தொடர்கள்
சோகம்
"மழை, வெள்ளம், நிலச்சரிவு, குளிர்... நடுங்கும் நீலகிரி" - ஸ்வேதா அப்புதாஸ்

நவம்பர் மாதம் வந்துவிட்டாலே... நீலகிரிவாசிகளுக்கு நடுக்கம் தான். கடந்த காலங்களில் மாவட்டம் மிக பெரிய அழிவுகளை சந்தித்துள்ளது. மறக்க முடியாத வெள்ளங்கள், நிலச்சரிவுகள்... நீலகிரியின் நினைவில் என்றும்...20211018141027681.jpg
பழங்கால நீலகிரி, கட்டாயமாக பயங்கர மழையை சந்தித்திருக்கக்கூடும்... அதை சந்தித்தவர்கள் யாரும் இன்று இல்லை...

தற்போது நினைவுக்கு வருவது என்னமோ 1978 ஆம் வருடம் ஏற்பட்ட மழை... வெள்ளம், நிலச்சரிவுகள் தான்... தென் மேற்கு பருவமழையின் தாக்கம், ஜூன் மாதம் வெளுத்து வாங்கின... அதுவும் இரவில் கொட்டிய மழையால், ஊட்டி, குன்னூர் நகரங்கள் வெள்ளத்தால் மிதந்தன. அதிகாலையே அழுகை ஓலங்கள் கேட்க துவங்கின. ஏகப்பட்ட பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி இறந்து போனதை எவரும் மறக்கவில்லை. ஊட்டி, குன்னூர் நகரங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியது. ஊட்டியில் உள்ள சாந்தி விஜய் பள்ளி வெள்ளத்தில் மூழ்கியது. இரவு நேரம் என்பதால் பள்ளி குழந்தைகள் தப்பித்தன.

அந்தப் பள்ளி ஆசிரியைகள் வெள்ளத்தில் சிக்கின தங்களின் கல்வி சான்றிதழ்களை சேற்றில் இறங்கி தேடிய சம்பவமும் நடந்தது.
இப்படி பல சோகங்கள் ...

20211018141240181.jpg
அதற்குப் பின் மழை என்பது தொடர் கதையாக நடந்து வருகிறது... 1983....
மழை, வெள்ளம், நிலச்சரிவுகள் மிக மோசமாக இருந்தன. 1993 ஆம் வருடம் வட கிழக்கு பருவ மழையின் தாக்கம்... மிக மோசமான விளைவுகளை நீலகிரியில் ஏற்படுத்தியது.

20211018141722103.jpg.

குன்னூருக்கு கீழ் மரபாலத்தில் நவம்பர் 11 ஆம் தேதி மாலை மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு செல்ல... இரண்டு பேருந்துகள் பள்ளத்தில் மாயமாக மறைந்தன. அதிலிருந்த பயணிகளின் கதி, இது நாள் வரை மர்மம் தான்.

20211018142347891.jpg ...


இந்தப் பகுதியில் இருந்த தர்கா ஒன்று காணாமல் போனது. அந்தப் பகுதியில் இருந்த பலர் உயிரை இழந்து உடல்கள் கூட கிடைக்கவிலை என்ற பரிதாபம்.
பின்னர் கெத்தை என்ற இடத்தில், கிளவுட் பர்ஸ்ட் ஏற்பட்டு பாறைகள் உருண்டு. மின்சார குடியிருப்பு முழுவதும் தரைமட்டமாகிப்போக, பல உயிர்கள் மடிந்தன...

20211018142552797.jpg
பத்து வருடத்திற்கு ஒரு முறை நீலகிரியில் மழை, வெள்ளம், நிலச்சரிவு தொடர்கதையாகி போன ஒன்று. தற்போது வருடத்திற்கு இரு முறை மழை வெளுத்து வாங்குகிறது...

20211018150332574.jpg
நீலகிரி எம்.பி. ராசா, நேரடியாக இந்த மழை, வெள்ளம், நிலச்சரிவை பார்வையிட்டு, துரிதமான நிவாரண யுக்திகளை மேற்கொண்டார். இந்த வெள்ள நிலச்சரிவுகளில் சிக்கி பலர் இறந்துள்ளது வேதனையான ஒன்று... மேக வெடிப்பு என்னும் கிளவுட் பர்ஸ்ட் தான் இந்த நிலச்சரிவுகளுக்கு காரணம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள், புவியிலாளர்கள் ...

20211018142716313.jpg
கடந்த 2018 ஆம் ஆண்டு தென் மேற்கு பருவ மழையால், அவலாஞ்சி என்ற இடத்தில் மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, மின்சார குடியிருப்புவாசிகள் சிக்கி தவிக்க... அவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டார் கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா. அவரே வெள்ளம் ஏற்பட்ட பாலடா பகுதியில் ஆய்வு நடத்திய போது, வெள்ளத்தில் சிக்கி உயிர் பிழைத்தார்...

