தொடர்கள்
கவிதை
விகடகவிக்கு வயது நான்கு! வாழ்த்துவோம் வளர நன்கு!! - வேங்கடகிருஷ்ணன்

20201024233817904.jpg

மதன் சாரின் உள்ளத்தில் விழுந்த விதை
விகடகவியாகி முளைத்தெழுந்த கதை...

ராவ் சாரின் ரட்சிப்பில் ரகளையாய் வளர்ந்து
இணையாசிரியர் சுதாங்கன் இன்று விண்ணுலகிலிருந்து மகிழ்ந்து
சுபாவெங்கட்டின் சுறுசுறுப்பில் மிளிர்ந்து
பாலஸ்வாமிநாதன் பக்(கா) க பலமாய் ஒளிர்ந்து
மேப்ஸ்சும் தினகரனும் ஆணிவேராய் படர்ந்து
ஜெகஜால ஜாசன் தன் பேனா ஜாலம் புரிந்து
ஊட்டிமலை நாட்டி அப்புதாஸ் வழி மலர்ந்து
திரைகடலோடி திரவியம் தேடி ராம் அலைந்து
வழக்குகளை ஒதுக்கி ராஜேஷ் இதற்கென கரைந்து
அரசும், பிரபுவும் அட்டைப்படத்தினை அழகாய் வரைந்து
ஸ்ரீனிவாஸ் முயற்சியில், இணையத்தில் இணைந்து
ராக தேவதைகள் ஆலாபனையில் சந்திரசேகரன் கலந்து
அழகாய் பல விஷயம் ஆதி யோகி எழுத்தில் பிறந்து
வடவீர பொன்னையாவின் வார்த்தையிலே வளர்ந்து
முத்ரா பதித்த முத்திரையில் பொலிந்து
இலங்கை பிரதீப்பின் இன்பத் தமிழில் தவழ்ந்து
கன்மணி மைந்தனின் கற்பனையில் சிறந்து
மாலாஸ்ரீயின் மகத்தான எழுத்தில் மகிழ்ந்து
மதராசிவாலியின் மன வெழுச்சியில் மலர்ந்து
முஸல்மான் அமீனின் ஸல் அருளில் முகிழ்ந்து
அருந்தவச்செல்வி மரியாளின் மகனாய் வளர்ந்து
ஆருரனின் ஆன்மீக பிரவாகத்தில் கலந்து
தில்லைக்கரசியின் திறமையில் திகைந்து
பரத், மாலினியின் பாசத்தில் கிளர்ந்து
சிவபெருமாள் கிருபையில் ஒளிர்ந்து
வேங்கடகிருஷ்ணனும் இவ் வேள்வியில் சேர்ந்து
வளர்ந்திட்ட குழந்தை “விகடகவிக்கு” வயது நாலு இன்று
வாழ்த்திடுவீர் மேலும் வளர்ந்து நூறு வயது காண, நன்று.!