தொடர்கள்
கலை
பாட்டும் நானே பாடலும் நானே தேவா – பால்கி

2025910192248105.jpg

[ஆசிரியர் மதன் அவர்களுடன் தேவா]

கல்யாண ரிசப்ஷனுக்குப் போய் வந்ததை ராகமாலிகாவில் யூடியூபில் வந்த பாடலைக் கேட்டேன்.

மனுஷன் எப்பிடி, இந்த, தான் பட்ட கஷ்டங்களை ஹாஸ்யமாய் எடுத்துக்க முடிகிறது என்று பாடலின் ஜாதகத்தை ஆராய்ந்தேன்.

அட ஆமாங்க. ரெண்டாவது முறையாக அட சொல்லியே ஆகவேண்டிய நிலை. இருக்காதா பின்ன. அவரு நம்ம ஓவியர் தேவாதான்.

அ…அதேப்பிடி!

ஓவியர் தேவாங்கறீங்க. எப்புடி அவரு தான்ன்னு கண்டுபுடிச்சீங்கன்ன தானே கேக்குறீங்க? அந்த பாட்டுக்கு அந்த ஆடியோக்கு பாடுபவரின் போட்டோவும் கூடவே ஒரு ஆட்டோ ஓவியம், அதன் கீழ் தேவாவின் கையொப்பம்.

நம்ம விகடகவி வாசகர்களுக்குத்தான் பரிச்சயமான நகைச்சுவை ஜோக்குகளைத் தருபவர்.

https://youtu.be/u1JaMGlquPw?si=1V0s6JblhlEdEWra

2025910192417639.jpg

அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் சம்பந்தம்னா கேக்கணுமா…. நோ கொஸ்டின்

நான் சங்கீத சூழலில் வளர்ந்தவன். அப்பா அம்மா பாடுவார்கள். என் சின்ன தாத்தா அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் சிஷ்யர். சின்ன வயதில் கேள்வி ஞானம் தான். கல்லூரி நாட்களில் நிறைய கச்சேரிகள் கேட்க ஆரம்பித்து சங்கீத அறிவை வளர்த்துக்கொண்டேன். வித்துவான் ஓ.எஸ். தியாகராஜனிடம் சில வருடங்கள் இசை பயின்றேன். T N சேஷகோபாலனிடம் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரின் கிருதிகள் கற்றேன். நேதனூரி கிருஷ்ணமூர்த்தி , டீ ஆர் சுப்பிரமணியம் , பிரின்ஸ் ராம வர்மா முதலியவர்களிடமும் சில கிருதிகள் கற்றேன்.

சபா கச்சேரிகள் செய்ய ஆர்வம் இருந்ததில்லை.பல கோவில்களில் நிறைய கச்சேரிகள் பக்க வாத்தியத்துடன் செய்திருக்கிறேன். சங்கீதம், சுகானுபவம், தியான நிலை, இறைநிலைத்தன்மை என்ற உணர்தல் எனக்கு கோவில்களில் பாடுவதிலேயே இருந்தது.

சென்னை, கோயம்புத்தூர் , தர்மபுரி போன்ற இடங்களில் நிறைய கோவில் கச்சேரிகள் செய்ந்துள்ளேன். மனைவியும் , என் பெண்ணும் சங்கீத வித்துவான்களே. அவர்களும் பல இடங்களில் உடன் பாடியுள்ளார்கள்.

கடந்த இருபத்தைந்து வருடங்களாக நிறைய கீர்த்தனைகள் தமிழில் எழுதி இருக்கிறேன்.அதிகம் புழக்கத்தில் இல்லாத, பிந்துமாலினி, கம்பீர வாணி,காந்தாமணி போன்ற ராகங்களில் பாடல்கள் எழுதி இசை அமைத்து என் You Tube Channel ( Devanathan Srinivasan) இல் பாடியிருக்கிறேன்.

இது வரை சுமார் 700 கர்னாட்டிக் பாடல்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

பிரதோஷம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, வரலக்ஷ்மி விரதம், நாகபஞ்சமி, நவராத்ரி -போன்ற நிகழ்வுகளுக்கு பாடல்கள் புனைந்துள்ளேன். ராமாயணம், சுந்தர காண்டம் , லட்சுமி ஸ்துதி போன்றவற்றிற்கும் பாடல்கள் எழுதியுள்ளேன். சங்கீதம் கற்போரின் ஆரம்ப நிலைக்கும், கர்நாடக இசையில் சுலப கீதங்கள் எழுதியுள்ளேன்.அவைகளை, இசை ஆசிரியைகள் என்னிடம் ஆன்லைனில் கற்று வருகிறார்கள்.

