நயன்தாரா
நயன்தாராவிடம் இயக்குனர்கள் கதை சொல்லும் போது அவரது கணவரும் இருப்பது வழக்கமாம் . அப்படி இயக்குனர்கள் சொல்லும் கதைகளில் உள்ள முக்கிய காட்சிகளை இயக்குனர் கணவர் சுட்டு தனது படத்தில் பயன்படுத்துகிறார் என்ற புலம்பல் இயக்குனர்கள் வட்டாரத்தில் வரத் தொடங்கி இருக்கிறது.
ருக்மணி வசந்த்
மதராசி படத்தில் ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். ருக்மணி நல்ல நடிகை சூப்பரா நடிப்பாங்க என்று சக நடிகர்களிடம் ருக்மணிக்காக மார்க்கெட்டிங் செய்கிறாராம் சிவகார்த்திகேயன்.
சந்தானம்
ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சந்தானத்தை இயக்குனர் அழைக்க கெஸ்ட்ரோலில் நடிக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை நீங்க மறுபடியும் என்ன காமெடி நடிகராக்க பார்க்கறீங்க என்று மறுத்துவிட்டாராம் சந்தானம்.
சிம்பு
இப்போதெல்லாம் வெற்றிமாறன் இயக்கும் எல்லா படமும் இரண்டு பாகமாக தான் தயாரிக்கிறார். சிம்பு நடிக்கும் படமும் இரண்டு பாகமாகத்தான் வெளிவருமாம்.
தமன்னா
குத்துப்பாட்டுக்கு நான் தயார் என்று இயக்குனர்களிடம் பேசத் தொடங்கி விட்டார் தமன்னா. குத்துப்பாட்டு மூலம் பிரபலமும் ஆகலாம் கணிசமாக கரன்சியும் கிடைக்கிறது என்ற தொழில் ரகசியம் தெரிந்த நடிகை அவர்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
கூடிய விரைவில் தனக்கு திருமணம் என்று சொல்லி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் . சமீபகாலமாக பெரிய அளவு பட வாய்ப்பு இல்லை. நகைக் கடை திறப்பு போன்ற விசேஷங்களுக்கு தான் கூப்பிடுகிறார்கள். எனவேதான் இந்த முடிவாம்.
தீபாவளி ரிலீஸ் இல்லை
சூர்யா திரிஷா நடித்து ஆர்கே பாலாஜி இயக்கும் "கருப்பு "படம் தீபாவளி ரிலீஸ் இல்லையாம் இன்னும் கிராபிக்ஸ் காட்சிகள் வேலை முடியவில்லை எனவே அதற்கு பதில் தீபாவளிக்கு முதல் பாடல் வெளியாகும் என்கிறார் இயக்குனர்.
ஹரிஷ் கல்யாண்
"இன்னும் பத்து ஆண்டுகளில் ஹரிஷ் கல்யாண் டாப் ஹீரோவாக மாறிவிடுவார்"என்று 'டீசல் ட்ரைலர் நிகழ்ச்சியில் பெருமையாக பேசி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.
கீர்த்தி சுரேஷ்
விஜய் தேவரகொண்டா ஜோடியாக தெலுங்கு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
சாய் பல்லவி
தென்னிந்திய நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி இப்போது நான்கு இந்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். எனவே அம்மணி ஹாப்பி ஹாப்பி!!
அதுல்யா ரவி
முன்னணி நடிகையாக வேண்டும் என்றால் ஒரு பிளாக்பஸ்டர் வேண்டும். தீபாவளிக்கு வெளியாகும் ' டீசல் ' அந்த நம்பிக்கையை எனக்கு தந்திருக்கிறது என்கிறார் அதுல்யா.
மமீதா பைஜூ
பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ ஜோடியாக நடிக்கும் 'டியூட்' படம் தீபாவளி ரிலீஸ். ஹைதராபாத்தில் நடைபெற்ற படபிரமோஷன் நிகழ்ச்சியில் மமிதாபைஜு கலந்து கொள்ளவில்லை. மமீதா எங்கே என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு "அவர் என் இதயத்தில் இருக்கிறார் "என்று பிரதீப் ரங்கநாதன் சொல்ல கூட்டம் சிரித்தது. அதன் பிறகு சமாளித்து 'சும்மா விளையாட்டுக்கு அவர் சூர்யா சார் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் என்று சமாளித்தார். ஆனாலும் இந்த ஜோடி காதலிக்கிறதோ என்ற சந்தேகம் தற்சமயம் எல்லோருக்கும் வரத் தொடங்கி இருக்கிறது.
Leave a comment
Upload