அறிவித்திருந்த படியே ஸ்ரீசண்முகானந்தா நாடக சிரோமணி விருதுகள் அளிப்பு விழாவை நடத்தித் தர அக்டோபர் 12, 2025 அன்று மும்பை, ஸ்ரீசண்முகானந்தா ஃபைன் ஆர்ட்ஸ் சங்கீத சபாவில் நாடக ரசிகர்கள் கூடினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு ஊர் கூடி தேரிழுப்பது எனும் முது சொல் எத்தனை பொருத்தம்.
சபாவும் ரசிகர்ளும் கூட, விருதைப் பெற அழைக்கப்பட்ட முது பெரும் நாடக கலைஞர்கள் ஐவரையும் மேடையில் கௌரவித்து சபா தலைவர் டாக்டர். சங்கர் அமர்த்தி பேசினார்.
ஸ்ரீ சண்முகானந்த சபா 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது நமது நாட்டின் வளமான பாரம்பரிய கலாச்சாரத்தை நிகழ்த்து கலைத் துறையில் பாதுகாக்கவும், பரப்பவும், பிரபலப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, சண்முகானந்த நுண்கலை மற்றும் சாகித சபா, இந்திய கலாச்சாரத்தை அதன் பரந்த அளவில் மேம்படுத்துவதற்காக நாட்டின் மையமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் வாழும் வரலாற்றின் ஒரு பகுதியாகும், கலாச்சார ஒருங்கிணைப்பின் ஒரு நினைவுச்சின்னமாகும், அதன் பன்முக பரிமாணங்களிலும் மதச்சார்பற்ற தன்மையிலும் ஒரே ஒரு பொருள் தேசத்தையே எடுத்துக்காட்டுகிறது. சண்முகானந்த சபா ஒரு வாழும் பாரம்பரியம்.
சண்முகானந்தா நாடகக் குழு 2004 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. எங்கள் உறுப்பினர்களின் மறைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்வதில் நாடக நடவடிக்கைகளை ஊக்குவிக்க இது ஒரு பெரிய முன்னேற்றத்தை எடுத்துள்ளது. இந்த ஆண்டுகளில் இது வழக்கமான மற்றும் குறுகிய கால 39 நாடகங்களை மேடைகளில் அரங்கேற்றியுள்ளது. இது மே 4, 2024 அன்று இரண்டு தசாப்த கால சேவையைக் கொண்டாடியது.
பச்சாதாபத்தை வளர்ப்பதன் மூலமும், சமூக விழிப்புணர்வை ஊக்குவிப்பதன் மூலமும், சுய வெளிப்பாட்டிற்கான தளத்தை வழங்குவதன் மூலமும் மனித மாற்றத்தில் நாடகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. கலைஞரின் நடிப்பின் சக்தி, சமூகப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதோடு, சமூகங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு பயனுள்ள வழியாகும். வாழ்க்கை ஒரு மகத்தான நிகழ்ச்சி மற்றும் மேடை எப்போதும் நமது ஆழ்ந்த உணர்ச்சிகள் மற்றும் கனவுகளுக்கு ஒரு கண்ணாடியாக இருந்து வருகிறது. இது பாதிக்கப்படக்கூடிய தன்மையின் அழகைக் கற்பிக்கிறது. வகிக்கும் ஒவ்வொரு பாத்திரமும் கலைஞர் தனது சொந்த ஆளுமையின் அடுக்குகளை கழற்றிவிட்டு, மூல உணர்ச்சிகளையும் மறைக்கப்பட்ட அச்சங்களையும் வெளிப்படுத்த வேண்டும். நாடகம் என்பது ஒரு கலை வடிவம் மட்டுமல்ல, அது நாம் யார் என்பதை வடிவமைக்கும் ஒரு மாற்ற அனுபவமாகும். இது நமது பாதையை ஒளிரச் செய்கிறது, வாழ்க்கையின் சிக்கல்களை வழிநடத்த நுண்ணறிவுகளையும் உத்வேகத்தையும் வழங்குகிறது. உலகம் நமது மேடை, வாழ்க்கை என்ற நாடகம், அதில் நாமனைவரும் நடிகர்கள்.
