தொடர்கள்
தீபாவளி ஸ்பெஷல்
"இன்றும் நம் மனதில் மத்தாப்பாக ஜொலிக்கும் அந்த கால ஊட்டி தீபாவளி " - ஸ்வேதா அப்புதாஸ்

" உனைக்கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி "

2025914205213781.jpg

என்ற பாடல் இன்னும் நம் காதில் ஒலித்து கொண்டேயிருக்கிறது .

அப்படியொரு உட்சாக தீபாவளி கொண்டாட்டம் இருக்கும் .

மதங்களை எல்லாம் தாண்டி ஒரு தீப திருநாள் .

தீபாவளி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் வரும் .

பள்ளிக்கூடம் படிக்கும் போது நாமே அறியாமல் ஒரு வித த்ரில்லிங் ஏற்படும் .

அப்பொழுதெல்லாம் நம் ஊரில் மட்டும் தீபாவளி கொண்டாடுவது போல ஒரு பிம்பம் நம்மை சுற்றி இருக்கும் .

ஊட்டியை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை துவங்கும் .

நீலகிரி மாவட்டமே கார்மேகம் சூழ்ந்து இருக்கும் .

எப்படியும் பட்டாசு வெடித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் தான் பள்ளிக்கு செல்வது .

2025914205237337.jpg

நம் வகுப்பு தோழர்கள் சிறிய கன் மற்றும் கேப் பட்டாசு ரெடியாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு இண்டெர்வெல்லில் வெடிப்பார்கள் .

இதை பார்த்து ஆசிரியர்கள் திட்டுவதும் உண்டு .

தீபாவளி நெருங்க நெருங்க வெடி சப்தம் நகர் முழுவதும் கேட்கும் .

2025914205300798.jpg

எங்கள் புனித சூசையப்பர் பள்ளியில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன் தலைமையாசிரியர் மாணவர்களை பட்டாசு மத்தாப்பு என்று அனைத்து வெடிகளையும் மாணவர்களை எடுத்து வர சொல்வார் ..பள்ளி சார்பாக அவரும் பாட்டாசு வாங்கி பள்ளி மைதானத்தில் ஒரு லைவ் தீபாவளி பாட்டாசு வெடி ஷோ நடத்துவார் அது சூப்பர் ...மறக்க முடியாத ஒன்று .

2025914210946794.jpg

எங்கள் செயின்ட் மேரிஸ் ஆலயத்தில் பங்கு குரு தீபாவளி அன்று பீடத்தின் முன் தீபம் ஏற்றி தீப திருநாளை பற்றி கூறி இறைவன் ஒளியானவர் என்று விளக்கி திருப்பலி நிறைவேற்றி இனிப்பு வழங்கி ஆலயத்தின் முன் பட்டாசு வெடிப்பதை இன்னும் மறக்கமுடியவில்லை .

2025914205537503.jpg

ஊட்டியை பொருத்த மட்டில் அப்பொழுதெல்லாம் குறைவான ஜவுளி கடைகள் மார்க்கெட் உள்ளே ஒரு சில கடைகளில் தீபாவளி புத்தாடை விற்பனை இருக்கும் .

முக்கியாக வெரைட்டி ஹால் , வர்த்தமான்ஸ் , மூசா சேட் , ராஜன்ஸ் ,

செல்லராம்ஸ் , என்று புத்தாடை விற்பனை களை கட்டியிருக்கும் .

2025914205716409.jpg

சப்பல் , ஷூஸ் வாங்குவது கமர்ஷியல் சாலையில் உள்ள பி. எஸ் .சி . ஷு ஷோ ரூம் தான் .

அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கோ ஆப் டெக்ஸ் ஷோ ரூமில் குவிந்து விடுவார்கள் .

202591420561607.jpg

அவர்களுக்கு மாத தவணையில் பணம் கட்டும் முறை இருந்தது .

பெரும்பாலும் ஆசிரியைகள் தீபாவளி ,கிறிஸ்துமஸ் என்று பட்டு சேலைகள் வாங்குவது இங்கு தான் .

ராஜாத்தி டீச்சர் ஒரு கிறிஸ்டியன் அதே சமயம் தீபாவளி சமையத்தில் பட்டு புடவை வாங்குவது அவருக்கு ஏகப்பட்ட குஷி கிறிஸ்துமஸ் நியூ இயர் விழாக்களுக்கு தீபாவளி நாட்களிலே பட்டு புடவை வாங்கி வைத்து விடுவார் .

இவருடன் சேர்ந்து நாராயணி டீச்சர் மற்றும் பிரீடா டீச்சரும் சேர்ந்து வாங்குவது வழக்கம் .

ராஜாத்தி டீச்சரும் பிரீடா டீச்சரும் இப்பொழுது இல்லை .

