உலகம் முழுவதும் எட்டு போர்களை நிறுத்தியதாக பெருமையாக சொல்லி அமைதிக்கான நோபல் பரிசு எனக்கே எனக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தார் ட்ரம்ப். அமைதிக்கான நோபல் பரிசு என்பது லட்சக்கணக்கான மக்களின் நலன் கருதி உலக அமைதிக்கு பாடுபட்ட உயர்ந்த மனிதருக்கு வழங்கப்படுவது தான் இதுவரை வழக்கம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனின்சுலா நாட்டைச் சேர்ந்த பெண் பேரொளியான மரியா கொரீனா மச்சாடேவுக்கு வழங்கப்பட உள்ளது. வெனின்சுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காக இந்த பெண் பேரொளிக்கு வழங்கப்படுவதாக நோபல் பரிசு குழு அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே அமெரிக்க அதிபர்கள் சிலர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்க அதிபர் தியோடர்ரூஸ் வேல்ட். 1906 ஆம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது அடுத்ததாக முதல் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக 1918 இல் அமெரிக்க அதிபர் வில்சனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது கழுத 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 39 ஆவது அதிபர் ஜிம்மி கார்டருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது சர்வதேச மேதாவிகளுக்கு அமைதியான தீர்வுகளை காணவும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றமும் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தும் இவர் மேற்கண்ட முயற்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டது அடுத்ததாக அமெரிக்காவின் 44 வது அதிபரான பார்க் ஒபாமாவுக்கு 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒபாமா பதவியேற்ற ஒரு ஆண்டுக்குள் அணு ஆயுத குறைப்பு மற்றும் காலநிலை நடவடிக்கைக்காக சர்வதேச ராஜ தந்திரம் மக்களிடையே ஒத்துழைப்பு வலுப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது . 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபர் அல்கோர் என்பவருக்கு கூட அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.
ஆனால் ட்ரம்ப் பாவம் ஏமாந்து போனார் தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று வெறுத்துப் போன ட்ரம்ப் உலக அமைதிக்காக எதையும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது அமெரிக்காவை சீர் குலைத்ததை தவிர ஒபாமா வேறு எதுவும் செய்யவில்லை அவர் ஒரு நல்ல அதிபர் இல்லை என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்திருக்கிறார் பாவம்.
Leave a comment
Upload