தொடர்கள்
அரசியல்
இண்டி கூட்டணியில் நில நடுக்கம் : உத்தவ் சேனையில் மீண்டும் உடைப்பு - பால்கி

20260519225915248.jpg

போன வாரம் திரினாமூல் காங்கிரசின் கரைசல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். கூடவே இந்த நிலை 2022ல் உத்தவ் தாக்கரேவின் சிவசேனைக்கு ஏற்பட்ட நிலை என்று ஒப்பிட்டிருந்தேன்.

கடந்த வாரம் உத்தவ் சேனாவில் மீதி இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், இன்னும் கட்சியை விட்டு போகாமலிருக்கும் அங்கத்தினர்களின் அசைவுகள் உத்தவுக்கு அடையாளத்தையே உலுக்கி விட்டது எனலாம்.

இன்று நிஜ சிவ சேனையின் சஷ்டியப்த பூர்த்தி நாள்.

நடப்பதென்னவோ, நிறுவனர் பாலா சாஹேப் தாக்கரேவின் மகன் இன்று ஆட்சி, கட்சி பெயர், சின்னம் போன்றவற்றை இழ்ந்துவிட்டு நிற்கிறார். 2022ல் ஏற்பட்ட நில நடுக்கம் மீண்டும் ஏற்பட்டுவிட்டது. 9 லோக சபை எம் பிக்களில் ஆறு தனி கோஷ்டி அமைத்துவிட்டது. சூத்ரதாரி ஏக்னாத் ஷிண்டே தான்.

20260519230056350.jpg

இன்றைய கொண்டாட்ட நாள் ஏக்னாத் ஷிண்டே அமர்க்களத்துடனும் உத்தவ் தாக்கரே, என்னத்தை சொல்ல, தடுமாற்றத்துடனும் கொண்டாடுகின்றனர்.

ஆபரேஷன் டைகர் என்று இதற்குப் பெயராம். கட்சித் தாவல் தகுதியிழப்பு கவ்வாமலிருக்க மூன்றில் இரண்டு பங்கு லோக சபை எம்பிக்களைத் தூக்கியாச்சி. அடுத்து உத்தவிடம் உள்ள எம் எல் ஏக்கள் 20யாவது தூக்க முயற்சி நடக்கிறது.

துரோகிகள் மாறினார்கள்:ஐடியாலஜி மாறலை என்று உத்தவின் கட்சி பதாகைகள் வைத்தாலும், 2019ல் உத்தவ் நாற்காலிக்கு ஆசைப்பட்டு, தேர்தல் கூட்டணியை அம்போவெனக் கைவிட்டு தனது கட்சியின் ஹிந்துத்துவா கொள்கையைத் தூக்கியெறிந்துவிட்டு ஷரத் பவார், இந்திரா காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்டார்.

2022ல் ஏற்பட்டது, தீவிர ஹிந்துத்துவாவை வித்திட்ட பால சாஹேப் தாக்கரேவின் அடிமட்டத் தொண்டர்கள் கிளர்ந்து எழ அமைந்தது தான் ஏக்னாத் ஷிண்டேவின் அணி. அதுவே நிஜ சிவே சேனாவும் ஆனது. அவரும் ஆட்சியில் பங்கு கொண்டார். 2024லிலும் பாரத் ஜனதாவிடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சியில் அங்கம் வகிக்கிறார்.

இப்படி எழுதிக்கொண்டிருக்கையில் அகிலேஷ் யாதவின்

20260519230345395.jpg

சமாஜ்வாதி பார்டி, ஷரத் பவாரின்

20260519230550990.jpg

துண்டு நேஷனல் காங்கிரஸ் பார்டியிலும் உடைப்புகளுக்கு வாய்ப்புண்டாம் என்று வெளிப்படையான செய்திகளே வருகின்றன.

சுற்றி வளைத்துப் பார்த்தால் மத்தியில் தேசீய ஜனனாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு வலு வந்துவிடும் நிலை தீவிரமாகி வருகிறது எனலாம். இந்த ஆபரேஷங்கள் எல்லாம் வரும் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் ஸ்டெடி ஆகிவிடும் என்பது அரசியல் நோக்கர்களின் ஆரூடம்.

அடுத்த வாரம் இன்னொரு புது கோஷ்டியோடு சந்திக்க வேண்டி வரலாம்...