
தப்பா நென்ச்சிக்காதீங்க, தமிழன் என்ற முறையிலும், எப்பிடி இர்ந்த அணி இப்பிடி ஆணியில மாட்ட்ற அளவுக்கு ஆடுதுன்னு இதயத்தின் ஒரு ஒரம் அடித்துக்கொண்டே இருந்தது என்னமோ உண்மைதானுங்க.
ஹ்ஹப்பா…. இந்த வாரம் ரெண்டு கெலிப்பு, கெத்தா நம்ம CSK அஞ்சி மேச்சு வெளயாடி மூணுல தோத்து நாலு பாயிண்ட்டோட எட்டாம் இடத்தில் நிக்குது.
ஆ…ங்க்.. அவுங்க, CSK, தமிழர் புத்தாண்டு அன்னைக்கி சூப்பரா ஒரு விசயத்தை பண்ணீருக்காங்க.
நீங்களே இந்த வீடியோவப் பாருங்களேன். ஆச்சரியப்படுவீங்க ஆனந்தப் பட்டுப் போவீங்க.
வீரர்கள் எல்லோர் பேரும் தமிழ்ல எழுதி, எது அவங்க பேருன்னு கண்டுபுடிக்க சொல்லி கேட்டிருக்காங்க. கடைசீல அவங்க கைல பேனா குடுத்து அதேமாரி தமிழ்ல எழுத வச்சிருக்காங்க அந்த பேருக்குக்கீழ..!
கெய்க்வாட் ரொம்ப வேகமா எழுதனமாரி இருந்துச்சு. சஞ்சு, ஆயுஷ் , அகில் ஹுசைன் , ஓவர்டன் எல்லாருமே எழுதனாங்க. முடிச்சுட்டு எல்லாரும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னாங்க.
நீங்க ஒரு மிகச்சிறந்த மொழியை விரல்பிடிச்சு இன்னைக்கி எழுதீருக்கீங்க வீரர்களே… ன்னு அணியின் நிர்வாகம் சொல்லியிருப்பாங்க கண்டிப்பாக.
எப்பவுமே Csk Page மத்தவங்களவிட ஒரு step முன்னாடி இருப்பாங்க.
அந்த Creative டீமுக்கு பாராட்டுக்கள். 👏👏
விசில் போடுவோமே.
இது இப்படி இருக்க, அப்பிடியே அணிகளின் மூட் பற்றிய விஷயத்தில் தீவிரமா நுழைந்து பார்த்தால்,
24 மேட்ச்சுகள் முடிவுல, ஒரு தோல்வியும் இல்லாம போன தொடரின் அதிரடி ஆட்டத்தை அப்பிடியே கண்டின்யூ பண்றாங்க நம்ம பஞ்சாப் அணி. அவர்களின் துரதிர்ஷ்டம் போன தொடரில் ஃபைனலில் பெங்குளூருவிடம் அன்னியாமாக தோற்றுப்போனார்கள். அந்த மேட்ச் பஞ்சாபினது தான்.

அந்த ரிதம் இப்ப வெறியாக மாறி, பாருங்களேன் நீங்களே! மும்பை அடிச்ச 197 ரன்களை 91 பந்துகளிலேயே அடிச்சி தூள் பண்ணிட்டாங்க. இத்தினிக்கும், மும்பை, தன்னோட தோட்டத்து பிச்சிலத் தான் ஆடியது. இது மும்பை இண்டியன்ஸுக்கு 4ஆவது தொடர் தோல்வி. ரெண்டு பாயிண்ட்டோட ஒம்பதாவது ரேங்க்ல இருக்கு. ஹார்திக் பாண்டியாவை ரசிகர்கள் நெரில போட்டு மிதிக்காத குறைதான். ரோஹித்தை மீண்டும் கொண்டு வான்னு குரல் வலுக்குதாம்.
போன வாரம் வைபவத்தின் வைபவத்தில் மூழ்கிப்போன இவனுக்கு தொடரின் 21ஆவது மேட்ச்சில் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பந்தில் கேட்ச் கொடுத்துவிட்டு அவுட்டாகியது சாக் தான். ஆனைக்கும் அடி சறுக்கும்.

