
தமிழ்நாட்டில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் 4 லட்சமாகஇருந்த நிலையில், நடப்பாண்டில் அது 12.51 லட்சமாக அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் மூலம், இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர்களின்இரட்டைப் பதிவுகள் நீக்கப்பட்டன.இதனால், தமிழ்நாட்டில் வாக்காளர்பட்டியலிலிருந்து 70 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டின் 17ஆவதுசட்டமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, 62 லட்சம் வாக்காளர்கள் குறைவாகஉள்ளனர்.அதேநேரம் 7.40 லட்சம் புதிய இளம் வாக்காளர்கள் உருவாகியுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்பார்த்திருக்கும் ஐந்து மாநிலங்களில் இளம்வாக்காளர்களைப் (21-29 வயது) பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 1.31 கோடி பேர் உள்ளனர். இரண்டாவது இடத்தில் 1.05 கோடி இளம் வாக்காளர்களைக் கொண்டுதமிழ்நாடு உள்ளது. மொத்தம் 5.67 கோடி வாக்காளர்களில் 20.72% பேர் 29 வயதுக்குஉள்பட்டவர்கள். இவ்வளவு இளைஞர்கள் தமிழ்நாட்டின் தலையெழுத்தைத்தீர்மானிக்கப்போகிறார்கள் என்பது இந்தத் தேர்தலின் முக்கியமான அம்சமாகும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போது முதல்முறை வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது..இந்த இளம் வாக்காளர்கள்பெரும்பாலும் வேலைவாய்ப்பு, கல்வித் தரம் மற்றும் எண்மக் உள்கட்டமைப்பு போன்றஅம்சங்களைக் கருத்தில் கொண்டு தங்களின் வாக்குகளைச் செலுத்துவார்கள் என அரசியல்ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், இளைஞர்களையும் இளம்பெண்களையும் கவரும் விதமாக புதியதேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் முன்வைக்க வேண்டிய கட்டாயத்திற்குதள்ளப்பட்டுள்ளன.இது நாட்டின் முதுகெலும்பான இளஞர்களின் வளர்ச்சிக்கு ஓர் ஆதரவானஅரசியல் சூழ்நிலையாகும்.இந்த இளைஞர்கள் தான் எதிர்கால தலைவர்கள். சமூகம்,மற்றும்குடும்பங்களின் அடிப்படை ஆதாரங்கள்.
ஆனால் நவீன சமுதாயத்தில் பெருவாரியான இளைஞர்கள் மதுவிற்கும் போதைப்பொருளுக்கும் அடிமையாகி குற்றவாளிகளாக திரிந்து வருவது வேதனையாக இருக்கிறது. ஆனால் அவர்கள் தற்போது வாக்களிக்கும் உரிமையை பெற்று இருக்கிறார்கள். இவர்கள்தேர்தல் தினத்தன்று தங்களுக்கு நல்லதைச் செய்யும் நல்லவர்களையும் வல்லவர்களையும்முறையாக அடையாளம் காண வேண்டும். அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும்வேண்டும் இந்த மாபெரும் பொறுப்பை உணர்ந்து இவர்கள் உஷாராக செயல்பட வேண்டும்.
ஓர் இருபது 20 நாட்கள் கடும்வெயிலில் தேர்தல் பரப்புரைகளை முடித்துவிட்டு,பின்னர் குளிர்சாதன அறைகளில் ஓய்வெடுப்பது அரசியல்வாதிகளின் வாடிக்கையானசெயலாகி விட்டது. இதன் மூலம் அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கு அவர்கள் பெறும்சலுகைகள் ஏராளம். தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சாமான்ய மக்களால் அவர்களை எளிதில்பார்க்கக் கூட முடியாது.
நம்முடைய இளைஞர்களுக்கு அன்றாட வயிற்றைக் கழுவுவதற்கு வேலையே இல்லாதநிலையில் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் மக்களுக்கு சேவைசெய்வதற்காகத்தான் தேர்தலில் நிற்பதை உறுதி செய்துக் கொள்வது வாக்காளர்களின்அடிப்படைக் கடமையாகும். தேர்தலில் ஏதோ ஒரு கணக்குக் காட்டி விட்டுவருமானத்துறையில் இருந்து தப்பிப்பவர்களும் உண்டு. அரசியல் ஒரு லாபகரமானதொழிலாகி விட்டது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.இதை புதியதாகவாக்களிக்கும் வரும் இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவர்கள் சிந்திக்கும் திறனையும் நல்ல முடிவு எடுக்கும் திறனையும்பெற்றிருக்கிறார்கள்.இந்தக் காரணத்தினால்தான் இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமைகொடுக்கப்படுகிறது. இந்நிலையில் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து அனைத்து படித்தஇளைஞர்களுக்கும் ஏதோ ஒரு வேலை கிடைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய புதியஅரசு அமைய வேண்டும்.
இனியும் வேலையின்மைக் காரணமாக படித்த இளைஞர்கள் குற்றவாளிகளாகமாறுவதும்,தற்கொலை செய்துக் கொள்ளுவதும் தவிர்க்கப்பட வேண்டும். தவறான அல்லதுவாக்களிக்காத வாக்காள பெருமக்களால் சமூகத்தில் பெரும் மாற்றம் நிகழலாம்.இதைநிர்ணயிக்கும் நாளே தேர்தல் நாள் ஆகும்.
எனவே, முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் தங்களுக்கும், தங்கள்வசிக்கும் பகுதிக்கும் நன்மை செய்யும் வேட்பாளர்களுக்கு மட்டுமே கட்சி பேதம் பார்க்காமல்வாக்களிக்க வேண்டும். நம் பணத்தில் நமக்கு அளிக்கப்படும் இலவசங்கள் இனியும் வேண்டாம்என்னும் மனநிலையை பெறவேண்டும்.எனவே, நாம் அனைவரும், குறிப்பாக இளைஞர்களும்,பெண்களும் உஷாராக வாக்களிப்பது நல்லது.

Leave a comment
Upload