ஊட்டி ஒரு அழகான ஊர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அந்த அழகுக்கு மெருகேற்றும் பல விஷயங்கள் குவிந்திருந்தாலும் ஊட்டி நகரின் மைய பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு மாரியம்மன் கோயிலின் அழகு அனைவராலும் ஈர்க்கப்பட்டுள்ளது
.
மிகவும் பழமையான பாரம்பரியமிக்க இந்த கோயிலின் தேர் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் துவங்கிய முதல் செவ்வாய் கிழமை நடைபெறும்.
இந்த வருடம் சிறப்பாக சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14 ஆம் நாள் செவ்வாய் கிழமை தமிழ் புத்தாண்டு அன்று தேர் திருவிழா நடைபெற்றது மிக சிறப்பாக கருதப்படுகிறது
ஊட்டி அருள்மிகு மாரியம்மன் கோயில் இந்தியாவில் முக்கியமான கோயில் மாரியம்மனும், காளியம்மனும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கும் சிறப்பு இந்த கோயிலிலும் நேபாளில் உள்ள கோயிலிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக பழமையான இந்த கோயில் சந்தை மாரியம்மன் கோயில் என்று தான் அழைக்கப்படுகிறது.
நகரின் மையப்பகுதியில் சந்தை செயல் பட்டு வருகிறது.
அங்கு இருந்த ஒரு மரத்தடியல் அம்மன் அருள்புரிந்தாராம் அதே இடத்தில் தான் தற்போது கோயில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளது.

ஊட்டி நகருக்கே மெருகேற்றும் இந்த கோயிலின் வருடாந்திர தேர் திருவிழா பிரிசித்திபெற்றது.
ஒரு மாதம் முழுவதும் திருதேர் நகர்வலம் வருவது அருமையான ஒன்று என்று சொன்னால் மிகையாகாது.
ஊட்டி மாரியம்மன் தேர் திருவிழா கடந்த மாதம் 15 ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு பூச்சொரிதலுடன் துவங்கியது.
தினமும் ஒரு சமூகம் என்று தேர் வீதி உலா வந்தது.

முதல் நாள் கன்னடா ஒக்கலிகர் சமூகத்தினர் தேர் உபயம் மேற்கொண்டனர் தொடர்ந்து படுகர்,தோடர் என்று 36 தேர் உபயம் நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் மிக சிறப்பாக தேர் வீதி உலா நடைபெற்றது. தினமும் ஊட்டி நகரே திருவிழா கோலம் பூண்டது.
நாம் கோயிலின் குருக்களான சரவணன், விஜயானந்த் மற்றும் சைலேஷை சந்தித்து பேசினோம்,

“ உதகை மைய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மா ஸ்ரீ மகாகாளி திருக்கோயிலின் வருடாந்திர பிர்மோட்சவ திருவிழா வானது பங்குனி மாததில் ஆரம்பித்து சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய் அன்று மிக பெரிய தேர் திருவிழா நடைபெறுகிறது.பங்குனி முதல் வாரத்தில் இருந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று நாள்தோறும் ஒவ்வொரு சமுதாயத்தின் தேர் உபயம் நடந்து வந்தது.
எங்கள் கோயிலின் பிரமோற்சவம் மிக சிறப்பானது என்னவென்றால் மகா மாரி மகாகாளி சகோதரிகளாக வீற்றிருக்கும் முக்கிய பீடமாக அமைந்துள்ள சந்தைக்கடை மாரியம்மா விற்றிருப்பது மிக சிறப்பான ஒன்று.
மேலும் மகாமாரி, மகாகாளி,மகா காட்டேரி சக்திகள் ஒரே இடத்தில் உள்ளது மிக சிறப்பான ஒன்று.
காட்டேரி அம்மனுக்கு எங்கும் விக்ரகம் இல்லை இந்த கோயிலில் மட்டும் விக்கிரகம் உள்ளது சிறப்பானது. சமவெளி பகுதியில் உள்ள காட்டேரி பக்தர்கள் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்து செல்வது

மேலும் இங்கு முதல் செவ்வாய் அன்று பெரிய தேர் திருவிழா நடைபெறுகிறது .
இதே நாளில் தான் சமயபுரத்தில் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.
இந்த தேரானது பகல் 1.55 மணிக்கு புறப்பாடு செய்யப்பட்டு அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு நிலையை வந்து அடைவது ஆதிகாலமாக நடைபெற்று வருகிறது. எல்லா இடத்திலும் பிரமோற்சவம் 11 நாள் நடைபெறும் இங்கு மட்டும் தான் 36 நாட்கள் தேர் திருவிழா நடைபெறுவது மிக சிறப்பான ஒன்று.
நம் ஆலயத்தில் ஒரே பீடத்தில் வீற்றிருக்கும் மகா மாரி மகா காளி உலகத்தில் இங்கும் நேபாளத்திலும் மட்டும் தான் இரண்டு பெண் தெய்வங்கள் வீற்றிருகின்றனர்.
எல்லா பூஜைகளும் ஆகம முறைப்படி நடைபெறுகிறது.
இந்த பெரிய தேர் திருவிழா முடிந்து மூன்று நாட்களுக்கு நடைபெற்று வெள்ளிக்கிழமை விடையாற்று என்று சொல்லக்கூடிய இறுதி தேர் நடைபெறுவது சிறப்பான ஒன்று”என்று கூறினார்கள்.
கடந்த செவ்வாய் அன்று தமிழ் புதாண்டின் முதல் நாளன்று தேர் திருவிழா என்பது மிக சிறப்பாக அமைந்தது.

வழக்கமான நேரமான பகல் 1.55 மணிக்கு அறநிலை துறை உதவி ஆணையாளர் உஷா நந்தினி தேரை வடம் பிடிக்க தேர் நகர்ந்தது.
விடுமுறை என்பதால் ஏகபட்ட பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
நள்ளிரவு வரை கூட்டம் இருந்தது
திரு தேர் விடிய விடிய நகரின் முக்கிய வீதிகளில் தவழ்ந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்து காலை 7 மணிக்கு கோயிலை வந்தடைந்தது.
சந்தை மாரியம்மன் என்ற பெருகேட்ப கோயிலை சுற்றி ஏகபட்ட கடைகள் குழுமி இருந்தன.

மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் அவிநாசி பகுதியில் இருந்து வித வித மான விளையாட்டு பொருள்கள், முறுக்கு , அல்வா , செயற்கை பூக்கள், மணிமலைகள் என்று குவிந்திருந்தன.
தேர் திருவிழாவை தொடர்ந்து ஊட்டி கோடை சீசனும் துவங்கியது என்பது குறிப்பிடதக்கது.

Leave a comment
Upload