[வைபவின் டக்கும் காவ்யா மாறனின் ரியாக்ஷனும்]
இருந்தாலும் பஞ்சாப் நாலு மேட்ச் ஜெயிச்சி கொல்கத்தா மேட்ச் தண்ணியில் மூழ்க கிடைச்ச பிரிச்சிகிட்ட ஒரு பாயிண்டுடன் 9 பாயிண்ட்ஸ் என்ற ரீதியில் முதலிடத்திலும், 2, 3 என்ற இடங்களில் பெனுளூருவும், ராஜஸ்தானும் நாலு மேட்ச் ஜெயிப்பு, ஒரு மேட்ச் தோற்பு என்ற அடிப்படையில் 8 பாயிண்டுகளுன் முன்னேறி உள்ளன.
ஹைதராபாத், டெல்லி, குஜராத், லக்னௌ, சென்னை தலா 4 பாயிண்டுகளுடன் ரன் ரேட் அடிப்படையில் முறையே , 4, 5, 6, 7, 8 ரேங்குகள் பெற்றுள்ளன.
இந்தியாவிலிருந்து வந்த புது வரவுகள் தங்கள் திறமைகளை காண்பித்து வருகிறார்கள். போகப் போகத் தெரியும், தாக்குபிடிப்பார்களா என்று.
பெங்களூருவுடன் ராஜஸ்தான் படு தோல்வி அடைந்தது. அந்த மேட்ச்சில் ராஜஸ்தான் அணியின் மேனேஜர்ரோமி பிந்தர் வீரர்கள் அமர்ந்திருக்கும் டக் அவுட்டில் செல் போனுடன் இருந்தது சர்ச்சை பொருளானது.
இதற்கிடையில், எனது பட்டயக்கணக்காளர் நண்பர் பகிர்ந்துகொண்ட அவரது அலசலை இங்கே தருகிறேன். ஈசியாக கடந்து செல்ல முடியவில்லை தான்.

“அன்றைய இந்த தொடரின் 21ஆம் மேட்ச் - RR - SRH போட்டியானது, RR நிர்வாகத்தின் மீதான ஊழல் மற்றும் போட்டி நிர்ணயம் குறித்த பிசிசி-யின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போல் இருந்தது. 8-வது இடம் வரை வலுவான பேட்டிங் பலம் கொண்ட RR அணிக்கு, SRH எடுத்த 216 ரன்கள் ஒரு பெரிய சவாலாக இருக்கவில்லை.
ஆனால், சந்தீப் சர்மா மற்றும் துஷார் தேஷ்பாண்டே போன்ற புதிய பந்துவீச்சாளர்கள் இன்று பந்துவீசிய விதம் எனக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த இருவரும் சேர்ந்து 104 ரன்களையும், 10 வைடுகளையும் விட்டுக்கொடுத்து மொத்தமாக 216 ரன்களை எடுத்தனர். அஞ்சும் சோப்ரா இந்த பந்துவீச்சாளர்களையும், அணியில் உள்ள சில அடையாளம் தெரியாத நபர்களின் மோசமான ஃபீல்டிங்கையும் பார்த்து பாக்ஸில் கத்திக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு பேட்டிங் செய்த RR அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தது, இவ்வளவு வலுவான பேட்டிங் பலம் இருந்தும் எந்த அணியும் இவ்வளவு கேவலமாக இறங்க முடியாத ஒரு நிலை!
இரு அணிகளும் வெளிப்படையாகச் செய்த இந்த போட்டி நிர்ணயம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தக் கோரி நான் பிசிசி-க்கு கடிதம் எழுதியுள்ளேன்”.
இன்று பிசிசிஐ, மேற்கூறப்பட்ட விஷயத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைப் படி ராஜஸ்தான் மேனேஜரை தண்டனைக்குள்ளாக்க எண்ணமில்லை. காரணம், அவரது மோசமான உடல் நிலை (இரண்டு நுரையீரல்களும் பழ்தடைந்துள்ளதாம்) காரணமாகத் தான் அவர் செல் போன் கொண்டு வருகிறார், வேறேதும் குற்ற எண்ணமில்லை என்று முடிவு செய்துள்ளது
திடீர் கோடீஸ்வரர்கள், ரோட்டோரத்தில் குடியிறுப்பு, மட்டையப்பிடித்து திறமையால் தான் அணியும் வாங்கியிருக்கிறார்கள். எனினும், பேட்டிங்க் என்றால் காடா அடி தான் என்று ஆகி விட்டது ஆட்டத்தின் நளினத்தைக் கொச்சை படுத்துகிறது.
இந்த அலசல் தொடரும்…
இந்த தொடரில் இந்த வார இறுதி வரை (24 மேட்ச் முடிவில்)
228 ரன்கள் எடுத்து பர்ப்பிள் (ஊதா கலர்) கேப் பெற்றிருக்கும் பேட்ஸ்மன் பெங்குளூரு அணியின் விராட் கோலி
10 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் (ஊதா கலர்) கேப் பெற்றிருக்கும் பௌலர் குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா.

Leave a comment
Upload