மறக்க முடியாத தருணங்கள் பற்றிச் சொல்லக் கேட்க

2003இல் தர்மபுரி ராமர் கோவிலில் அமிர்தவர்ஷினி பாடிய மறுநாள் காலை கொஞ்சம் மழை பெய்தது.

1998 இல் முதியோர் இல்லத்தில் கச்சேரி செய்த பிறகு ஒரு வயோதிகப்பெண்மணி காலில் விழுந்தாள். அந்த மரியாதை சங்கீதத்துக்கு.

திருவந்திபுரம் ஹயக்ரீவர் சந்நிதியில் அர்ச்சகரிடம் ஒரு பாடல் பாடுகிறேன் என்று கேட்டேன். பாட்டெல்லாம் எதிரே உள்ள மண்டபத்தில் பாடுங்கள் என்று கோடியில் கை காண்பித்தார். ஹயக்ரீவர் பெயரில் ஒரு பாடலை மண்டபத்தில் பாடியதைக்கேட்ட அதே அர்ச்சகர் , ஹயக்ரீவர் பிரியப்படுகிறார். அவர் சந்நிதியில் வந்து பாடுங்கள் என்றார்.ஹயக்ரீவரின் ஏலக்காய் மாலையை எனக்கு அணிவித்தார்.

திருமலையில் ஒரு நாள் ஹயக்ரீவர் சந்நிதியில் நான் ஆத்மார்த்தமாக பாடிக்கொண்டிருந்ததைக் கேட்ட திருமலை அர்ச்சகர், என்னிடம், TTD யிலிருந்து அழைப்பு வந்தால் பாடுவீர்களா என்றார். சரி என்றேன். அடுத்த மாதமே அழைப்பு வந்து , திருமலை ஆஸ்தான மண்டபத்திலும், சஹஸ்ர தீபாலங்கார சேவையிலும் மூன்று நாட்கள் பாடினேன். சௌகர்யங்கள் யாவும் ( சேவை உட்பட) பெற்றேன்.

B கிரேட் ஆர்டிஸ்டாக கோவை வானொலி நிலையத்தில் பத்து வருடங்களாக நேரலை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார்.

வாழ்நாளில் மறக்கமுடியாத கௌரவம், 2012ல் காஞ்சி சங்காராச்சார்யார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடமிருந்து மடத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் பெற்றது தான். மடத்தில் சாதுர் மாஸ்ய வ்ரத புண்ய காலத்தில் பாடியுள்ளேன்.

இவ்வளவு தானா? இன்னும் ஏதேனும் கைக்குள் வைத்திருக்கின்றீர்களா என்றேன்.

அவரே தனது அடுத்த சில முகங்களைப் பற்றிக் கூறுகிறார்.

நோயாளி டாக்டரான கதை

வங்கியிலிருந்து ரிடையர் ஆனபிறகு , அடிக்கடி அலோபதி மருத்துவத்தில் ஆண்டிபயாடிக் எடுக்கும் சூழ்நிலையிலிருந்து மீள , மாற்று மருத்துவம் ஏதாவது படிக்கலாம் என்று யோசித்தேன். விளைவு? அக்கு பஞ்சர் மருத்துவத்தை தமிழ் நாடு ஓபன் யூனிவர்சிட்டி மூலம் முறையாகக்கற்று முதல் மாணவனாக மதிப்பெண் எடுத்தேன்.(MD Acu & Diploma in Acupuncture) நூறு நோயாளிகளுக்கு கோவிடுக்கு முன் முறையாக சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளேன். தற்போது நேரமின்மை காரணமாக குடும்பத்தவர்க்கும், நண்பர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன்.

ஓய்வுக்குப் பின் ஓவியரானர்.

ரிடையர் ஆனபின, தமிழ்நாடு டெக்கனிகல் எஜுகேஷன் மூலம் பரீட்சை எழுதி (Freehand Outline Drawing ) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். ஆனந்த விகடன், கல்கி, சாவி, குங்குமத்தில் ஜோக்குடன் கார்டூன்களையும் வரைந்திருக்கிறார்.

சிரித்துப் பார்க்கலாம், பார்த்தும் சிரிக்கலாம் என்ற கார்டூன் புத்தகத்தை 2014 வெளியிட்டுள்ளார்.