நமது விகடகவியில் எழுத்தாளர் மரியா சிவானந்தம் எழுதி வெளிவந்த "அருந்தவச்செல்வி" என்னும் இலக்கியத் தொடர் நூல் வடிவம் பெற்றுள்ளது.
சென்ற வாரம் வேலூரில் நடைபெற்ற அனைத்திந்திய BSNL ஓய்வூதியர் சங்கத்தின் மாநில மாநாட்டின் போது இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.
'அருந்தவச்செல்வி' இலக்கியத்தொடரில் மணிமேகலை காப்பியத்தின் முப்பது காதைகளையும், அதன் இலக்கியச் சுவை சற்றும் குன்றாமல் ஓராண்டுக்கு மேல் எழுதி வந்தார் மரியா சிவானந்தம்.
தொடராக வந்த போதே வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர் இது. .இப்போது கோதை பதிப்பகத்தின் வழியாக நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
அருந்தவச்செல்வி நூலை திருமதி .கௌதமி பாலஸ்ரீ , Joint Controller , Communication Accounts, சென்னை வெளியிட்டார் . திரு. கே..வெங்கட்ராமன் ITS, முதன்மை பொது மேலாளர்,BSNL (ஓய்வு) முதல் பிரதியை பெற்றுக் கொண்டு இந்நூலைப் பற்றி சிறப்புரை ஆற்றினார். தொழிற்சங்கத் தலைவர்கள், BSNL அதிகாரிகள், ஓய்வூதியர்கள் திரளாக வந்திருந்து பங்கேற்றனர். மரியா சிவானந்தம் ஏற்புரை வழங்கினார்.
(விழாவிலிருந்து....)
விகடகவி வாசகர்களுக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை , குறுந்தொகை மற்றும் நற்றிணை போன்ற சங்க இலக்கியங்களை எளிய வடிவில் தந்து 'தமிழ் விருந்து' படைக்கும் மரியா சிவானந்தம் அவர்களைப் பாராட்டுகிறோம்.
'அருந்தவச்செல்வி' வெற்றி பெற வாழ்த்துக்கள் .
(நூலை வாங்க விரும்புவோர், mariasivavlr@gmail.com என்ற மெயில் ஐடி யில் தொடர்பு கொள்ளலாம் )
Leave a comment
Upload