கரூர் சம்பவத்தைப் பொறுத்தவரை ஒன்பது குழந்தைகள் இறந்துபோய் இருக்கிறார்கள். அதில் ஆறு குழந்தைகள் பெண்கள் மூன்று குழந்தைகள் ஆண்கள். இவர்களுக்கும் இந்த கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? பெற்றோர்களின் சினிமா நடிகர் மோகத்தால் இவர்கள் இறந்து போனார்கள். உண்மையில் இந்த குழந்தைகள் சாவுக்கு அவர்களின் பெற்றோர்கள் தான் காரணம். குழந்தைகளை யாராவது இது போன்ற பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துவருவார்களா. சினிமா மோகம் அவர்களை இப்படி செய்து விட்டது.
பொதுமக்கள் செய்ய வேண்டியது இது தான் யார் வந்தால் நமக்கு நல்லாட்சி தருவார்கள் என்பதை ஆராய்ந்து அறிவுப் பூர்வமாகயோ சித்து வாக்களிக்கும் மனப்போக்கு வரவேண்டும். சினிமா மோகம், அரசியல் தலைவர்களின் கவர்ச்சி வாக்குறுதிகள்,வாக்குக்கு பணம் இப்படி எல்லாம் பொதுமக்கள் யோசித்தால் இது போன்ற நிறைய கரூர் சம்பவங்கள் நடக்கும். தவறு பொதுமக்களிடம் தான். மாறவேண்டியது அரசியல் கட்சிகள் அல்ல மக்கள்தான்.
Leave a comment
Upload