தொடர்கள்
அனுபவம்
நினைவலைகள் : பாரத ரத்னா எம் எஸ் சுப்பலக்ஷ்மி - அம்பத்தூர் ரங்கராஜன்

20260316221638579.jpg

2026031622141813.jpeg

{26/7/1996}

துர்கா லட்சுமி சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்கள் போல கர்நாடக இசை உலகில் திருமதி.எம்.எஸ்.அம்மா, திருமதி. எம்.எல்.வி மற்றும் திருமதி டி.கே.பட்டம்மாள் ஆகிய மூவரும் இசையுலகில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என அழைக்கப்பட்டனர்.

எம்.எஸ். அம்மா அவர்களை சந்தித்தது பற்றிய நினைவலைகள்.

அவர் ப்ளு கலர் பட்டுப்புடவை அதிகமாக வெளியில் கட்டிக்கொண்டு கச்சேரிக்குச் சென்ற தால் அந்த ப்ளு கலர் பட்டுப்புடவை புடவைக் கடைகளில் எம்.எஸ்.ப்ளூ என்ற பெயரில் விற்கப்பட்டன.

முதன் முதலாக திருமதி. எம்.எஸ். அம்மா அவர்களை மியூசிக் அகாதமி யில் நடைபெற்ற மார்கழி கச்சேரியில் அவருடைய இசை மழையில் நனைந்த பின் பேசினேன். நேரம் இன்மை காரணமாக அதிகம் பேச முடியாத நிலை. பிறகு கல்கி கார்டன் சென்று அவருடைய பிறந்த தினத்தன்று ஒரு கர்நாடக இசை சம்பந்தப்பட்ட புத்தகம் வழங்கி விட்டு வந்தேன்.

என் மகள் கர்நாடக சங்கீதம் கற்க ஆரம்பித்ததும், எனக்கு என் மகளை எம்.எஸ். அவர்களிடம் அழைத்துச் சென்று பாட வைக்க ஆசை, இந்த செய்தி சொன்னதும் முதலில் வருவதாக சொன்ன என் மகள் வர விருப்பப்படாததால், நான் மட்டும் சென்று பார்த்து பேசினேன். என் மகள் சங்கீதம் கற்பதை பற்றிச் சொன்னதும் வாழ்த்தினார்.

அதன் பிறகு நான் கிண்டியில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரிந்த காலத்தில் எம்.எஸ். அம்மா அவர்களுடைய பிறந்த தினத்திற்கு ஒரு படம் கொண்டு போய் கல்கி அலுவலகத்தில் கொடுத்தால், எம்.எஸ். அம்மாவிடம் போய் சேர்ந்து விடும் என எண்ணி நான்போய் கல்கி அலுவலகத்தில் கொடுத்த போது, முடிந்தால் நீங்களும் வாங்க என்றார்கள்,

சரி என்று காரில் கிளம்பி எம்.எஸ். அம்மா அவர்களுடைய வீட்டில் அவரைச்சநதித்து படம் கொடுத்த பிறகு அனைவருக்கும் நல்ல விருந்து சாப்பாடு கிடைத்தது. அத்துடன் அவருடைய ஆட்டோகிராப் வாங்கிய பிறகு கிளம்பி கிண்டி வந்து அலுவலகம் வந்து என் மனைவி கொடுத்த சாப்பாட்டை வேறு ஒருவருக்கு கொடுத்தேன். அத்துடன் அம்மா வீட்டில் இருந்து வந்த ஸ்வீட்,காரம் அலுவலக ஊழியர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி அடைந்தேன்.