
புஹ்ஹாஹாஹா என்று சிரிக்கிறார் என்று கிண்டல் செய்யலாம். ஆமை கறி என்று கேலி செய்யலாம்.
பிரபாகரனை பார்த்தார் என்று கம்பு சுத்துகிறார் என்றும் கூட ஒரு பக்கம் அவரை கலாய்க்கலாம்.
ஆனால் தேர்தலில் தில்லாக, இலவசங்கள் கொடுக்க மாட்டேன் ஆனால் வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவேன் என்ற ஒற்றை தாரக மந்திரத்தை சொல்லி ஓட்டுக் கேட்கும் ஒரே ஆண்மகன், தலைவர் சீமான் என்றால் அது தான் நிதர்சனம்.
ஒவ்வொரு கழகங்களும் மாறி மாறி இலவசங்களை அளித்து வாக்குறுதி கொடுத்து வாக்கு கேட்கிறது.
அது நாட்டை அழிக்கும் செயல் என்று மேடை தோறும் தொண்டை தண்ணீர் வற்ற கத்துகிறார், புலம்புகிறார் சீமான்.
அவர் ஒருவர் தான் தேர்தலை தேர்தலாக சந்திப்பதாக தெரிகிறது.
அனைத்து கட்சிகளும், பாஜக உட்பட, இலவச ஓடைகளில் படகு விட்டுக் கொண்டிருக்கிறது.
சீமான் ஜெயிப்பாரா இல்லையா என்பது மக்களின் கைகளில் இருக்கிறது.
ஆனால் தேர்தல் பரப்புரையில், சந்தேகமில்லாமல் பொது ஜனங்களின், நாட்டு நலம் விரும்பிகளின் மனதில் சந்தேமில்லாமல் இதுவரை ஜெயித்திருப்பது சீமான் மட்டுமே.

சபாஷ் சீமான்.

Leave a comment
Upload