
1975முதல் 1989வரை 14 ஆண்டுகள் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இலக்கியசிந்தனைக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்வேன்.
இலக்கிய சிந்தனை என்ற அமைப்பை பாரதி, லட்சமணன், சிதம்பரம் மூவரும் சேர்ந்தே நடத்திவந்தனர்.
இந்த கூட்டம் எல்டாம்ஸ்ரோட்டில் உள்ள சர்ச்சில் நடக்கும்.
இந்த மாதிரி நடக்கும் மாத கூட்டத்தில் மாலன், பாலகுமாரன், சுப்பிரமணிய ராஜூ, என்.ஆர்.தாசன் நிறைய எழுத்தாளர் கூட்டம் வரும்.
இந்த அமைப்பு, கடந்து போன மாதத்தில் வந்த வார, மாத இதழ்களில் வெளியான சிறுகதைகள் எத்தனையோ அதில் ஒரு சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு அது பற்றிய விமர்சனம் செய்யப்படும்.
ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபத்தில் வருடாவருடம் இலக்கிய சிந்தனை அமைப்பின் கூட்டம் சித்திரை முதல் நாள், அதாவது, ஏப்ரல் மாதம் 13அல்லது 14ஆம் தேதி நடக்கும். அந்த நாளில் மாதா மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் 12ல் ஒரு சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தக வெளியீடு நடக்கும்
அந்த மாதிரியான ஒருநாள் பாலகுமாரனை சந்தித்தேன்.
மெர்க்குரிப் பூக்கள் மூலமாக நிறைய ரசிகர், ரசிகை கூட்டத்தை தன்பக்கம் இழுத்தார். இதனிடையில் எழுத்தை நம்பி Tafe கம்பெனி வேலையைவிட்டார்.
வீட்டு விலாசம் கேட்டபோது 32, 6 லாயிட்ஸ் ரோடு என்பதை ஹாஸ்யமாக 3×2=6 என்றார்.
அதன்பிறகு சாவி வார இதழில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்களை அனுப்ப சொன்னதில் நாங்கள் நடத்திய ஆலயமணி என்ற கையெழுத்து பத்திரிகை சாவி அலுவலகத்தில் கொடுத்தேன். அப்போது சாவி அலுவலகம் பழைய அருண் ஹோட்டல் கீழே இருந்தது.
நாங்கள் நடத்திய ஆலயமணி இதழுக்கு பரிசாக ரூ 500/- பரிசாகக் கிடைக்க நான்போய் பாலகுமாரன் கையால் வாங்கி வந்தேன்.
காலங்கள் மாற சிந்துபைரவி திரைப்படம் வசனகர்த்தாவாக மாறிய சூழலில் ஸ்டுடியோ ஒன்றில் பாலாவை சந்தித்தேன்.
பாலசந்தரிடம் கேட்டேன் இது பாலாவின் கதைதானே என்றதற்கு, ஆமாம் என்பதாக புன்னகை செய்தார். தொடர்ந்து நிறைய படங்கள் வசனம் எழுதிய நிலையில் பாக்யராஜூவின் இது நம்ம ஆளு படத்துக்கு இயக்கம் செய்தார்.
இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம்.
ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு சமயத்தில் வாங்கிய ஆட்டோகிராப் இதோ.


Leave a comment
Upload