20211018142755395.jpg
தொடர்ந்து வருடா வருடம் மழையின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த வருடமும் மழை கொட்டியது... கொரோனா லாக் டவுன் காரணமாக மக்கள் பாதிப்பை அவ்வளவாக உணரவில்லை.

20211018143005522.jpg
கடந்த மே மாதத்தில் இருந்தே நீலகிரியில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. நீலகிரிவாசிகள் சற்று வெறுத்தே போய்விட்டனர். கடந்த வாரம் சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் சென்னையே மிதந்தது... அதே சமயம் நீலகிரியில் அவ்வளவாக மழை இல்லை. அப்படியும் பலத்த மழை இருக்கலாம் என்று பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதே சமயம் காலநிலை இயல்பு நிலையில் இருந்தது...

20211018143349679.jpg

கடந்த 11 ஆம் தேதி...
குன்னூர் வண்டிசோலை நகராட்சி நடுநிலை பள்ளி இடைநிலை ஆசிரியை மகேஸ்வரி பள்ளி விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில், மரம் அவர் மேல் விழுந்து பரிதாபமாக இறந்து போய்விட்டார்.... அதனால் தான் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

2021101814351514.jpg
தினமும் ஊட்டியில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. அதிக குளிர் வாட்டிக்கொண்டிருக்கிறது.... புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு துவங்கின பெரு மழை... ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என்று வெளுத்து வாங்கியது. மாலை ஏழு மணிவரை தொடர் மழையால், ஊட்டியில் காந்தல் பகுதியில் பல வீடுகளில் மழை நேர் புகுந்து மிகவும் பாதிக்கப்பட்டது....

பள்ளிகள் விட்டு குழந்தைகள் வீடு செல்லுவதற்குள் முழுவதுமாக நனைந்து தொப்பலாகி விட்டனர்... புத்தகங்கள் எல்லாம் முழுமையாக நனைந்து விட்டது. பஸ் நிலையம், ரயில் நிலையம், போலீஸ் நிலையம், கமெர்ஷியல் சாலை என்று அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறியது. கார்கள், ஸ்கூட்டர் என்று எல்லாம் வெள்ளத்தில் சிக்கி கொண்டது...

2021101814411114.jpg

ஏரி சாலையில், ஒரு தனியார் மதில் சுவர் முழுமையாயக இடிந்து விழுந்து ஏடிஎம், வாட்டர் பூத்து முழுமையாக நசுங்கி போனது. அடுத்த நாள்... வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவார்கள் என்று காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே... ஏற்கனவே புத்தகம் எல்லாம் நனைந்து இருந்ததால், பள்ளிக்கு பல மாணவர்கள் ஆப்சென்ட். மீண்டும் மாலை மூன்று மணிக்கு மழை துவங்க, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த உத்தரவும் வராததால் பயத்தில் மூன்று முப்பதுக்கே சில பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன... அதே சமயம் நகரின் மைய பகுதியில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி, மாணவிகளை வீட்டிற்கு அனுப்ப தயங்கியது. பாவம் மாணவிகள்... மழையில் நனைந்தபடியே சென்றனர். பின்னர் மாவட்ட நிர்வாகம் விடுமுறை வெள்ளிகிழமை மட்டும்
அறிவிக்க... இந்தப் பள்ளி வெள்ள பயத்தில் சனிக்கிழமையும் விடுமுறை விட்டது தான் ஆச்சிரியமாக உள்ளது என்கின்றனர் ஊட்டி வாசிகள்...

மழை என்றால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது பெரிய ஆபத்தை தவிர்க்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்...

ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ், நகராட்சி ஆணையர் சரஸ்வதி, காந்தல் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க... “நீங்கள் எங்களை பார்க்க வந்தது சரி.. அதே சமயம், உணவுக்கு எதாவது ஏற்பாடு செய்யலாமே... வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், பட்டினியில் தவிக்கிறோம்” என்று புலம்பி தள்ளினார்கள்.

டிசம்பர் மாதம் வரை தொடரும் மழையால், நீலகிரி தாக்கு பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது... தொடரும் மழையால் ஒரு பக்கம் வெள்ளம் புகும் அபாயம் மற்றும் குளிர் நீலகிரியை வாட்டி கொண்டிருக்கிறது. அதே சமயம்... சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் எப்பொழுது விழும் என்று பயமுறுத்தி கொண்டிருக்கிறது...

இந்த நிலையில் சுற்றுலாக்கள், சற்று ஊட்டி பக்கம் வராதீர்கள் என்று தான் அட்வைஸ் செய்ய முடியும் ...