தொடர்கள்
தீபாவளி ஸ்பெஷல்
சரணாகதி தீபாவளி - கதையும் ஓவியமும் தேவா

2025917124035475.jpg

ஊசிபட்டாசு சைசில் தக்ளூண்டு சிறுகதை.

தீபாவளி காலை ஐந்து மணி.

எழுபத்தைந்தைக்கடந்த கிட்டாமணி தன் மனைவி ருக்குமணியை அழைத்து,

ருக்கு! தீபாவளி அன்னிக்குக்கூட சீக்கிரம் எழுந்து குளிச்சு பண்டிகை கொண்டாடவேண்டாமோ?, எங்கே நம்ம பையன், அவனோட ஆத்துக்காரி பசங்களெல்லாம்? மாடியிலிருந்து இறங்கி வல்லியோ? என்று கேட்டார்.

அவர் மனைவி,

“நேத்துராத்திரியே அவா எல்லாரும் ரெடிமேட் டிரஸ் எடுக்கறேன்னு, சரணா ஸ்டோர்ஸ் கிளம்பிப்போனா; ஏகப்பட்ட கூட்டமாம்; செலக்ட் பண்ணி பில் போட விடிகாலை நாலரை ஆயிடுத்தாம்.பசங்களை அங்கேயே வெயிட்டிங் ஏரியாபெஞ்சுல கொஞ்ச நேரம் தூங்க வச்சுட்டாளாம். கடைக்கு வந்தவா எல்லாம் வீடு திரும்ப லேட் ஆகும் என்பதால, முன்னேற்பாடா, கார்பார்க்கிங் ஏரியால நிறைய பாத்ரூம் கட்டி வச்சிருக்காளாம். பிச்சுமணி சித்த மின்னாடித் தான் போன் பண்ணிச் சொன்னான். அங்கேயே குளிச்சுக்கிறாளாம்.எப்படியும் காலை ஆறு மணிக்கு மேல தான் பட்டாசு வெடிக்க முடியும். கெடுபிடி இருக்கோன்னோ. ஒரு ஏழு மணி வாக்கில் வீடு திரும்பிடுவோம்”னு சொன்னான்.

கிட்டாமணி அலுத்துக்கொண்டே அங்கலாய்த்தார்,

“நம்ம பையன் இத்தனை நாளா யூ.எஸ்லே தீபாவளி கொண்டாடினான், இந்த வருஷமாவது, இங்கே வந்தானேன்னு சந்தோஷப்பட்டேன். கடைசியிலே, கங்கா ஸ்நானம் சரணா ஸ்டோர்ஸில் முடிஞ்சிடுத்தே, துணி வாங்கப் போனவாளுக்கு இது தான் "சரணாகதி”யோ?’