தொடர்கள்
தேர்தல்
மும்பை மாநாகராட்சி தேர்தல் 2026 முடிவுகள் – பால்கி

20260016220739342.png

ஜனவரி 15 அன்று நடந்த மாநிலம் தழுவிய நகராட்சிகளின் தேர்தலில் மும்பை மாநகராட்சியும் ஒன்று.

நேற்று இரவு 10.05 மணியளவில் கிடைத்த செய்திகளின்படி

பாஜக + ஷிண்டே சிவ சேனா 116 இடங்களிலும்

உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா + ராஜ் தாக்கரே எம் என் எஸ் –ஷரத் பவாரின் என்சிபி 72 இடங்களில் முன்நிலை வகிக்கின்றன.

ஒருவழியாய் 2017க்குப் பிறகு ஒத்தோ ஒத்து என ஒத்திப்போன தேர்தல் நடத்தி முடிச்சாச்சு என்று தேர்தல் ஆணையம் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். பின்ன என்னங்க!. கடந்த 2022, மார்ச் 7 முதல் மும்பை மாநகராட்சி அரசு நியமித்த நிர்வாகியின் கீழ் செயல்பட்டுக் கொண்டு வந்திருக்கிறது.

முடிவுகள் முழுவதுமாக அறிவித்து முடிந்தபின் இதே நிலை இருக்க உத்திரவாதம் இல்லை. எனினும், இந்த ட்ரெண்ட் படி பாஜகவின் கூட்டணி பெரும்பான்மை பெற்றது என்ற அடிப்படையில் மும்பையை ஆட்சி செய்யலாம். இந்த நிலையில் இதர கட்சிகள் என்ற கூடையில் சுயேச்சைகள் 30 + எண்ணிக்கையில் இருப்பது பாஜக கூட்டணிக்கு ஏதுவாக அமையலாம். அதே கணக்கு உத்தவின் கூட்டணிக்குப் பொருந்தும். எப்படியென்றால், அனைத்து இதர வெற்றியாளர்களும் இந்திரா காங்கிரஸ் உட்பட இணைந்திட்டால். இந்த கணக்கு ரெம்பவே கஷ்டம்.

அரசியல்ல எதுவும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

அப்படியே இந்த தேர்தல் கொடுத்த இதர செய்திகளை நாம் பார்த்தே ஆக வேண்டும்.

பாஜக இதுவரை கண்டிராத இடங்களில் வென்றுள்ளது ரெக்கார்ட்.

கடந்த 27 ஆண்டுகளாய் ஆட்சி செய்த கடைசி சொத்தான மும்பை மாநகராட்சி ஆட்சியிலிருந்தும் பால் தாக்கரேயின் வம்சமே இறக்கப்பட்டு விட்டது.

மாநிலத்தில் விகாஸ் அகாடி என பாஜக+ஷிண்டேவின் சிவ சேனா+அஜித் பவாரின் என்சிபி இருப்பினும் இந்த மாநகராட்சி தேர்தலில் தேவேந்திர பட்னவிஸும் ஷிண்டேயும் மட்டும் தான் கூட்டண வைத்துக் கொண்டார்கள்.

அஜித் பவார் சித்தப்பாவுடன் சில மாநகராட்சிகளில் கூடிக்கொண்டார்கள்.

டூரிஸ்ட்டுகளை நாங்க சேக்கரதில்லை என்று சிரிச்சி சிரிச்சி காங்கிரஸை கழட்டி விட்ட உத்தவ் தாக்கரேயின் சிவசேனை கடந்த 20 வருடங்களாக பரம வைரியாய் மாறிவிட்ட சித்தப்பாவின் மகன் ராஜ் தாக்கரேவுடன் கை கோர்த்தது.