தமிழ்நாடு, தமிழ்நாட்டின் துடிப்பான மற்றும் மாறுபட்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு வளமான மற்றும் மாறுபட்ட நாடக அனுபவத்தை வழங்குகிறது. இது 2000 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இது மாறிவரும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது மற்றும் இன்று சாதி பாகுபாடு, பாலின சமத்துவமின்மை மற்றும் ஊழல் போன்ற பரந்த அளவிலான சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை கையாள்கிறது.
சென்ற வருடம் நாடகக் காவலர் ஆர் எஸ் மனோகரின் 100வது ஆண்டாயிருந்தது.
இந்த வருடம் இந்திய நாடக கலையின் தந்தை எனப் போற்றப்படும் இப்ரஹிம் அல்காசி யின் நூற்றாண்டு ஆகும். எனில் இந்த விருதுகளின் ஆரம்பம் எவ்வளவு பொருத்தமாக உள்ளது தானே!!!
அதைக் கொண்டாடும் விதமாக இந்த வருடம் முதல் இந்த விருது வழங்கும் விழா வருடந்தோரும் நடக்க விருப்பதாக சங்கர் கூறினார்.
இந்த வருடம் முதல் வருடம் என்பதால் ஐந்து பேரை தேர்வு செய்ததாகவும் இனி வரும் வருடங்களின் வருடம் தோரும் ஒருவர்க்கு இந்த விரு வழங்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சி சபாவின் 18,165ஆவதாகும். இந்த 2025-26 சபா ஸ்ரீசண்முகானந்தா சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆடிட்டோரியத்தின் வைர விழா ஆண்டாகும்.
விருது பத்திரக் குறிப்பு
மேடைக் கலைஞராக வாழ்நாள் முழுவதும் பணியாற்றியதற்காகவும், தமிழ் நாடகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காகவும், ஸ்ரீ சண்முகானந்த சபா 2025 ஆம் ஆண்டு ஸ்ரீ சண்முகானந்த நாடக சிரோமணி விருதை இவர்களுக்கு வழங்கி மகிழ்வதாக விருது பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.எஸ் என்று பிரபலமாக அறியப்படும்,93 வயதாகும் ஆலங்காடு ராமமூர்த்தி ஸ்ரீனிவாசன் நன்கு அறியப்பட்ட இந்திய மேடை, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். 1964 ஆம் ஆண்டு ஒய்.ஜி. பார்த்தசாரதியால் நாடகத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 60 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் வாழ்க்கையில் கலைமாமணி மற்றும் சேத்ரா சங்கீத நாடக அகாடமி புரஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் 40க்கும் மேற்பட்ட தயாரிப்புகளில் நடித்துள்ளார் என்று அவருடைய விருது பத்திரம் கூறுகிறது.
மூப்பின் காரணமாக வர இயலாமையால் அவரது விருதை அவருடைய மகன் ஜெய்ஷங்கர் பெற்றுக்கொண்டார்.
ஜாம்பவான்களுக்கு முதல் மேடை கொடுத்தவர்
சென்னை விவேகானந்தா கல்லூரியில் படிக்கையிலேயே நாடகத்தின் மீதான தனது காதலை வெளிப்படுத்தினார் காத்தாடி எஸ் ராமமூர்த்தி, தனது மேடை படைப்புகள் குழு மூலம், சோ ராமசாமி, விசு, டெல்லி கணேஷ் மற்றும் கிரேஸி மோகன் மற்றும் பலர் உட்பட பல எதிர்கால ஜாம்பவான்களுக்கு முதல் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.
அவர் 50 ஆண்டுகளாக மேடையில் இருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனத்துடன் 32 நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். அவரது குழு 4,000க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளது, மேலும் அவர் குறைந்தது 5,000 முறை மேடையில் தோன்றியுள்ளார்.
