தொடர்கள்
ஆன்மீகம்
சுகப் பிரசவமே சுகம்... - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20211019230644758.png

சென்னை பெருநகர வெள்ளம் ஒரு வார காலம் மக்களை வாட்டிக் கொண்டிருந்த வேலையில், கடமை தவறாமல் சென்னை - எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களின் கடமையாற்றி கொண்டிருந்தனர். ஆம். சுமார் 8 மருத்துவர்களும், 22 செவிலியர்களும் அன்றைய காலகட்டத்தில் 68 பெண்களுக்கு பிரசவம் பார்த்தனர். தங்களின் பொறுப்பு உணர்ந்து தங்களின் குடும்பங்களும், வீடுகளும் தண்ணீரில் தத்தளித்தாலும், இந்த மாபெரும் சேவையை செய்தவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா சுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்தினர்.

சென்னையில் பொதுவாகவே பொதுமக்கள் விரும்புவது இந்த மருத்துவமனை தான். 60% லிருந்து 70% பிரசவங்கள் இயற்கை முறையிலே நடக்கின்றன. மற்ற தனியார் மருத்துவமனைகளில் 80% முதல் 100 சதவிகிதம் சிசேரியன் முறையை பின்பற்றும் சூழலில், எந்த கைமாறும் எதிர்பாராமல் மக்கள் நலன் கருதி பெரும்பாலும் சாதாரண பிரசவமே இங்கு அறிவுறுத்தப்படுகிறது.

அந்த வாழ்த்து நிகழ்வில் பேசிய அமைச்சர், காசுக்கு ஆசைப்பட்டு... சில, ஆம்.. சில மருத்துவமனைகள் பெரும்பாலும் செசெரின் முறையையே பரிந்துரைக்கப்படுவது வேதனைக்குரியது என்றார். காப்பீடு நிறுவனங்களும் பிரசவத்திரு சுமார் 1,50,000 வரை கொடுப்பதால், அந்தப் பணத்தை வசூலிக்கவே சில தனியார் நிறுவனங்கள் முயல்கின்றனர்.

ஒரு சில மக்களும் இயற்கை பிரசவத்தை எதிர்த்து, தடாகம் பார்த்து, தங்களுக்கு பிடித்த நட்சத்திரம், ராசி, நேரம் எல்லாம் கணக்கிட்டு மருத்துவரிடம் நாள் கேட்காமல், ஜோசியரிடம் நாள் கேட்பதும் நடக்கத்தான் செய்கிறது.

பொதுவாக சிசேரியன் செய்ய மூன்று காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது...

குழந்தை இயற்கைக்கு மாறான வளர்ச்சி அல்லது வளர்ச்சி இல்லாமை, குழந்தையின் எடை இயற்கையை விட அதிகம் அல்லது சுகப்பிரசவத்திற்கு ஏதுவாக இல்லாத சூழ்நிலை. தாய் மற்றும் சேயின் உயிருக்கு ஆபத்தான நிலைமை.

இது போன்ற எந்த ஒரு அவசர நிலைமை தவிர, நாம் சுகப்பிரசவத்தை தவிர்க்க கூடாது.

தன்னிடம் காப்பீடு உள்ளது, பணம் உள்ளது... எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம், நமக்கு பிடித்த ராசியான நாள், நேரத்தில் பிரசவம் செய்யலாம், பிரசவ வலிக்கு அஞ்சி, சுக பிரசவத்தை தவிர்த்து சுகமாக பிரசவம் செய்யலாம் என என்னும் அனைத்தும் தவறு.

உலக சுகாதார நிறுவனம் WHO அறிவுறுத்தலின்படி எந்த ஒரு நாட்டிலும் சிசேரியன் பிரசவங்கள் 10 சதவிகதம் முதல் 15 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், நம் இந்திய நாடு அவற்றையெல்லாம் தாண்டி விட்டது.

இத்தகைய சூழ்நிலையில் அமைச்சர் அவர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள் ஏற்படுத்துவதை மருத்துவர்கள் பெரும்பாலும் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருப்பது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. இது குறித்து ஒரு வழிகாட்டி முறைகளையும் ஏற்படுத்தினால், இன்னும் நல்லது. இதனை முற்றிலும் தவிர்க்க முடியாது. அதே சமயம்... இதனை அதிகமாக வழக்கத்தில் கொண்டு வருவதும் தவறு.

இனி வரும் காலங்களில்... தற்போது, நாம் ஆர்கானிக் உணவுகளை உட்கொள்ள தொடங்கியது போல் சுகப்ரஸவத்திற்கான எண்ணங்களும் மக்களிடையே அதிகம் ஏற்படும் என்று நம்புவோம். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய அமைச்சருக்கு பாராட்டுக்கள்.

இன்றைய நாளில் 5000-க்கும் மேற்பட்ட பிரசவங்களை பார்த்த பெண் செவிலியர், மகாராஷ்டிரா மாநிலத்தில் தனக்கான பிரசவத்தின் போது உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி வருத்தத்தையும், அச்சுறுத்தலையும் அளிக்கிறது. தன் பிரசவத்தின் முதல் நாள் வரை பிரசவம் பார்த்த பெண், தன் பிரசவத்தின் போது மரணத்திருப்பது துரதுஷ்டவசமானது.

எப்படியிருந்தாலும் சுகப்பிரசவத்தை அதிகம் முயற்சிப்போம். சீரிய வாழ்விற்கு வழிவகுப்போம்.