60 களின் பாலா சாஹேப் தாக்கரே கொண்டிருந்த தென்னிந்நிய த்வேஷத்தைக் கையிலெடுத்து கொக்கரித்தனர். தொண்டர் மத்தியில் அது ஏனோ எடுபடவில்லை. பாலா சாஹேப் தாக்கரேவே கிட்டத்தட்ட 1990களிலேயே அந்த வெறுப்பை கைவிட்டுவிட்டார் ஹிந்துத்வா என்ற முறையில் அனைத்து ஹிந்துக்களை ஒன்று சேர்த்திட. 1991 மே 21 அன்று நான் அவரை ஆனந்த விகடனுக்காக பேட்டி காணுகையில் உங்களது ரொம்ப கவர்ச்சி வாசகம் இப்பவும் நடைமுறையில் உள்ளதா என்றதற்கு நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அனைத்து இந்துக்களும் இணைந்திருப்பதே நல்லது என்ற முடித்துக்கொண்டார் அந்த டாப்பிக்கை.

பாஜகவின் முன்னணி தலைவர் அண்ணாமலை, இங்கு இந்த் தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டிருக்கையில்,” மும்பை மஹாராஷ்ட்ராவின் நகரல்ல அது ஒரு சர்வதேச நகரம்” என்று உயர்த்திப் பிடித்ததை ஒரு தேர்தல் இஷ்யூவாக்கி சுட்டுக்கொண்டனர் இந்த தாக்கரேக்கள்.

20260016215009957.jpg

அண்ணாமலை ஆதரித்த 3 பாஜக வேட்பாளர்களான மலாட் மேற்கு பகுதின் 35 வார்டின் யோகேஷ் வர்மா & 47 வார்டின் தேஜிந்தர் சிங்க் டிவானா மற்றும் சார்க்கோப் பகுதி வார்ட் 19ன் தக்ஷதா கவ்தாங்கர் வெற்றியும் பெற்றுள்ளனர்.

உத்தவ் தனி, ஷரத் பவார் தனி, காங்கிரஸ் தனி..

ஏக்நாத் ஷிண்டே, "பாலா சாஹேப் தாக்கரேவின் உண்மையான வாரிசு நான்தான் நாங்கள்தான் பேர் மட்டும் இருந்தால் போதுமா? அவரது கொள்கைகளை விற்றவர் எப்படி அவரது வாரிசு என்பது?".

தாக்கரே பிராண்ட் தடம் புரண்டு விட்டது.

ஷிண்டே சிவசேனைக்கு 95க்கு 29 தான் மார்க். அதாவது, 30.5% தான் வெற்றி கணக்கீடு.

பாஜகவின் வெற்றி கணக்கு, 93/135, அதாவது, 69%. இதனாலேயே பாஜக ஒண்டியாகவே வண்டியை இழுக்க வேண்டியிருக்கு. ஆனால் அதே உத்தவின் வெற்றி கணக்கீடு 61/165 = 37%.

இனி வரும் காலத்திற்கென, பாஜக இதை நோட் செய்ய தவறமாட்டார்கள்

சில கொசுறு : மாநிலம் முழுவதிலும் உள்ள 29 நகராட்ச்சிகளுக்கும் தான் தேர்தல் நடந்து முடிந்துள்ளன.

இந்த முடிவுகளின் இப்பொதைய நிலவரப்படி பாஜக 20க்கும் மேற்பட்ட நகராட்சிகளை தனதாக்கிக் கொண்டுள்ளது.

கிட்டத்தசோலாப்பூர் நகராட்ச்சிக்கு ஜெயிலி இருக்கும் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

கௌரி லங்கேஷின் கொலையாளி அக்யூஸ்டு சுயேச்சையாய் நின்று வெற்றியும் பெற்றுள்ளார்.

அண்ணாமலை சொன்னது போலவே ட்ரிப்பிள் என்ஜின் தான் வெற்றி கண்டுள்ளது.

நாட்டளவில் மோடி, மாநிலத்தில் பட்னவிஸ் மும்பை மாநகருக்கும் பாஜகவின் மேயரே என்று ட்ரிப்பிள் என்ஜின் சர்கார் தான்.

மும்பை மாநாகராட்சியின் பட்ஜெட் ₹75,000 கோடி. இங்கே சில மாநிலங்களில் கூட அவ்வளவு பட்ஜெட் நம்பர் கிடையாது.

தானா மாநகராட்சி தேர்தலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் (மாத்ரே குடும்பம்)வெற்றி பெற்றுள்ளனர், அதுவும் வெவ்வேறு கட்சியில் நின்று.