தொடர்கள்
விகடகவியார்
காசாவில் அமைதி திரும்புமா ? - விகடகவி நிருபர் குழு

2025911074515573.jpeg

காசா மீது இனப்படுகொலைகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வந்தது. இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 66 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில்லட்சத்துக்கும் அதிகமானோர்படுகாயம் அடைந்துள்ளனர்.இது தவிர 175 பத்திரிகையாளர்கள் மற்றும் 125 ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த இருபது அம்ச அமைதி திட்டத்தின் முதல் கட்டமாக பிணை கைதிகளை விடுவிக்கவும் போரை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளவும் ஹமாஸும் இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.

2023 நவம்பரில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதன் விளைவாக பெண்கள் குழந்தைகள் உட்பட 100 பிணை கைதிகளை ஹாமஸும் சில பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்தன. இரண்டாவது முறையாக இந்த ஆண்டு ஜனவரி பிப்ரவரியில் 25 இஸ்ரேல் பிணை கைதிகள் உயிரிழந்த எட்டுப்பிணை கைதிகளின்உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. அதைத்தொடர்ந்து 2000 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.

கடந்த மார்ச் மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தீவிர படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து நாட்டில் கடந்த திங்கட்கிழமை முதல் நான்கு நாட்கள் இருதரப்பு பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க குழுவினர் இதையே பேச்சுவார்த்தை நடந்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் இரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக் கொண்டிருக்கின்றது.

இது பற்றி டிரம்ப் வெளியிட்ட பதிவில் இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் விரைவில் தங்கள் நாட்டுப் படைகளை காசாவில் இருந்து இஸ்ரேலும் விலக்கிக் கொள்ளும்.இதுவே வலுவான நீடித்த அமைதியை நிலை நாட்டுவதற்கான தொடக்கமாகும். அமைதி ஒப்பந்தத்தின்படி அனைவரும் நியாயமாக நடத்தப்படுவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடவுளின் உதவியால் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்ப உள்ளனர் என்று குறிப்பிட்டு இருக்கிறா.

இருப்பினும் இஸ்ரேல் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு டிரம்ப் மற்றும் பிற நாடுகள் போல் நிரந்தர முடிவுக்கு வரும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஹமாஸ் பேச்சுவார்த்தை குழு தலைவர் வலியுறுத்தி இருக்கிறார்.

காசாவின் ஆட்சி அதிகாரம் தேசிய ஒருமித்த கருத்தின் அடிப்படையில் அரபு மற்றும் இஸ்லாமிய ஆதரவுடன் பாலஸ்தீனத்திடம் காசா பகுதியின் நிர்வாகத்தை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. இத்திட்டத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.

2025911074841395.jpeg

காசா பகுதி இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்திய தரைக்கடல் இடையே 41 கிலோ மீட்டர் நீளமும் 10 கிலோ மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பிரதேசம். இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது காசா எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1967இல் நடைபெற்ற ஆறு நாள் போரில் இஸ்ரேல் அதை கைப்பற்றியது. காசா உலகின் மிகவும் நெருக்கமான மக்கள் தொகை கொண்ட இடங்களில் ஒன்று. அதன் மக்கள் தொகையில் முக்கால் பாகம் பதிவு செய்யப்பட்ட அகதிகள் அல்லது அகதிகளின் சந்ததிகள் என்கிறது ஐநா.

காசா அகதிகள் தங்களைக் கடவுளும் கைவிட்டு விட்டார் இந்த உலகமும் கைவிட்டு விட்டது என்று அலுத்து போய் உட்கார்ந்த நிலையில் இப்போது தற்காலிக ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது குண்டு சத்தம் நிரந்தரமாக நின்று எல்லா மனிதர்களைப் போல் நாமும் வாழ வேண்டும் என்பதுதான் இந்த அப்பாவி அகதிகளின் ஆசை எண்ணம் லட்சியம் இப்படி எல்லாமே அது நடக்குமா என்பதுதான் கேள்விக்குறி.