிராமப் பின்னணியில் உதித்து வளர்ந்து, ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாத கௌரவம் அவருக்கு ஹார்வர்டில் கிடைத்தது.
TAKE ன் பிறப்பு
AI செயல்படுத்தப்பட்ட தீர்வுகளை உருவாக்குதல், தொழிலக வளர்ச்சி உத்தி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதி நவீன நிதி மற்றும் மூலோபாய ஆலோசனை (Stretegic), திறமை ஈடுபாட்டு உத்தி (Talent engagement strategy) போன்ற முண்ணனி தொழில்நுட்பப் பகுதிகளில் பணியாற்றி பெற்ற அனுபவத்தை கொண்டு, TAKE என்ற நிறுவனத்தை தொடங்கினார். வணிகம் சமூகத்திற்கு சேவை செய்ய முடியும் என்பதற்காக தொழிற்சாலைகளில் கழிவை குறைக்கும் உத்திகளை ஆராயும் பொறுப்பையும் இந்த நிறுவனம் ஏற்றது.
அவர் தனது நிறுவனத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தி, இறுதியில் அதை இந்தியாவிற்குக் கொண்டு வந்து பல வித தனது இதயத்திற்கு நெருக்கமான திட்டங்களில் பணியாற்ற விரும்புகிறார்.
தாராளவாத கலைகள் மற்றும் ஆராய்ச்சியை மையமாகக் கொண்ட (establishing a university centered on liberal arts and research) ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுதல் மற்றும் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கொள்கை குறித்து இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல், வாய்ப்பு கிடைத்தால் அரசுக்கு கல்வி மற்றும் தொழில்நுட்ப கொள்கையை வடிவமைப்பதில் பங்கேற்பது உள்ளிட்ட எதிர்கால சமூக தாக்கத்திற்கான விருப்பங்களை ராகவன் கொண்டுள்ளார்.
கனவுகளை பலவீனமானவையாக கருதி, நனவாகாமலும் போகலாம் என்று நினைப்பவரல்ல ராகவன். தனது தகுதி, பின்னணி மீது நம்பிக்கை வைத்து நேர்மையாக தனது பாதையில் செல்லக்கூடியவர். அவருக்கு நன்கு தெரியும் இது வரை அவர் அடைந்தது மிகப் பெரிய துணியில் சில இழைகள். மட்டுமே என்று.
இப்போது இவரின் நிறுவனம் கலிபோர்னியா மாநிலத்திலிருந்து இயங்கினாலும் கூடிய விரைவில் இந்தியாவில் உள்ள இரண்டாம் நிலை மூன்றாம் நிலை நகர முதாலீட்டார்களுக்கு பயன் தரும் முன்னனி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை மையமாக தென்னிந்தியாவில் உருவாகவிருக்கிறது.
விரைவில், இந்தியா இன்னுமொரு நல்ல வேலை வாய்ப்பளிக்கும் முதலாளியை பெற இருக்கிறது.
இது மோடியின் செவிகளில் விருந்தாகட்டும்.
புதிய இந்தியா உரு(வலு)வாகிறது.
Leave a comment
Upload