தொடர்கள்
விகடகவியார்
விஜய் தேர்தல் வியூகம் -விகடகவியார்

20260316194008991.jpegநடிகர் விஜய் நம்புவது இளைய தலைமுறை மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை.....

விஜய் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஜோசப் விஜய் என்று பேச ஆரம்பித்தார்.

அரசு ஆவணங்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் அவர் பெயர் ஜோசப் விஜய் என்று தான் இருக்கிறது

பிரச்சாரத்துக்கு அனுமதி தராமல் திமுக ஆதரவு அதிகாரிகள் இழுத்து அடிக்கிறார்கள் என்று தேர்தல் ஆணையத்திலும் நேரில் சென்று புகார் தந்தவர் விஜய்.

அப்படிப்பட்ட தலைவர் பிரச்சாரத்திற்கு ஒழுங்காக வருகிறரா என்றால் இல்லை .

அவர் போட்டியிடும் இரண்டு தொகுதியிலேயே கூட அவர் சரிவர பிரச்சாரம் செய்யவில்லை.

மூன்று நாட்கள் பரப்புரை செய்த விஜய் அடுத்த மூன்று நாள் தங்கள் பரப்புரையை ரத்து செய்தார்.

பல பரப்புரை கூட்டங்களுக்கு அவரால் சரியான நேரத்துக்கு வர முடியவில்லை. காவல்துறையை பொருத்தவரை அவர்கள் சொல்லும் காரணம் விஜய்க்கு வரும் கூட்டம் ஒரு கட்டுப்பாடுடன் இல்லை

கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை கொஞ்சம் கெடுபிடிகளை அதிகப்படுத்தி இருக்கிறது.

இதுக்கு காரணம் எந்தவித அசம்பாவிதத்திற்கும் முதல் பலி காவல்துறை தான்.

திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் இரண்டு நகரங்களில் காலை மாலை என பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

காலை நடை பயணம் போது வாக்கு சேகரிக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தினமும் பல தொகுதிகள் என்ற கணக்கில் வாகனப் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வாகனப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த தலைவர்கள் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டு சொல்லும் படி எந்த அசம்பாவிதங்களும் நடப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

மார்ச் 30 ஆம் தேதி பெரம்பூரில் பரப்புரை செய்தார் விஜய் அதன் பிறகு திருச்சி, புதுச்சேரியில் பரப்புரை செய்த விஜய் சென்னையில் அடுத்தடுத்த நாட்கள் மேற்கொள்ள இருந்த பரப்புரையை ரத்து செய்தார்.

சென்னையில் வில்லிவாக்கம், அண்ணா நகர் ,விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் விஜய் பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் தமிழக வெற்றி கழகம் அனுமதி கேட்டது.

சென்னை காவல்துறை அனுமதி அளித்தது.

வில்லிவாக்கத்தில் பகல் 12 முதல் ஒரு மணி வரையும் தியாகராய நகர் தொகுதியில் மதியம் ரெண்டு மணி முதல் மூன்று மணி வரை பரப்புரை செய்ய அனுமதி வழங்கிய காவல்துறை சில நிபந்தனைகளை விதித்தது. இதனால் ஏப்ரல் ஆறாம் தேதி விஜயின் வில்லிவாக்கம் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.

ஏப்ரல் ஏழாம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் நடக்கவிருந்த தேர்தல் பிரச்சாரமும் ரத்தானது.

.பாண்டிச்சேரியில் வாக்குப்பதிவு காரணம் காட்டி ஏப்ரல் ஒன்பதாம் தேதிக்கான கடலூர் பிரச்சாரம் ரத்து. இவையெல்லாம் தமிழக வெற்றி கழகம் எடுக்க முடிவு தான்.

தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இதற்கு காவல்துறை மீது புகார் சொல்கிறார்கள். மற்ற தலைவர்கள் எல்லாம் பல மணி நேரம் பிரசாரம் செய்ய அனுமதித்து விட்டு எங்கள் தலைவருக்கு மட்டும் சில மணி நேரம் அனுமதி தருகிறார்கள் என்பது குற்றச்சாட்டு.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் எட்டாம் தேதி விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் போட்டி போடுகிறது எல்லா ஊர்களிலும் விஜயின் பிரச்சாரம் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தன்னை பிரச்சாரம் செய்யவிடாமல் திமுக அரசு நியமித்த அதிகாரிகள் மறைமுகமாக இடையூறுகளை தருகின்றனர்.

விஜயின் அரசியல் பிரவேசம் அவருக்கு தமிழக மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு எல்லாவற்றிலும் அதிகம் பாதிக்கப்பட போகிறது திமுக.

வேறு எந்த கட்சித் தலைவருக்கும் இந்த அளவுக்கு கூட்டம் வருவதில்லை.

அதனால்தான் இந்த கெடுபிடி என்கிறார் விஜய்.

விஜய் குழந்தைகளிடம் தாத்தா பாட்டி அம்மா அக்கா சித்தி சின்னம்மா பெரியம்மா எல்லோரும் விசில் சின்னத்தில் ஓட்டு போட சொல்லச் சொல்லுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.

இப்போதைக்கு விஜயின் நம்பிக்கை நட்சத்திரம் குழந்தைகள், சிறுவர்கள் தான்.