ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு
திராவிட மாடல் ஆட்சிக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை சிபிஐ !!
இதுவரை 52 தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை !
நிர்வாகிகள் நிறைய உண்மையை சொல்லி இருப்பாங்களே !
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல் போன குஜராத் சிங்கம் மீண்டும் கூண்டுக்கு வந்தது.
குஜராத்துக்கு போயிடுச்சு என்று சந்தேகப்பட்டீர்களோ !!
2388 கோடி மதிப்பீட்டில் பக்கிங்காம் கால்வாய் புதுப்பிக்க திட்டம்
ஏற்கனவே பல கோடிகளை இந்ததிட்டத்தில் விழுங்கிய முதலைகள் இருக்கிறது ஜாக்கிரதை !!
கரூர் சம்பவத்தில் ஆதாயம் தேடுகிறது பாஜக. எடப்பாடியும் அரசியல் தான் செய்கிறார். தொல்திருமாவளவன்.
திமுக அரசும் தமிழக வெற்றி கழகமும் அண்டர்ஸ்டாண்டிங் என்று சொன்னீர்கள் !!
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமுதாயத்தின் நலனுக்காக பாடுபடவேண்டும் டெல்லி முதல்வர் ரேகாகுப்தா.
அப்புறம் டிரம்ப் கோவிச்சு பாரு பரவாயில்லையா?
ஆளுநருக்கு எதிராக திமுகவினர் மக்களை தூண்டுகிறார்கள் அண்ணாமலை குற்றச்சாட்டு.
ஆளுநர்தான் இதை செய்கிறார் என்கிறார்கள் திமுகவினர் அப்ப எதுதான் உண்மை?
கூட்டணி ஆட்சி வந்தால்தான் விடிவுகாலம் வரும் டாக்டர்கிருஷ்ணசாமி
அவருக்கு வரும்ன்னு சொல்றாரு !!
தமிழக ஆளுநர் திமுகவின் ஊழலுக்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறார் அமைச்சர் எல் .முருகன்.
தலைவரே திமுகவின் ஆட்சியில் ஊழல் இல்லைன்னு நீங்களே மறைமுக சொல்ற மாதிரி தெரியுது !!
எதிர்த்து யாரும் போராடபோது யாருடன் தமிழகம் போராடும் ?தமிழக ஆளுநர் கேள்வி
அது தெரியல ? திமுக உங்களை எதிர்த்து போராடும் !!
சினிமா நடிகர்கள் பின்னாடி போகாதீர்கள் எஸ்.வி.சேகர்.
அப்போட்ராமா ஆக்டர் பின்னாடி போலாமா !!
தமிழக வெற்றி கழகத்தை அதிமுக கூட்டணியில் இணைக் கதந்திரமாக செயல்படுகிறார் பழனிசாமி. டிடிவிதினகரன் குற்றச்சாட்டு.
உங்கள் ஸ்லீப்பர் செல் சொன்ன தகவலோ.
Leave a comment
Upload