தொடர்கள்
பொது
திமுக மீது விவசாயிகள் அதிருப்தி...- ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

2021102008005685.jpg

வடகிழக்கு பருவமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் விலை பயிர்கள் நீரில் மூழ்கின. விளைநிலங்களில் இறங்கி மீன் பிடிக்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது. இதைத் தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் சேத மதிப்பீடு கணக்கிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

20211020080248160.jpg

முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் கொண்ட குழுவை அனுப்பி, வெள்ள சேதங்களை பார்வையிட்ட அறிக்கை தரச் சொன்னார். முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது. அதில் அதிகாரிகள் தரப்பு பெரிதாக பாதிப்பு எல்லாம் இல்லை, எனவே நிவாரணத் தொகையாக ஹெக்டருக்கு 15 ஆயிரம் ரூபாய் தந்தால் போதும் என்று தெரிவித்தார்கள். ஆனால், இதை அமைச்சர்கள் ஏற்கவில்லை. அதிமுக ஆட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ஹெக்டருக்கு 20 ஆயிரம் ரூபாய் தந்தார்கள். எனவே, அதைவிட குறைத்துத் தந்தால் நாம் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்கள். அப்போதும் அதிகாரிகள், நிதி நிலைமையை சுட்டிக்காட்டி ஆட்சேபனை செய்தார்கள். குறிப்பாக தலைமைச் செயலாளர் இதை ஏற்கவில்லை. ஆனாலும், முதல்வர், அமைச்சர்கள் சொன்னதை ஏற்று 20 ஆயிரம் நிவாரணம் என்று முடிவு செய்து அறிவித்தார். ஆனால், இது விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி அவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

எதிர்க்கட்சிகளும் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நிவாரண தொகையை ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அதன்படி பார்த்தால் ஹெக்டருக்கு 71400 ரூபாய் வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சுட்டிக் காட்டுகிறார். எதிர்க் கட்சியாக இருந்தபோது விவசாயிகளின் நண்பன் நான் என்றார். இதுதான் நண்பனுக்கு செய்யும் வேலையா என்ற விமர்சனமும் தற்போது எழுந்திருக்கிறது. நிவாரணத் தொகை போதாது என்று பாரதிய ஜனதா, அதிமுக, திமுகவின் தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி உள்பட எல்லோரும் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இந்த இழப்பீடு விவசாயிகளுக்கு உண்மையான நிவாரணம் இல்லை என்பதுதான் விவசாயிகள் கருத்தும் கூட.