தொடர்கள்
நெட் ஜோக்ஸ்
வலைக்கள்ளன்

2020930235113959.jpeg

ஒரு மழை நாள் இரவு.....

ராமசேஷுவும் அவரது காரியதரிசியும் ஒரு நெடுந்தூர பயணம் செல்ல வேண்டியிருந்தது.

திரும்பும் வழியில் சரியான மழை.

வழியில் ஒரு சின்ன மோட்டல் இருந்தது. ராமசேஷு சொன்னார்... “வேறு வழியில்லை வண்டி வேறு சரியில்லை ஒரு நாள் இங்கு கொஞ்சம் தங்கியிருந்து விட்டு போகலாம்”

அவளும் ஒப்புக் கொண்டாள். தூங்கத் தயாரானார்கள்.

ராமசேஷு சொன்னார்... “இங்கு ஒரு படுக்கை தான் இருக்கிறது. நீ கட்டிலில் படுத்துக் கொள். நான் கீழே படுத்துக் கொள்கிறேன்.”

அவர் கீழே வண்டியில் இருந்த ஸ்லீப்பிங் பாக்கில் நுழைந்து படுக்கத் தயாரானார்.

காரியதரிசி சிணுங்கினாள்... “சார் எனக்கு ரொம்ப குளிரா இருக்கு..”

ஸ்லீப்பிங் பாக் ஜிப்பை திறந்து வெளியே வந்த ராமசேஷு, ஓரமாக இருந்த ஒரு கம்பளியை எடுத்து அவளுக்கு போர்த்தினார்.

மீண்டும் அவர் அந்த ஸ்லீப்பிங் பைக்குள் நுழைந்து ஜிப்பை போடும் போது அவள் மீண்டும் சிணுங்கினாள். “சாஆஆர் எனக்கு இன்னும் ரொம்ப குளிருது சார்..”

மீண்டும் ஜிப்பை திறந்து வெளியே வந்தார். இன்னொரு கம்பளியை எடுத்தார். அவளுக்கு போர்த்தி விட்டார்.

திரும்பவம் வந்து ஸ்லீப்பிங் பையில் நுழைந்து கொண்டு ஜிப்பை போடப் போனார்.

காரியதரிசி விடவில்லை. “சார்ர்ர்ர்ர்ர் எனக்கு இன்னமும் ரொம்ப ரொம்ப குளிருது சார்”

பொறுக்கவில்லை ராமசேஷுவுக்கு.

எழந்து வந்து கட்டிலருகே நின்றார். “ஏம்மா எனக்கு ஒரு ஐடியா இருக்கு சொல்லட்டா. இன்னிக்கு இங்கு மழைல தனியா ஒரு சின்ன ஹோட்டல்ல மாட்டிக்கிட்டோம். இங்க யாரும் இல்ல. சுத்தி என்ன நடக்குதுன்னே யாருக்கும் தெரியாது. இன்னிக்கு ஒரு நாள் நாம ரெண்டு பேரும் கணவன் மனைவியா நடிச்சா எப்படி இருக்கும்?”

அவள் சொன்னாள் “சூப்பர். எனக்கு ஓகே சார்..”

ராமசேஷு இறைந்தார்.. “அப்படின்னா சரி. போடி.. போய் உன் போர்வையை நீயே எடுத்துக்கோ. நான் என்ன நீ வெச்ச ஆளா??”


80 வயது 20 வயது மனைவி.....

2020930235235917.jpg

பாண்டிராஜ குமார ராஜுவுக்கு 80 வயது.

அவருடைய மாதாந்திர மருத்துவ செக்கப்புக்கு போனார்.

டாக்டர் கேட்டார். “என்ன ஜமீன். எப்படி இருக்கீங்க..?”

பா.கு.ரா சொன்னார்... “எனக்கு என்ன டாக்டர். முன்ன விட ரொம்ப சிறப்பா இருக்கேன். அது மட்டுமா.. எனக்கு இப்ப 20 வயசுல ஒரு பொண்டாட்டி இருக்கா. அதும் 3 மாச கர்ப்பமா இருக்கா. அப்படீன்னா பாத்துக்குங்களேன். நீங்க இதப் பத்தி என்ன நினைக்கறீங்க??” கண் சிமிட்டிய படி பெருமிதமாக கேட்டார் பா.கு.ரா.

டாக்டர் ஒரு நிமிடம் யோசித்தார். பின் தொடர்ந்தார்.

“எனக்கு உங்கள மாதிரியே ஒரு வயதான நண்பர் இருக்கார். அப்படியே உங்கள மாதிரி தான். ஆனா பெரிய வேட்டைக்காரர்.

ஒரு சீசனையும் விட மாட்டார். இப்படித்தான் பாருங்க ஒரு நாள் வேட்டைக்கு போகும் போது துப்பாக்கிய எடுத்துட்டு போறதுக்கு பதிலா அவரோட வாக்கிங் ஸ்டிக்கை தூக்கிட்டு போயிட்டாரு.

ஒரு ஏரிப் பக்கம் போகும் போது பாத்தா ஒரு பெரிய கரடி உக்காந்துட்டிருக்கு.

அப்பத்தான் அவருக்கு துப்பாக்கிய வீட்ல விட்டுட்டு வந்துட்டோம்னு உறைச்சது.

ஆனா பழக்க தோஷம் என்ன செய்ய... டக்குனு அவரோட வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி துப்பாக்கி சுடற மாதிரியே டிஷ்ஷூயூம், டிஷ்ஷூயூம் அப்படின்னாரு.

இரண்டே குண்டு தான். அவ்ளோ பெரிய கரடி தொபக்கடீர்னு விழுந்து உயிர விட்டுச்சு.

இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க? பாண்டிராஜ குமார ராஜு அவர்களே????

பா.கு.ரா. சொன்னார். “அட நீங்க வேற! என்னைக் கேட்டீங்கன்னா பின்னாடிலேர்ந்து எவனாவது சுட்டிருப்பான், அந்த கரடி செத்திருக்கும். வாக்கிங் ஸ்டிக் எங்கியாச்சும் சுடுமா?”

டாக்டர் சொன்னார். “ கரெக்டா சொன்னீங்க. என்னோட கணிப்பும் அது தான்.”