சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் 45 வயது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காலில் 74 வயதான காந்தி ராஜன் என்ற சட்டமன்ற உறுப்பினர் காலில் விழுந்து வணங்கியது, அதை பெருமையாக துணை முதல்வர் ஏற்றுக் கொண்டது, திராவிட மாடல் அரசின் பகுத்தறிவுக்கு இதைவிட வேறு உதாரணம் தேவை இல்லை. அடிமை எடப்பாடி, தவழ்ந்து பதவி வாங்கிய எடப்பாடி என்றெல்லாம் முன்னாள் முதல்வரை விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலின் தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையே அடிமையாக வைத்திருக்கிறார் என்பதற்கு 74 வயது காந்தி ராஜன் உதயநிதி ஸ்டாலினை காலில் விழுந்ததே ஆதாரம் என்று சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் வைக்கப்படுகிறது.
பிரதமர் மோடி தன் காலில் யாரையும் விழ அனுமதிக்க மாட்டார். அதையும் மீறி யாராவது எதிர்பாராத விதமாக பிரதமர் காலில் விழுந்து வணங்கினால் அவர் யாராக இருந்தாலும் யோசிக்காமல் அவர் காலில் விழுந்து வணங்குவார் பிரதமர். இதிலிருந்து பிரதமரின் அரசியல் வாழ்க்கை எந்த அளவுக்கு திறந்த புத்தகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் திராவிட தலைவர்கள் சமூக நீதி பகுத்தறிவு என்பதெல்லாம் மேடையில் பேசும் அலங்கார வார்த்தைகள் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதற்கு இந்த காலில் விழுந்த வீடியோவே ஆதாரம்.
Leave a comment
Upload