தொடர்கள்
அரசியல்
அரசியல் கட்சிகளின் பெண்கள் பாசம்

20260318055553198.jpeg

அரசியல் கட்சிகளின் பெண்கள் பாசம் !!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று சட்டப்பேரவைத் தேர்தல். பெண் வாக்காளர்களை குறி வைத்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்குகின்றன.

திமுக ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையாக கிட்டத்தட்ட ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குகின்றது.

தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் தருவோம் என்று சொல்ல அதிமுகவும் நாங்கள் வந்தால் 2000 ரூபாய் தருவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

திமுக 8000 ரூபாய் கூப்பன் தருவோம் அதை வைத்து உங்களுக்கு விருப்பமான மின்தொடர்பான சாதனங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நாங்கள் 10,000 ரூபாய் தருவோம்.

அதை நீங்கள் உங்கள் குடும்ப செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் எடப்பாடி.

இலவச பிரிட்ஜ் ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டர் இலவசம் என்று சொல்லி இருக்கிறார் எடப்பாடி. அதேபோல் பெண்களுக்கு வழங்கப்பட்ட அந்த தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டத்தை மீண்டும் தொடர்வோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள்.

விஜய் உதவித்தொகை 2500 ரூபாய் வழங்குவோம் என்று சொல்லி இருக்கிறார்.

ஆண்டுக்கு விலையில்லா ஆறு சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்கள் மற்றும் மகளிர் குழுக்களுக்கு அஞ்சு லட்சம் வட்டியில்லா கடன் இதுவும் விஜயின் தேர்தல் வாக்குறுதிகள் தான்.

வாக்காளர் பட்டியல் பொருத்தவரை ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.

மகளிர் மீது கரிசனம் காட்டுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

பெண்களுக்கான இலவச பயணம் திமுகவுக்கு ஒரு முக்கிய ஓட்டு வங்கி.

இது தவிர உரிமைத்தொகை இதெல்லாம் சென்ற முறை திமுக ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணம்.

இப்போது கூடுதலாக 8000 ரூபாய் கூப்பன் என்பது பெண்களை யோசிக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் தமிழக முதல்வர் இந்த 8000 ரூபாய் கூப்பன் விஷயத்தை தொடர்ந்து சொல்லி வருகிறார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டார் என்றும் பெருமையாக முதல்வர் சொல்கிறார்.

பெரும்பாலான பெண்கள் கணவர் சொல்வதைக் கேட்காமல் தாங்களே சுயமாக சிந்தித்து ஓட்டு போடுவதை பழக்கமாகக் கொண்டவர்கள். அதனால்தான் எம்ஜிஆர், கணவர் பேச்சைக் கூட தாய்மார்கள் கேட்க மாட்டார்கள்

ஆனால், நான் சொன்னால் கேட்பார்கள் என்று நம்பிக்கையோடு சொன்னார்.

எம்ஜிஆரின் வாக்கு வங்கி பெண்கள் தான்.

.எம்ஜிஆரின் தொடர் வெற்றிக்கு பெண்கள் தான் முக்கிய காரணம். இதை கொஞ்சம் காலதாமதமாக திமுக தெரிந்துகொண்டு மகளிர் மீது பாச மழை பொழிகிறது. எடப்பாடி போட்டி போட்டுக் கொண்டு மகளிர்க்கான சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறார்.

பெண்கள் ஆதரவு சமுதாய அமைப்புகள் இப்படி இலவசங்களை வாரி வழங்குவதை தவிர்த்து விட்டு நியாயவிலைக் கடையில் தரமான அரிசி பருப்பு டாஸ்மாக்கை இழுத்து மூடுவது போன்றவற்றை செய்தால் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.

அது எல்லாம் அரசியல் தலைவர்கள் யோசித்து கூட பார்க்க மாட்டாங்க என்று அவர்களே சொல்கிறார்கள்.

20260318055640211.jpeg

அதிகாரம் செலுத்த வேண்டிய பாராளுமன்றத்தில் மகளிரிக்கான 33 சதவிகிதத்தை முறியடித்தது எதிர்கட்சிகள்.

இது அவர்களது பெண்கள் பாசத்தின் நகை முரண் !!!!