
இன்பமும் இடைஞ்சலும்
மிகுந்த இன்பம் தரக்கூடிய செயலைச் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .
மனது அந்த இன்பத்தைத் துய்க்க அலைபாயும். சந்தர்ப்பத்தை 'நழுவ விடாதே'என்று அடித்துக் கொள்ளும். அப்போது என்ன செய்வது?
அந்த கலித்தொகையின் இரு வரிகள் மேற்கண்ட வினாவிற்கு விடை அளிக்கிறது.
கலித்தொகை என்ற சங்ககால பாடல் தொகுப்பு கேள்விப் பட்டிருக்கிறோம் அல்லவா? எட்டுத் தொகையின் ஆறாம் பகுப்பு அது.
கழியக் காதலர் ஆயினும் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்
அர்த்தம் :
ஒரு செயலின் மேல் எவ்வளவு தான் ஆசை இருந்தாலும்,
அதைச் செய்வதால் வருகின்ற இன்பம், கூடவே பழியையும் கொண்டு வருமெனில்,
அச்செயலில் மேன்மக்கள் விருப்பம் கொள்ள மாட்டார்கள்.
யோசிக்க வைக்கும் வரிகள்!

Leave a comment
Upload