நாடக ஆர்வலர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த 75 வயதாகும் ஒய் ஜி மகேந்திரன், ஒரு புகழ்பெற்ற நடிகர், நாடக ஆசிரியர், பாடகர், நாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் ஆவார். அவரது நாடகப் பயணம் 1961 ஆம் ஆண்டு தனது 11 வயதில் தொடங்கி கடந்த ஒரு நடிகராக 6 தசாப்தங்களாக மேடையில் தொடர்ச்சியாய் தோன்றியிருக்கிறார். எழுத்தாளர் மற்றும் இயக்குனர். மேடையில் கிட்டத்தட்ட 10,000 முறை மேடையில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான நாடகத்திற்கான சங்கீத நாடக அகாடமி தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.
டி.வி. வரதராஜன், 1975 முதல் தமிழ் மேடையில் நடித்து வருகிறார். 30 ஆண்டுகளில் அவரது குழுவான யுனைடெட் விஷுவல்ஸ் 22 நாடகங்களைத் தயாரித்துள்ளது மற்றும் 3,000க்கும் மேற்பட்ட முறை மேடையில் நடித்துள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக, தமிழ் நாடகத்தில் திருமதி ஞானம் பாலசுப்பிரமணியம் பிரதான நாடகங்களில் பெண்களின் குரலாக இருந்து வருகிறார். நாடு முழுவதும் நாடகம் ஆண் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சகாப்தத்தில், பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் பெண்களுக்கு நுழைவுத் தடைகளாக இருந்தன, கலைத் திறன் ஆண்களின் ஏகபோகம் என்ற ஆதிக்கத்தை தகர்த்தெரிந்துள்ளார் என்று பாராட்டியுள்ளது விருது பத்திரம்.
தோளுயர குத்து விளக்கு, விருது உருவச் சிலை, ஸ்படிக மாலை, பொன்னாடை, ஃப்ரேம் போட்ட விருது பத்திரம், ஒரு லட்சம் பணமுடிப்பு என பலப்பல பரிசுகளை ஒவ்வொருவருக்கும் கொடுத்து அணிவித்து கௌரவித்தார் சபாவின் தலைவர்.
ஒய்ஜீஎம் : நாடகம் தான் எங்க உயிர்
"நாடகம் என்று ஒரு வெத்து பேப்பரில் எழுதிக் கொடுத்தால் கூட நாங்க அதை பரிசென வாங்கிப்போம். அவ்வளோ வெறி எங்க இந்த, ட்ராமா ஃபீல்ட்ல இருக்குற எல்லோருக்கும்" என்று ஒய்ஜீஎம் சொல்ல அரங்கம் குதூகலித்து கரவொலி எழுப்பியது.
படி படி என்று அம்மா சொல்லுவாள் கண்டிப்பாகா. கல்வியாளர் குடும்பம் அல்லவா! அவங்க அப்பிடி போனவுடன் அப்பா காதுல வந்து நடி நடி ன்னு உசுப்பேத்தி விட்டுப் போவார். படிப்பும் நடிப்பும் இணையாக தொடர்ந்தது. எப்படியோ கெமிகல் எஞ்சினீரிங் முடித்தார். அத்தோடு சரி. வாழ்நாள் முழுதும் நாடகம் தான் மூச்சு என்றிருக்கிறார் ஒய்ஜீஎம்.
இந்த ஒரே மேடையில் குருவாகிய எனக்கும் எனது சிஷ்யன் டி.வி. வரதராஜனுக்கும் விருது படைத்தது செம மகிழ்ச்சி தருவதாக நெகிழ்ந்தார்.
நாடகம் தான் எங்க உயிர். நாடகத்தில் வரும்படி கிடையாது. கை செலவு தான் ஆகும். அந்த மாதிரியான ஃபீல்ட் இது என்கிறார் அவரே. சட்டென அமைதியானது அரங்கம் ஆமோதிப்பது போல.
நாடகக்காரர்களாகிய எங்களுக்கு இந்த கௌரவம் எங்களது நாடகங்களை அரங்கேற்றுவதோடு ஒரு பெரிய ஆமோதிப்பாக கருதுகிறார். இது தமிழ் நாடக உலகிற்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும்.
இந்த பணமுடிப்பை தனது அடுத்த நாடகத்திற்கு முதலாக வைக்கப்போவதாகவும் கூறி முடித்தார்.