அவரின் உற்ற தோழி 80 வயது நாராயணிடீச்சர் கூறும் போது , " ராஜாத்தி டீச்சரின் தீபாவளி ஷாப்பிங் சூப்பராக இருக்கும் அவர் உந்துதலில் தான் பட்டு புடவை மற்றும் தங்க நகை வாங்குவோம் , இப்பொழுது தங்க நகை வாங்க முடியுமா"? என்கிறார் அதிர்ச்சியில் .

அதிரச மாவு வீட்டிலேயே இடித்து சுடுவது , முறுக்கு ,கலகலா , ரவை லட்டு என்று அந்த காலத்தில் அம்மாக்கள் அமர்க்கள படுத்துவார்கள் .

இப்பொழுது எல்லாம் ரெடி மேட் பலகாரங்கள் வாங்கி வைத்து விட்டால் ஓகே என்றாகி விட்டது .

அப்பா தவறாமல் தன் நண்பர்களான கோபால் மற்றும் தீ பொறி திருமலைக்கு தீபாவளி கிரீட்டிங் கார்ட் அனுப்ப தவறியதில்லை .

ரேடியோவில் தீபாவளி அன்று அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு மகிழ்வார் .

ஏன் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பதை அப்பா விளக்கி கூறுவது இன்னும் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது .

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இன கிராமங்களில் தீபாவளி பட்டாசு வெடிப்பது தான் முக்கியம் .அதே சமயம் புத்தாடைகளை கிராமத்திற்கே ஜவுளி வியாபாரிகள் எடுத்து வந்து விற்பனை செய்யும் காலம் இருந்தது .

ஊட்டி மெயின் பசாரில் ஜெயின் சமூகத்தினர் வழக்கமாக தீபாவளிக்கு அடுத்த நாள் தங்களின் கடைகளை அலங்கரித்து சிறப்பு பூஜை செய்துவிட்டு இரவு முழுவதும் பட்டாசு வெடித்து அமர்க்கள படுத்தி வந்தார்கள் .

தற்போது சுற்றுசூழல் பாதிப்பு என்று பட்டாசு வெடிப்பதை முற்றிலுமாக கைவிட்டுவிட்டனர் .

" பட்டாசு வெடிப்பதால் மாசு கெடுவது , கண்ணுக்கு தெரியாத உயிர்கள் மடிவது மற்றும் குப்பை சேருவது இது நாம் வாழும் சமுதாயத்திற்கு சரியானதல்ல என்று எங்க ஜெயின் சமூகம் பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடுகிறோம் " என்கின்றனர் .

2025914210037425.jpg

தற்போது ஊட்டியில் மிக பெரிய ஜவுளி ஷோ ரூம் வந்து விட்டது அவர்கள் இலவச பிக்கப் ட்ராப் வேனில் கஸ்டமர்களை அள்ளி வருவதும் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு அம்சம் !.

நாம் சிறுவயதில் இருந்து சென்று வந்த ஜவுளி கடைகளுக்கு சற்று தொய்வான தீபாவளி தான் .

நாம் ஒரு அந்த கால ஜவுளி கடை ஓனரியிடம் பேசினோம் ,

" அந்த கால நினைவுகளில் தான் நாங்கள் இன்னும் தீபாவளி வியாபாரத்தை நடத்துகிறோம் பெரிய கார்பொரேட் ஜவுளி ஷோ ரூம் ஊட்டியில் வர எங்களின் பிசினஸ் தளர்ந்துள்ளது உண்மை.மற்ற ஒரு விஷயம் பொட்டானிக்கல் கார்டெனில் இருந்து போட் அவுஸ் வரை எத்தனை கடைகள் அப்பொழுது எங்களை போன்ற பல கடைகளின் வியாபாரம் சிதறி விட்டதும் ஒரு காரணம் எப்படியோ இறைவன் அருளில் ஹாப்பி தீபாவளி தான்" என்கிறார் .

சுற்று சூழலை பட்டாசு மாசு படுத்துவது ஒரு பக்கமிருந்தாலும் மறுபுறம் தற்போது ஊட்டி மற்றும் மாவட்ட குடியிருப்பு பக்கம் வலம் வந்து பயமுறுத்திக்கொண்டிருக்கும் புலி ,சிறுத்தை ,கரடி பட்டாசு சப்தத்தில் தூர காட்டிற்குள் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் உள்ளூர் வாசிகள் .

அந்த காலம்போல ஊட்டியில் தீபாவளி களைகட்டவில்லை இப்பொது இன்னும் பட்டாசு கடைகள் துவக்கவில்லை .

எந்த ஜவுளி கடைகளியிலும் கூட்டமில்லை கோப் டெக்ஸ் உட்பட ..

2025914210311943.jpg

அந்த கால தீபாவளி இந்த வருடமும் நம்மை சுற்றி மத்தாப்பு போல ஜொலித்து கொண்டிருக்கிறது .

" நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கு ஏகாதசி " பாடல் நம் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது .