தொடர்கள்
மருத்துவம்
இருமல் மருந்து ! ஆயுர்வேதம் என்ன சொல்கிறது ??- மருத்துவர் அபர்ணா !

நெஞ்சத்தில் ஆறாத ரணம் மருந்து உட்கொண்ட குழந்தைகளின் மரணம்

ஏற்றுக் கொள்ளவே முடியாத மனித தவறுகளில் மருத்துவ தவறுகள்.

அலோபதி அதாவது ஆங்கில மருத்துவம் உன்னதமானது ஆனால் அதே சமயம் அதிலுள்ள இரசாயன ஆபத்துக்கள் கவலையளிக்கிறது.

யோசிக்கவே முடியாத நிலையில் ஆயுர்வேத இளம் மருத்துவர் அபர்ணாவிடம் பேசிய போது சில விஷயங்கள் தெளிய வைத்தன.

2025911093828191.jpeg

(தூர்வா ஆயுர்வேத கிளினிக் நடத்தி வரும் மரு.அபர்ணா ஆயுர்வேத படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர். ஆரோக்கியபாரதி அமைப்பின் சென்னை தலைவர்)

கேள்வி : எப்படி ஒரு பெற்றோராக குழந்தைகள் இருமிக் கொண்டே இருப்பதை தாங்கிக் கொள்வது. மருந்து கொடுத்துத் தானே ஆக வேண்டும். என்னனென்ன தற்காப்பு தேவை ??

மரு.அபர்ணா :

ஆயுர்வேதத்தில் காசம் என்று சொல்வோம். இருமல் தான். உடலின் பல்வேறு வகையான நோய்களுடன் அல்லது காரணிகளுடன் இந்த காசம் இணைக்கப்படுகிறது. ஆயுர்வேதம் இதனை அழகாக விளக்கி, இதற்கான அடிப்படை காரணங்களை வழங்கியுள்ளது. பெரும்பாலான நேரங்களில், இது ஏற்கனவே உள்ள உடல் நிலையின் ஒரு வெளிப்பாடு அல்லது எதிர்காலத்தில் உருவாகக்கூடிய ஒரு நோய்க்கான முன்னோட்டம் தான். இந்த வகையில் தான் இதை நாங்கள் அணுகுவோம்.

உதாரணமாக, குழந்தைகளில், காசம் இரத்தக் குறைபாடு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அல்லது வயிறு மற்றும் பித்தப்பை தொடர்பான அழற்சிகளின் தொடர்ச்சியாக தோன்றலாம்.

எந்த இருமல் வந்தாலும் சிரப் அல்லது ஆன்டி-ஹிஸ்டமின் மருந்துகளைக் கொண்டு அதை அடக்குவதற்குப் பதிலாக, அதன் அடிப்படை காரணத்தை கண்டறிந்து சரிசெய்வது மிக அவசியம்.

கேள்வி : சரி ஒரு பெற்றோராக என்ன தான் செய்ய வேண்டும் ?? மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்து வாங்கி கொடுப்பதை தவிர ???

மருந்துக் க்டைகளில் சில வேளைகளில் நேரடியாக சென்று என்னத்தையாவது வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது யோசனையில்லாத வீட்டுச் சிகிச்சைகளை முயல்வது கூட, சில சமயங்களில் பெரிய பிரச்சினையாக மாறக்கூடும். எனவே, அனுபவமிக்க மருத்துவரை (ஆயுர்வேதம் அல்லது அல்லோபதி) அணுகி சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவது மிகச் சிறந்தது.

கேள்வி : அந்தக் காலத்தில் இது எளிமையாக கையாளப்பட்டதா ???

மரு.அபர்ணா : அந்தக் காலத்தில் வைத்தியர்கள் (ஆயுர்வேத மருத்துவர்கள்) துல்லியமான நோயறியலில் diagnosis மிகுந்த திறமையுடன் இருந்தனர்.அவர்கள் காச – சுவாசம் நிலையின் அடிப்படை காரணத்தை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளித்தனர்.

இரத்தம்–கல்லீரல் அச்சில் (Blood–Liver axis) இருந்து உருவாகும் காச – சுவாசம் நிலைக்கு திப்பிலி அடிப்படையிலான மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

மூட்டு அழற்சி மற்றும் காய்ச்சல் இணைந்த காச – சுவாசம் நிலைக்கு சுக்கும் (இஞ்சி) மற்றும் திரிபலா அடிப்படையிலான மருந்துகள் வழங்கப்பட்டன.

வயிற்று மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளில் இருந்து தோன்றும் காச – சுவாசம் நிலைக்கு பெருங்காயம் மற்றும் திரிகடுகம் அடிப்படையிலான மருந்துகள் வழங்கப்பட்டன.

பாரிஜாதா மற்றும் கற்பூர இலைகள் போன்றவை பல்வேறு அலர்ஜி மற்றும் ஈசினோபிலிக் மூலங்களில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இவையெல்லாம் உதாரணங்கள். என்ன பிரச்சினை என்பதை கண்டறியாமல் எந்த வித மருத்துவமும் அபாயம் தான்.

கேள்வி : எந்த மருந்தையும் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது டென்ஷன் தான். !!

மரு. அபர்ணா : அதனால் தான் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மருந்து அம்மா மூலமாகத் தான் கொடுப்போம்.

நேரடியாக கொடுக்க மாட்டோம்.

அலோபதியோ அல்லது ஆயுர்வேதமோ, ஹோமியோபதியோ எந்த மருத்துவமாக இருந்தாலும் படித்த, அனுபவமிக்க மருத்துவர்களிடம் செல்வது தான் ஒரே வழி.

இரசாயன மருந்துகள் விளைவிக்கும் கேடுகள் கீழ்க்கண்டவை.

2025911093746857.jpeg

உண்மையிலேயே இந்த காலத்தில் உஷாராக இருக்க வேண்டியது முக்கியம். இந்த இருமல் மருந்து அசம்பாவிதம் கேள்விப் பட்டதிலிருந்து என்னால் உறங்கவே முடியவில்லை.

தீராத சோகம் என்று முடித்துக் கொண்டார்.