தனக்குக் கிடைத்த பணமுடிப்பை வேத பாடசாலைக்கு அர்பணிப்பதாக திருமதி. ஞானம் சொன்னார்.
இடையே கிடைத்த சில நொடி தனிமையன தருணங்களில் விருது பெற்ற கலைஞர்களிடம் இருந்து கிடைத்த பதில்கள்
மயிலாப்பூரில் இன்றும் ஸ்கூட்டியிலேயே வலம் வரும் உங்கள் ரகசியம் என்ன என்று கேட்டதற்கு, புருவம் சுறுக்கி இது யாருடா இவ்வளவு நம்மை சேஸ் பண்றது என்று பாவம் வெளிப்படுத்த, விகடகவிலிருந்து ஆசிரியர் மதன் என்றதுதான் தாமதம், "ஓ எனக்கு மெய்லில் வருகிறதே என்றே நெருங்கி சகஜமானார். விவேகானந்தா காலேஜ் பற்றி ஒரு மேற்கோள் வர இன்னும் நெருங்கிவிட்டோம், நானும் அந்த காலேஜ் தான், நமது ஆசிரியர் மாதிரி. எல்லாம் பெரியவா அருள், மற்றும் ரசிகர்களின் அபரிதமான அன்பு தான் என்று சற்றே எமோஷணலாயிட்டார்.
தனது குழுவிலிருக்கும் நமது ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதியை நினைவு கூர்ந்தார் பாம்பே ஞானம்.
பெரியவா பற்றிய வெப்சீரீஸ் தயார் நிலையில் இருப்பதாகவும் பெரியவாவின் கருணையில் விரைவிலேயே வரும் என்றார்.
தியாகைய்யாவின் ரோலில் எப்படி ஃபீல் பண்ணினீங்க என்றதும், எனது நாடகத்தின் மீதான தணியாத தாகத்திற்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள் தான் என்றார் டி வி வரதராஜன்.
இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் புவனாவின் தொகுத்தளித்த விதத்தை விருது பெற்றவர்களும் பார்வையாளர்களும் பரந்த மனதுடன் பாராட்டியது ஒரு நல்ல நேர்மறை செயலாயிருந்தது. நிகழ்ச்சி முழுவதும் தன் கட்டுக்குள் வைத்திருந்தது, தக்க தமிழ் குறிப்புகளோடு விருது பெற்றவரை விவரித்தது,மேடையை நடத்தியது போன்றவை தான் அந்த பாராட்டுகளுக்கு காரணம்.
விருது பெற்ற ஜாம்பவான்கள் முன்னிலையில் அருள்வாக்கு என்ற சபாவின் நாடகம் அரங்கேற்றப்பட்டது சபாவின் நாடகக் குழுவினருக்கு ஒரு பெப்பாக இருந்தது. அதிலும் இந்த நாடகத்த பூர்த்தி செய்யாமலேயே அகாலமாய் இளம் வயதில் மறைந்துவிட்ட சபாவின் முக்கிய காரியதரிசி
சுபலக்ஷ்மியின் நினைவாக அந்த நாடகத்தை சண்முகா தியேட்டர் குரூபின் தலைவர் திருமதி சந்தோஷ் ராஜன் பூர்த்தி செய்து அரங்கேற்றியது மறைந்தவருக்கு செய்த நினைவாஞ்சலியாய் இருந்தது.
சரித்திர சொத்து.
மும்பை வருவோர் சண்முகானந்தா சபாவின் சேகரிப்புகளை (museum) தவறாது தரிசனம் செய்ய வேண்டும், அனைத்தும் பொக்கிஷம். பார்த்து பார்த்து சேர்த்து சேர்த்து வைத்த விஷயங்களும் ஆவணங்களும் உள்ளன.
ஒய்ஜீஎம் தம்பதியர்க்கு சபாவைச் சுற்றி காண்பித்து வருகையில்
எம் எஸ் அம்மா காலரியில் இருந்த எம் எஸ் அம்மா கைப்பட எழுதிய கடிதம் இதோ.
இந்த நிகழ்ச்சி பற்றிய முழு வீடியோ தொகுப்பு இதோ
Leave a comment
Upload